International May Day 2025 Online Rally

Socialism against fascism & war

சனிக்கிழமை, மே 3
அமெரிக்கா: மாலை 3 மணி
12 வது சர்வதேச மே தின இணையவழி பேரணியில் பங்கேற்கவும்
இப்போது பதிவு செய்யுங்கள்

மே 3, சனிக்கிழமையன்று, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் உலக சோசலிச வலைத் தளமும் பாசிசம், சர்வாதிகாரம் மற்றும் போருக்கு எதிரான போராட்டத்தில் உலகெங்கிலுமான தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தி, எமது வருடாந்திர சர்வதேச இணையவழி மே தினப் பேரணியை நடத்தவுள்ளன.

அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் பதவிக்கு வந்திருப்பது முதலாளித்துவத்தின் உலகளாவிய நெருக்கடியில் ஒரு திருப்புமுனையைக் குறிக்கிறது. அவரது நிர்வாகம் ஜனநாயக உரிமைகளை இல்லாதொழித்து, புலம்பெயர்ந்தோர் மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி, ஒரு வர்த்தகப் போரைத் தொடங்கி, உலகம் முழுவதும் இராணுவ மோதல்களுக்குத் தயாராகி வருகிறது. காஸா மீதான இனப்படுகொலையை எதிர்த்த மாணவர் ஆர்வலர்கள் மீது கடுமையான ஒடுக்குமுறை மேற்கொள்ளப்பட்டதில், மஹ்மூத் கலீல், மொமோடோ தால் மற்றும் ருமேசா ஓஸ்டுர்க் உட்பட நூற்றுக்கணக்கானோர் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கள் துணிச்சலான போராட்டங்களுக்காக கைதுகள், நாடுகடத்தல் அச்சுறுத்தல்கள் மற்றும் விசா இரத்து செய்யப்படுவதை எதிர்கொண்டுள்ளனர்.

எலோன் மஸ்க் போன்ற பில்லியனர்களின் ஆதரவுடன், அதிர்ச்சியூட்டும் சமத்துவமின்மையையும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பையும் இயக்கும் தன்னலக்குழு ஆட்சியின் உருவகமாக ட்ரம்ப் இருந்து வருகிறார். ட்ரம்பின் கொள்கைகள், ஜேர்மனியின் AfD இலிருந்து இத்தாலியின் மெலோனி மற்றும் ஆர்ஜென்டினாவின் மிலே வரை, தன்னலக்குழுவின் சேவையில் முதலாளித்துவ அரசாங்கங்கள் சர்வாதிகாரத்தை நோக்கிய உலகளாவிய மாற்றத்தை பிரதிபலிக்கின்றன. உலகெங்கிலும் உள்ள ஆளும் வர்க்கம் பொருளாதார நெருக்கடிக்கும், சமூக எதிர்ப்பிற்கும் இராணுவவாதம் மற்றும் அடக்குமுறையைக் கொண்டு பதிலளித்து வருகிறது.

இந்த அபிவிருத்திகள், போர், சமத்துவமின்மை மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிராக அதிகரித்தளவில் அணிதிரண்டு வருகின்ற தொழிலாள வர்க்கத்தின் ஒரு ஐக்கியப்பட்ட சர்வதேச இயக்கத்திற்கான அவசர அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தில், சர்வதேச அளவில் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்கான ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை இந்த ஆண்டு மே தினக் கூட்டம் முன்வைக்கும். அது, ஏகாதிபத்திய வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும், சமத்துவம் மற்றும் மனிதத் தேவையின் அடிப்படையில் ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கும் ஒரு புரட்சிகர முன்னோக்கை கோடிட்டுக் காட்டும்.

இந்தப் பேரணி wsws.org/mayday இல் நேரடியாக ஒளிபரப்பப்படும். இந்தப் பக்கத்தில் உள்ள படிவத்தைப் பயன்படுத்தி நீங்கள் பதிவு செய்து கொள்ளலாம். பாசிசம் மற்றும் போருக்கு எதிரான ஒரு சக்திவாய்ந்த இயக்கத்தைக் கட்டியெழுப்பவும், பேரணியை ஒழுங்கமைக்கவும், இந்த நிகழ்வை முடிந்தவரை பரவலாக ஊக்குவிக்கவும் எங்களுக்கு நன்கொடை வழங்குங்கள்!

Saturday, May 3
3:00 PM
US Eastern Time

São Paulo: Saturday, May 3, 4:00 PM

London: Saturday, May 3, 8:00 PM

Berlin: Saturday, May 3, 9:00 PM

Istanbul: Saturday, May 3, 10:00 PM

Colombo: Sunday, May 4, 12:30 AM

Beijing: Sunday, May 4, 3:00 AM

Sydney: Sunday, May 4, 5:00 AM

Auckland: Sunday, May 4, 7:00 AM

View all Time zones
அத்தியாவசிய வாசிப்பு மற்றும் பார்வை