இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி/IYSSE பகிரங்கக் கூட்டங்கள்: ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போரை எதிர்த்திடு!

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பும் 'ஈரானுக்கு அமெரிக்க-இஸ்ரேல் போரை எதிர்த்திடு!' என்ற தலைப்பில் இரண்டு பகிரங்கக் கூட்டங்களை நடத்துகின்றன.

முதலாவது ஜூலை 6 ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்கு சூம் வழியாக இடம்பெறும் நிகழ்நிலை நிகழ்வு ஆகும்; இரண்டாவது ஜூலை 8 செவ்வாய்கிழமை மாலை 3 மணிக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறும் நேரடி பொதுக் கூட்டம் ஆகும்.

தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் அக்கறையுள்ள நபர்கள் அனைவரையும் இந்த கூட்டங்களில் கலந்து கொண்டு ஏகாதிபத்தியப் போருக்கு எதிரான போராட்டத்தில் இணையுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

ஈரானால் ஆத்திரமூட்டப்படாமலேயே அதன் மீது அமெரிக்கா இராணுவத் தாக்குதலை நடத்தியதன் பின்னர் நடத்தப்படுகின்ற சோ.ச.க./IYSSE கூட்டங்கள், முழு தொழிலாள வர்க்கத்திற்கும் மிகவும் முக்கியமானதாகும். பல நாட்களாக இஸ்ரேல் தலைமையில் தாக்குதல்கள் நடத்தப்பட்ட பிறகு, ஈரானிய அணுசக்தி நிலையங்களுக்கு எதிராக மிகவும் சக்திவாய்ந்த பதுங்கு குழிகளைத் தகர்க்கும் குண்டுகளைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

காசாவில் இஸ்ரேலின் அதிகரித்து வரும் இனப்படுகொலையின் ஒரு பகுதியாக இருக்கும் வாஷிங்டனின் ஆக்கிரமிப்பு நடவடிக்கை, முழு மத்திய கிழக்கையும் யுத்தத்துக்குள் மூழ்கடிக்கும் அச்சுறுத்தலையும், உலகையே தீக்கிரையாக்கும் அபாயத்தையும் ஏற்படுத்துகிறது.

திங்கள் இரவு, இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர்நிறுத்தம் குறித்த ட்ரம்பின் அறிவிப்பு, மோதல்களுக்கு உண்மையான முடிவு காண்பதற்கான எந்த உத்தரவாதத்தையும் அளிக்கவில்லை. வாஷிங்டனும் டெல் அவிவ்வும் பேச்சுவார்த்தைகளுக்கான வெள்ளை மாளிகையின் வாக்குறுதிகளை, அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புக்கு ஒரு மூடுதிரையாக மீண்டும் மீண்டும் பயன்படுத்தி வருகின்றன.

மிகவும் அடிப்படையில், ஈரான் மீதான ட்ரம்பின் நேரடித் தாக்குதலும், தெஹ்ரானில் ஆட்சி மாற்றத்திற்காக அமெரிக்கா மேற்கொள்ளும் இடைவிடாத முயற்சிகளும், ரஷ்யா மற்றும் சீனாவுடனான ஒரு பரந்த மோதலுக்கான தயாரிப்பில், புவிசார் மற்றும் அரசியல் ரீதியாக முக்கியமான இந்த பிராந்தியத்தின் மீது, அமெரிக்க ஏகாதிபத்திய ஆதிக்கத்தை பலப்படுத்தும் பரந்த நோக்கத்துடன் பிணைக்கப்பட்டுள்ளன.

ஈரான் மீதான ஏகாதிபத்தியப் போருக்கு அமெரிக்கா உட்பட சர்வதேச அளவில் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க எதிர்ப்பு வளர்ந்து வருகிறது.

இலங்கையில் ஜனாதிபதி திசாநாயக்கவின் மக்கள் விடுதலை முன்னணி/தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கமானது ஈரானுக்கு எதிரான போர் சம்பந்தமாக பாசாங்குத்தனத்துடனும் இரட்டைப் பேச்சுடனும் பதிலளித்துள்ளது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு இலங்கை தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் வெகுஜன எதிர்ப்பை நன்கு அறிந்திருந்த போதிலும், ட்ரம்ப் நிர்வாகத்தை அந்நியப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்த இலங்கை வெளியுறவு அமைச்சு, வாஷிங்டனின் குண்டுவெடிப்புக்குப் பிறகு ஒரு வெற்று அறிக்கையை வெளியிட்டது. 'மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலைமையை தணிக்க அனைத்து தரப்பினரும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என்று அது கோழைத்தனமாக அழைப்பு விடுத்தது.

இலங்கை ஆளும் உயரடுக்கின் பிரதான கவலை என்னவென்றால், மத்திய கிழக்கில் நடக்கும் போரானது 2022 இல் இலங்கையின் பொருளாதார சரிவின் போது காணப்பட்ட பொருளாதார ஸ்திரமின்மைக்கு வழிவகுத்து, மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் வீதிக்கு இறங்கும் ஒரு பாரிய அரசாங்க எதிர்ப்பு எழுச்சியைத் தூண்டி விடும் என்பதே ஆகும்.

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியானது, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அதன் சகோதரக் கட்சிகளுடன் சேர்ந்து, ஏகாதிபத்தியப் போரை தீவிரப்படுத்துவதற்கு எதிராக, வெகுஜன எதிர்ப்பிற்கு அழைப்பு விடுக்கிறது.

இன்றைய அத்தியாவசிய பணி, ஏகாதிபத்தியப் போருக்கும் அதை கட்டவிழ்த்துவிடும் முதலாளித்துவ அமைப்புக்கும் முடிவுகட்ட, சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்துடன் அரசியல் ரீதியாக ஆயுதபாணியாக்குவதாகும். அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய சக்திகள் மனிதகுலத்தை எவ்வாறு பேரழிவு தரும் உலகளாவிய மோதலுக்கு இட்டுச் செல்கின்றன என்பதையும், அதைத் தடுக்க தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்ளுக்குத் தேவையான வேலைத் திட்டம் என்ன என்பதையும் பற்றி எங்கள் கூட்டங்களில் கலந்துரையாடப்படும்.

இந்த முக்கியமான அரசியல் பிரச்சினைகளைப் பற்றி கலந்துரையாட ஜூலை 6 மற்றும் 8 ஆம் திகதிகளில் எங்களுடன் சேருங்கள்.

* ஜூலை 6 ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்கு—நிகழ்நிலை கூட்டம்

தயவுசெய்து இங்கே பதிவு செய்யவும்: https://us06web.zoom.us/meeting/register/vgd37er4T7WeEj_VFXQBvw

* செவ்வாய்கிழமை ஜூலை 8 மாலை 3 மணிக்கு—வீரசிங்கம் மண்டபம் (2வது தளம்), யாழ்ப்பாணம்

Loading