முன்னோக்கு

ட்ரூடோவின் அரசியல் தலைமையை கைப்பற்றி கனடாவில் அதிதீவிர வலதுசாரி ஆட்சிக்கு வழி வகுப்பதாக ட்ரம்ப் கூறுகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

கடந்த திங்களன்று, கனடாவின் லிபரல் கட்சி தனது வாரிசை தேர்வு செய்தவுடன் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) அறிவித்தார்.

பிரதமர் ட்ரூடோவின் இராஜினாமா, உலகெங்கிலும் முதலாளித்துவ அரசியலின் வலது நோக்கிய வன்முறையான பாய்ச்சலின் பாகமாகும். போட்டி ஏகாதிபத்திய ஆளும் வர்க்கங்கள் சமகால முதலாளித்துவ சமூகத்தின் தன்னலக்குழுக்களின் தன்மைக்கேற்பவும் மற்றும் உலகளாவிய போரின் மூலமாக உலகை மறுபங்கீடு செய்வதற்கான அவற்றின் உந்துதலுக்கும் ஏற்ப அரசியலை மறுகட்டமைத்து வருகின்றன.

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 24 மார்ச் 2022 வியாழக்கிழமை, பிரஸ்ஸல்ஸில் உள்ள நேட்டோ தலைமையகத்தில் நடந்த ஊடக சந்திப்பின் போது பேசுகிறார். [AP Photo/Markus Schreiber]

ஒரு பாசிஸ்டும் தோல்வியுற்ற ஜனவரி 6, 2021 ஆட்சிக்கவிழ்ப்பு சதிகாரருமான டொனால்ட் ட்ரம்ப், இந்த இரண்டு நிகழ்ச்சிப்போக்கின் உருவகமாக இருப்பதோடு, அதை துரிதப்படுத்தவும் சேவையாற்றி வருகிறார்.

ட்ரூடோவின் இராஜினாமா ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் இப்போது ஆஸ்திரியாவில் அரசாங்கங்களின் வீழ்ச்சியை அடுத்து வருகிறது. ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோவினால் தூண்டிவிடப்பட்ட போரின் சுமையை ஐரோப்பா கூடுதலாக ஏற்க வேண்டுமென்ற ட்ரம்பின் கோரிக்கைக்கு செவிசாய்க்க விரைந்து செல்வதன் மூலமாகவும், தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதலைப் பாரியளவில் தீவிரப்படுத்துவதற்கு அழுத்தமளிப்பதன் மூலமாகவும் ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கம் ட்ரம்ப் தேர்வானதற்கு விடையிறுத்துள்ளது.

ட்ரம்பின் வர்த்தகப் போர் அச்சுறுத்தல்கள், ட்ரூடோவை “கவர்னர்” (அமெரிக்க அரசின் தலைமை நிர்வாகப் பதவி) என்று மீண்டும் மீண்டும் கேலி செய்தல் மற்றும் கனடா 51வது மாநிலமாக வேண்டும் என்ற அவரது தொடர்ச்சியான பரிந்துரைகள் என்பன, கனேடிய ஏகாதிபத்தியத்தை பாரியளவில் சீர்குலைத்து இப்போது ட்ரூடோவின் அரசியல் தலைவிதியை முடித்துள்ளது.

கனடா மற்றும் மெக்சிகோ ஆகியவை புலம்பெயர்ந்தவர்கள் மீதான ட்ரம்பினது போரிலும் மற்றும் வட அமெரிக்காவின் வெளி மற்றும் உள் எல்லைகளை இராணுவமயமாக்கும் திட்டங்களிலும் தங்களை இன்னும் முழுமையாக ஒருங்கிணைத்துக் கொள்வதற்கு, மார்-அ-லாகோவுக்கு விரைந்து செல்வதன் மூலமாக, கனடா மற்றும் மெக்சிகோ மீது 25 சதவீத சுங்கவரி விதிப்பதற்கான ட்ரம்பின் அச்சுறுத்தலுக்கு ட்ரூடோ “முதல் நாளிலிருந்தே” விடையிறுத்தார்.

எனினும், பாசிச சர்வாதிகாரியாக ட்ரம்ப் அதிகாரத்துக்கு வருவதுக்கு முன்பே, முதுகெலும்பற்று மண்டியிட்ட ட்ரூடோ, அவரை சமாதானப்படுத்தத் தவறிவிட்டார். ட்ரூடோவின் அரசியல் தலைமையை ஆர்வத்துடன் கோரிய ட்ரம்ப், கனடாவை இணைப்பதற்கான அவரது நடைமுறையளவிலான அழைப்பை மீண்டும் வலியுறுத்தினார். அனைத்திற்கும் மேலாக, இதை அவர் ரஷ்யா மற்றும் சீனாவுடனான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலோபாய மோதல் மற்றும் வட அமெரிக்க கோட்டைக்கான அவரது முனைவு ஆகியவற்றின் உள்ளடக்கத்தில் சித்தரித்தார்.

ட்ரம்ப்பினுடைய ட்ரூத் மீடியா சமூக ஊடக தளத்தில், “கனடாவில் உள்ள பலர்”, அது “51வது மாநிலமாக விரும்புவதாக அறிவித்தனர். கனடாவில் தொடர்ந்து இருக்கின்ற பாரிய வர்த்தகப் பற்றாக்குறைகள் மற்றும் மானியங்களை அமெரிக்கா இனி ஆதரிக்க முடியாது. இதை அறிந்த ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை ராஜினாமா செய்தார்.

“கனடா அமெரிக்காவுடன் இணைந்தால், எந்த கட்டணமும் இருக்காது, வரிகள் குறையும், மேலும் ரஷ்ய மற்றும் சீன கப்பல்களின் அச்சுறுத்தலில் இருந்து அவை முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும். ஒன்றாக இருந்தால், அது எவ்வளவு பெரிய தேசமாக இருக்கும்!!!

ஒரு அதிதீவிர வலதுசாரி பழமைவாத அரசாங்கத்திற்கு வழி வகுத்தல்

ட்ரூடோவின் வெளியேற்றத்தின் உடனடி விளைவு என்னவெனில், ஒரு முன்கூட்டிய தேர்தலுக்கான பாதையை தெளிவுபடுத்துகிறது என்பதும், ஒட்டாவாவில் அதிவலது வாய்வீச்சாளர் பியர் போலிவ்ரே தலைமையிலான ட்ரம்ப் போன்ற பழமைவாத அரசாங்கம் அதிகாரத்திற்கு வருவதும் ஆகும். இந்த அரசாங்கம், தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக எதேச்சதிகார வழிமுறைகளைப் பயன்படுத்தவும் பாசிசவாத, நாடாளுமன்றத்திற்கு அப்பாற்பட்ட சக்திகளை அணிதிரட்டவும் தயாராக இருக்கும்.

அடுத்த தேர்தலில் தனது கட்சியை வழிநடத்துவேன் என்று ட்ரூடோ பலமுறை சூளுரைத்திருந்தாலும், அவர் பிரதமராக பதவியேற்ற பத்தாவது ஆண்டின் தொடக்கத்தில் ராஜினாமா செய்தது யாருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை.

கனடாவின் பெருநிறுவன உயரடுக்கின் தீர்க்கமான பிரிவுகளின் ஆதரவை ட்ரூடோ இழந்துவிட்டார். இந்த அடுக்குகள், வெளிநாடுகளில் தங்கள் சூறையாடும் நலன்களை இன்னும் ஆக்கிரோஷமாக பின்தொடரவும், உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்தின் மீது தாக்குதல் நடத்தவும், அதிக தீவிரத்துடன் அழுத்தம் கொடுத்து வருகின்றன. அண்மைய மாதங்களில் தாராளவாதிகளின் பாராளுமன்ற குழுவினரிடையே அவருக்கு இருந்த ஆதரவானது, தொடர்ச்சியான இடைத்தேர்தல் தோல்விகள் மற்றும் வரவிருக்கும் வரலாற்று வரலாற்றுத் தேர்தல் அழிவை முன்னறிவித்ததன் மூலமாக சிதைந்து போயுள்ளது.

கனடாவின் துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் கடந்த மாதம் அரசாங்கத்தை விட்டு வெளியேறிய பிறகு ட்ரூடோவின் நிலைப்பாடு ஏற்றுக்கொள்ள முடியாததாக மாறியது. அதே நாளில், ஃப்ரீலேண்ட் அதன் வீழ்ச்சியடைந்து கொண்டிருந்த பொருளாதார புதுப்பிப்பை வழங்க திட்டமிட்டிருந்தார்.

ஃப்ரீலேண்ட்டின் ராஜினாமா ட்ரூடோவுக்கு அதிகபட்ச சேதத்தை ஏற்படுத்தியது என்பதை உறுதிப்படுத்துவதற்கு, அவர் பிரதம மந்திரிக்கு எழுதிய ஒரு பகிரங்க கடிதத்தின் மூலமாக அதை அறிவித்தார். அதில் ட்ரம்பின் அமெரிக்கா முதல் என்ற நிகழ்ச்சி நிரலின் சவாலை எதிர்கொள்ள கனேடிய ஏகாதிபத்தியத்தை முறையாக கட்டியெழுப்ப தவறியதற்காக ட்ரூடோவை கண்டித்தார்.

கனடாவின் நிதிய தன்னலக்குழு, மூன்று முனைகளில் (ரஷ்யா, சீனா, ஈரான் மற்றும் மத்திய கிழக்கில் அதன் நட்பு நாடுகளுக்கு எதிராக) இடம்பெற்றுவரும் உலகப் போரில், இன்னும் பெரிய பங்கை எடுத்துக் கொள்வதன் மூலம், வாஷிங்டனில் கனடாவின் ஆதரவைப் பாதுகாக்கும் ஒரு அரசாங்கத்திற்கு ஆதரவாக உள்ளதுடன், ட்ரூடோவின் கீழ் ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட பாரிய இராணுவ செலவினங்களுக்கு மேலும் நூற்றுக்கணக்கான பில்லியன்களை சேர்க்கிறது. மேலும், கனேடிய முதலாளித்துவத்தின் “போட்டித்தன்மையை” உறுதிப்படுத்தும் வகையில், ட்ரம்பின் வரி வெட்டுக்களுக்கு இணையாக ஒட்டாவா இருக்க வேண்டுமென்றும் மற்றும் சமூக செலவினங்களை இல்லாதொழிக்கவும் அவர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சி நிரலை நிறைவேற்ற அதிவலது வாய்வீச்சாளர் பியர் போலிவ்ரே தயார்படுத்தப்பட்டுள்ளார். உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியான பழமைவாதிகளின் தலைவரான அவர், முதலில் கனடாவின் நவ-பழமைவாத பிரதம மந்திரி ஸ்டீபன் ஹார்ப்பரின் தாக்குதல் நாயாக அரசியலில் முக்கியத்துவம் பெற்றார். பின்னர் ஆளும் வர்க்கத்தின் கணிசமான பிரிவுகளின் ஆதரவுடன் 2022 இன் தொடக்கத்தில் ஒரு மாதத்திற்கும் மேலாக ஒட்டாவா நகரை அச்சுறுத்தும் வகையில் ஆக்கிரமித்திருந்த, பாசிசத்தால் தூண்டிவிடப்பட்ட “சுதந்திர” வாகன அணிவகுப்பின் மிகவும் கடுமையான செய்தித் தொடர்பாளராக சேவையாற்றினார்.

கனடாவின் தாராளவாதிகள், தங்கள் பங்கிற்கு, ஆளும் வர்க்கத்தின் திட்டநிரலைத் திணிப்பதற்கான சிறந்த கருவி தாங்கள்தான் என்பதை எடுத்துக்காட்ட முண்டியடித்துக் கொண்டிருக்கிறார்கள். பெருநிறுவன ஊடகங்களின் தகவல்படி, தாராளவாதிகளின் தலைவரான ட்ரூடோவை பிரதியீடு செய்ய கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட் மற்றும் மார்க் கார்னே முன்னணியில் உள்ளனர். கடந்த மாதம் அவர் இராஜினாமா செய்யும் வரையில் ட்ரூடோ அரசாங்கத்தில் பிரதான ரஷ்ய-விரோத போர் கழுகாக இருந்து வருகின்ற ஃப்ரீலாண்ட், கனேடிய ஏகாதிபத்தியத்திற்கும் உக்ரேனிய பாசிசத்திற்கும் இடையிலான தசாப்த கால கூட்டணியின் உருவகமாக திகழ்கிறார். முதலில் கனடா வங்கியின் தலைவராகவும், பின்னர் இங்கிலாந்து வங்கியின் தலைவராகவும் இருந்த கார்னே, தொழிலாள வர்க்கத்தின் மீதான சிக்கன நடவடிக்கைகளுக்கும், சாதனையளவிலான குறைந்த வட்டி விகிதங்கள் மற்றும் நிதிய உயரடுக்கிற்கு ஏற்ப பணப்புழக்கத்தை அதிகரிக்கும் “மலிவான பணத்தை” நடைமுறைப்படுத்தவதற்கும் ஏற்புடையவராக உள்ளார்.

ஆளும் வர்க்கம் ஒரு வர்க்கப் போர் அரசாங்கத்தை உருவாக்குவதற்கான சுதந்திரமான கையைக் கொண்டுள்ளது. உண்மையான ஊதியங்களின் வீழ்ச்சி, பொதுச் சேவைகளின் சரிவு மற்றும் தொற்றுநோய் போன்று பரவும் வீடற்றவர்களின் நிலை ஆகியவற்றின் மீது பாரியளவிலான தொழிலாள வர்க்கத்தின் கோபத்திற்கு, அதிவலது வாய்வீச்சாளர் பியர் போலிவ்ரே சமூக அழைப்பை விடுத்துள்ளார். இந்த நிலைக்கு, தொழிற்சங்கங்கள், சமூக ஜனநாயக புதிய ஜனநாயகக் கட்சி (NDP) மற்றும் அவர்களின் போலி-இடது தொங்கு தசைகளால் வர்க்கப் போராட்டம் நசுக்கப்படுவதே முற்றிலும் காரணமாகும்.

தொழிற்சங்க ஆதரவு பெற்ற NDP கடந்த ஐந்து ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் சிறுபான்மை தாராளவாத அரசாங்கத்திற்கு முட்டுக் கொடுத்து வந்துள்ளது. மேலும், அந்த நேரத்தில் ஒரு முறையான “நம்பிக்கை மற்றும் விநியோக ஒப்பந்தம்” மூலம் கூட்டணி அரசாங்கத்தை சிறிது காலம் தாங்கிப் பிடித்தது.

2021 இலையுதிர்காலத்தில் இருந்து, தொழிலாள வர்க்கத்தின் அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய வேலைநிறுத்த அலையால் கனடா மூழ்கியுள்ளது. ஆனால், தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் போராட்டங்களை பிளவுபடுத்தவும், முதலாளிகளுக்கு ஆதரவான கூட்டு பேரம் பேசும் முறைக்குள் அவர்களை அடைத்துவைக்கவும், விற்றுத்தள்ளும் ஒப்பந்தங்களை திணிக்கவும், வலிமையாகவும் முக்கியமாகவும் பாடுபட்டு வருகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, ட்ரூடோ அரசாங்கத்திற்கு எதிராக ஒரு தொழிலாள வர்க்க அரசியல் சவாலைத் தடுத்து, வேலைநிறுத்தங்களை முறியடித்து, மேலும் வலது பக்கம் நோக்கி தொழிற்சங்கங்கள் சென்றுள்ளன.

டிசம்பர் 16 அன்று, எதிர்ப்பு போராட்டத்திற்கு தொழிலாளர்களின் பாரிய ஆதரவு இருந்த நிலையிலும், தபால் தொழிலாளர் சங்கம் (CUPW) 55,000 கனடா தபால் ஊழியர்களுக்கு ஒருதலைப்பட்சமாக, அப்பட்டமான சட்டவிரோதமான அரசாங்க வேலைநிறுத்த உடைப்பு உத்தரவுக்கு தலைவணங்குமாறு உத்தரவிட்டது. இது, ஃப்ரீலான்டின் இராஜினாமாவால் அரசாங்கம் பொறிவின் விளிம்பிற்கு கொண்டு வரப்பட்ட நிலையிலும் கூட CUPW அவ்வாறு செய்தது.

CUPW தொழிற்சங்கத்தின் சரணாகதி, தபால் தொழிலாளர்களின் போராட்டத்தை குறுக்கு வழியில் நிறுத்தியது மட்டுமல்லாமல், ட்ரூடோவை பதவியில் இருந்து அகற்றக்கூடிய மற்றும் பொலிவ்ரே மற்றும் பழமைவாதிகளை அதிகாரத்திற்கு கொண்டு வருவதற்கான ஆளும் வர்க்கத்தின் திட்டங்களைத் தடம்புரளச் செய்வதற்கான சிறந்த நிலைமைகளை உருவாக்கக்கூடிய, தொழிலாள வர்க்கத்தின் ஒரு பரந்த அணிதிரட்டலுக்கான வினையூக்கியாக, இந்தப் போராட்டம் மாறாமல் இருப்பதை அது உறுதிப்படுத்தியது.

ஹிட்லருக்கு ஆஸ்திரியா எப்படி இருந்ததோ அதுதான் ட்ரம்பிற்கு கனடாவா?

ஒட்டாவாவில் குறைந்தபட்சம் குறுகிய காலத்திற்காவது அதிவலது வாய்வீச்சாளர் பியர் போலிவ்ரே வடிவில் ஒரு அதிவலது ஆவி அதிகாரத்திற்கு வருவதை ட்ரம்ப் வரவேற்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

எவ்வாறிருப்பினும், வாஷிங்டனால் அதன் “நெருங்கிய கூட்டாளி” என்று நீண்டகாலமாக கூறப்படும் ஒரு நாட்டை அமெரிக்கா உள்வாங்க வேண்டும் என்ற ட்ரம்பினது ஆத்திரமூட்டும் கூற்றுகளை ஒரு பேச்சுவார்த்தை தந்திரமாகவோ அல்லது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கத்திற்கான பசியின் வெளிப்பாடாகவோ கூட நிராகரிக்கக்கூடாது.

கனடா அமெரிக்காவின் 51 வது மாநிலமாக மாறுவதற்கான ட்ரம்பின் அழைப்புகள், டென்மார்க் கிரீன்லாந்தை வாஷிங்டனுக்கு விற்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், பனாமா கால்வாயைக் கைப்பற்றுவதற்கான அச்சுறுத்தலுடன் ஒலிக்கப்படுகின்றன.

கனேடிய ஆளும் வர்க்கம், பொலிவ்ரேவை அரவணைத்ததில் வெளிப்பட்டதைப் போல, பெரிதும் ட்ரம்பின் திட்டநிரலைப் பகிர்ந்து கொள்கிறது. இது அமெரிக்க பாணியிலான ஒரு சமூகக் கொள்கைக்கு ஆதரவு கொடுக்கிறது. அதாவது, பொது சுகாதாரம், நலன்புரி அரசில் எஞ்சியிருப்பவற்றை அழித்தல், பெருவணிகம் மற்றும் செல்வந்தர்களுக்கு இன்னும் கூடுதலான பாரிய வரி விலக்குகள், மூலதனத்தின் மீதான அனைத்து சுற்றுச்சூழல் மற்றும் பிற நெறிமுறை கட்டுப்பாடுகளையும் அகற்றுதலாகும். முக்கால் நூற்றாண்டுக்கும் மேலாக தனது சொந்த சூறையாடும் நலன்களை முன்னெடுப்பதற்கும், உலகளாவிய கொள்ளையில் பங்கெடுப்பதற்கும் கட்டமைப்பை வழங்கி வந்துள்ள அமெரிக்க ஏகாதிபத்திய மேலாதிக்கத்தை மீட்டெடுக்கவும் அது விரும்புகிறது.

நிச்சயமாக இந்தக் கட்டத்தில், கனேடிய முதலாளித்துவ வர்க்கத்தின் மேலாதிக்க கன்னை, அமெரிக்க ஏகாதிபத்திய தலைமையிலான வட அமெரிக்காவின் கோட்டையில் தனது இடத்தைப் பேச்சுவார்த்தை நடத்துவதில் அதிக ஆற்றலை வழங்குவதற்காக, உலகின் இரண்டாவது பெரிய நாட்டின் மீதும் அதன் பரந்த வள வளத்தின் மீதும் அதன் கூட்டாட்சி அரசையும் ஆதிக்கத்தையும் தக்க வைத்துக் கொள்ள விரும்புகிறது.

ஆனால் ட்ரம்பின் வரிவிதிப்பு போர் அச்சுறுத்தல் மற்றும் பிற கோரிக்கைகள் என்பன, கனேடிய முதலாளித்துவத்திற்குள் ஆழமாக வேரூன்றிய பிராந்திய மோதல்களை அதிகப்படுத்துகின்றன. அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தும் கண்டப் பொருளாதாரத்தில் வெவ்வேறு பாத்திரங்களை வகிக்கும் பிராந்தியங்களை அடிப்படையாகக் கொண்ட ஆளும் வர்க்கத்தின் வெவ்வேறு பிரிவுகள் தங்கள் நலன்களைப் பாதுகாக்க போட்டியிடுகின்றன.

ட்ரூடோவும், ஒன்ராறியோ மாநிலத்தின் முதல்வர் டக் ஃபோர்ட்டும் அமெரிக்காவுக்கான கனேடிய எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் யுரேனிய ஏற்றுமதிகள் மீது, ஏற்றுமதி வரி விதிப்பதன் மூலமாக ட்ரம்பின் வரிவிதிப்பு அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் சாத்தியக்கூறை எழுப்பிய போது, இந்த ஆதாரவளங்களை மையமாகக் கொண்ட மாநிலங்களான ஆல்பர்ட்டா மற்றும் சஸ்காட்செவனின் தீவிர வலதுசாரி முதல்வர்கள், அத்தகைய நடவடிக்கை “தேசிய ஐக்கிய” நெருக்கடியைத் தூண்டும் என்று உடனடியாக எச்சரித்தனர். அமெரிக்காவின் தினசரி எண்ணெய் நுகர்வில் 20 சதவீதத்திற்கும் அதிகமாக ஏற்றுமதி செய்யும் ஆல்பெர்ட்டா மாநிலத்தின் முதல்வர் டேனியல் ஸ்மித், இப்போது ட்ரம்பின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

ட்ரம்ப், அவரது வழக்கப்படி, இந்த பிளவுகளை சுரண்ட முயற்சிப்பார்.

இவை அனைத்தையும் கருத்தில் கொண்டும், வரவிருக்கும் பாசிச ஜனாதிபதியான ட்ரம்ப், கனடாவை அமெரிக்காவுடன் “இணைக்க வேண்டும்” என்று அடிக்கடி அழைப்பு விடுப்பதைக் கருத்தில் கொண்டும், தர்க்கரீதியாக ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது:

ஹிட்லருக்கு ஆஸ்திரியா இருந்ததைப் போலவே ட்ரம்பிற்கு கனடாவா? மார்ச் 1938 இல், ஆஸ்திரியாவை இணைத்தல் (Anschluss) என்ற பெயரிலும், இரண்டாம் உலகப் போருக்கான தனது தயாரிப்புகளின் ஒரு பகுதியாகவும், ஹிட்லர் ஆஸ்திரியாவை ஆக்கிரமித்து, அந்த நாட்டின் தீவிர வலதுசாரி அரசாங்கத்தை தூக்கியெறிந்து, அதை ஜேர்மன் மூன்றாம் பேரரசின் ஒருங்கிணைந்த பகுதியாக மாற்றினார்.

வரவிருக்கும் மாதங்களில் என்ன நடந்தாலும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கனேடிய இளைய பங்காளிகளை ட்ரம்ப் கையாளும் விதமானது, முன்னெப்போதிலும் பார்க்க, அதிகமாக ஒருங்கிணைக்கப்பட்ட உலகப் பொருளாதாரத்திற்கும் உலகளாவிய மேலாதிக்கத்திற்காக போட்டியிடும் தேசிய-அரசுகளாக அவை பிளவுபட்டிருப்பதற்கும் இடையிலான முரண்பாட்டைத் தீர்க்க மிகவும் சக்திவாய்ந்த ஏகாதிபத்திய அரசுகள் முனைகின்ற நிலையில், உலக வரைபடம் மீண்டும் வரையப்படும் என்பதையே அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

கேள்வி என்னவென்றால், மனிதகுலத்தை படுகுழிக்குள் இழுத்துச் செல்லும் ஒரு மூன்றாம் ஏகாதிபத்திய உலகப் போரின் மூலமாக, உலகம் ஐக்கியப்படுத்தப்படுமா அல்லது முதலாளித்துவ தன்னலக்குழுக்களின் மேலாதிக்கம், சுரண்டல் மற்றும் போருக்கு முற்றுப்புள்ளி வைக்க தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட நடவடிக்கையால் கீழிருந்து ஒன்றிணைக்கப்படுமா என்பதுதான் கேள்வியாகும்.

ஆளும் வர்க்கத்தின் சூறையாடும் திட்டநிரல், அதன் வணிக மற்றும் சுட்டுத்தள்ளும் போர்களுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதில், தொழிற்சங்கங்களும் நடைமுறையிலுள்ள இடது கட்சிகளும் பயனற்றவையாக இருப்பதோடு, மிக மோசமாக உள்ளன. அவர்கள் தத்தமது முதலாளித்துவ வர்க்கத்துக்கு ஆள் சேர்க்கும் சார்ஜெண்டுகளாக மட்டுமே சேவை செய்து வருகிறார்கள்.

கனேடிய-அமெரிக்க எல்லையின் இருபுறமும் உள்ள தொழிற்சங்கங்களும் மற்றும் புதிய ஜனநாயகக் கட்சியும் அமெரிக்க மற்றும் கனேடிய ஏகாதிபத்தியத்தின் போர் திட்டநிரலை ஆதரிக்கின்ற அதேவேளையில், கனேடிய, அமெரிக்க மற்றும் மெக்சிக்கன் தொழிலாளர்களை திட்டமிட்டு பிளவுபடுத்த வேலை செய்து வருகின்றன.

கொடி அசைக்கும் கனேடிய தொழிற்சங்க அதிகாரத்துவம், ட்ரம்பின் சுங்கவரிகளுக்கு எதிராகவும், எஃகு மற்றும் அலுமினியத்தின் கனடா ஏற்றுமதிகளும் மற்றும் பூமியிலுள்ள அதன் அரிய கனிம இருப்புக்களும் அமெரிக்க போர் உற்பத்திக்கு இன்றியமையாதவை என்ற அடிப்படையில், வட அமெரிக்காவின் கோட்டையில் கனேடிய ஏகாதிபத்தியம் ஒரு சலுகை பெற்ற நிலையைப் பெற வேண்டும் என்றும் வாதிடுகிறது.

கனடாவின் தாராளவாத அரசாங்கம் மற்றும் அதிவலது பியர் போலிவ்ரே, கியூபெக்கின் லெகால்ட்டில் இருந்து ஆல்பேர்ட்டாவின் ஸ்மித் வரையிலான முதலாளித்துவ வர்க்கத்தின் போட்டியிடும் பிராந்திய கன்னைகளின் பல்வேறு வலதுசாரி பிரதிநிதிகள் உட்பட, கனேடிய முதலாளித்துவ வர்க்கத்திற்கு எதிராக வர்க்க போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும். இதன் மூலமாக, உலக சோசலிச அரசுகளின் கூட்டமைப்பின் பாகமாக, ஒரு சோசலிச வட அமெரிக்காவிற்கான போராட்டத்தில், அமெரிக்கா மற்றும் மெக்சிகோ தொழிலாளர்களுடன் ஐக்கியத்தை உருவாக்குவதன் மூலமாக மட்டுமே கனடாவில் உள்ள தொழிலாளர்கள் வர்க்க போராட்டத்தை தீவிரப்படுத்த முடியும்.

Loading