சோசலிச சமத்துவக் சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) எட்டாவது தேசிய காங்கிரஸுக்கு வழங்கப்பட்ட அறிக்கை

சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியை கட்டமைப்பதற்கான சோசலிச சமத்துவக் கட்சியின் போராட்டம், 2022-2024

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

[Photo: WSWS]

சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) எட்டாவது காங்கிரஸிற்கு ரொம் ஹால் (Tom Hall) வழங்கிய அறிக்கையை இங்கே வெளியிடுகிறோம். காங்கிரஸ் ஆகஸ்ட் 4 முதல் ஆகஸ்ட் 9, 2024 வரை நடைபெற்றது. இது2024 அமெரிக்கத் தேர்தல்களும் சோசலிச சமத்துவக் கட்சியின் பணிகளும்மற்றும்போக்டன் சிரோட்டியுக்கை விடுதலை செய்!ஆகிய இரண்டு தீர்மானங்களை இந்தக் காங்கிரஸ் ஒருமனதாக ஏற்றுக்கொண்டது

இன்றைய எனது உரையின் கருப்பொருளானது கடந்த இரண்டு ஆண்டுகளாக வர்க்கப் போராட்டத்தில் கட்சியின் தலையீடுகள் பற்றிய ஆய்வாக இருக்கும். எனது அறிக்கையானது நமது தலையீட்டின் முக்கிய கூறுகளை மிக முக்கியமான சில போராட்டங்களின் மறுஆய்வு செய்வதன் மூலம் நோக்க முடியும் - இருப்பினும் வாகனத் தொழிற்துறையில் கட்சியின் தலையீடு பற்றி தோழர் ஜெர்ரி வைட் (Jerry White) தனி அறிக்கையில் அதை வழங்குவார்.

கடந்த நான்கு ஆண்டுகளில், குறிப்பாக 2022 கட்சிக் காங்கிரஸுக்குப் பிந்தைய காலகட்டத்தில், தொழிலாள வர்க்கத்தின் வரலாற்றில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் தலையீடு மிகப்பெரிய வளர்ச்சியைக் கொடுத்துள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியானது [International Workers Alliance of Rank-and-File Committees (IWA-RFC)] இதன் மைய உறுப்பாக இருக்கிறது. இது அமெரிக்காவில் மட்டுமின்றி, அனைத்துலகக் குழு (International Committee) செயல்படும் ஒவ்வொரு நாட்டிலும் பெரும் போராட்டங்களின் மத்தியில் சாமானியர் குழுக்களை அமைத்துடன், அதன் இருப்பு மிகப்பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது.

ஆனால் ஆளும் வர்க்கம் வளர்ந்து வரும் புரட்சியின் அச்சுறுத்தலுக்கு கைகட்டி வேடிக்கை பார்க்கவில்லை. அமெரிக்க முதலாளித்துவம் உலகளாவிய அளவில் ஒரு ஒருங்கிணைந்த போராட்டத்தை நடத்துகிறது. இதில், அதன் மூலோபாய எதிரிகளான ரஷ்யா, சீனா மற்றும் ஈரானை வெற்றிகொள்ளும் நோக்கமும், அமெரிக்காவிலும் உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர் வர்க்கத்தின் மீதான தாக்குதல்களும் பிரிக்க முடியாத வகையில் இணைந்துள்ளன.

பைடென் நிர்வாகத்தின் தொழிலாளர் கொள்கையை, இந்தச் சூழலில் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். நாம் பலமுறை விளக்கியுள்ளபடி, அதிகாரத்துவம், அரசு மற்றும் பெருநிறுவன நிர்வாகத்திற்கு இடையே ஏற்கனவே நீண்டகாலமாக இருந்த உறவுகளைப் பயன்படுத்தி, வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் உள்ள அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எதிரிகளுக்கு எதிரான போருக்காக ஒரு பெருநிறுவனக் (கார்ப்பரேட்) கூட்டணியை உருவாக்க பைடென் முயன்று வருகிறார். ஜூலை மாதம் AFL-CIO (The American Federation of Labor and Congress of Industrial Organizations) தொழிற்சங்கத்தை தனது “உள்நாட்டு நேட்டோ” என்று குறிப்பிட்டதன் மூலம் பைடென் இதை மிகச் சிறப்பாகச் சுருக்கிக் கூறினார்.

[Photo: WSWS]

முதலாளித்துவ வர்க்கத்தின் கொடூரத்தைக் குறைத்து மதிப்பிடுவது, குறிப்பாக அதன் ஆட்சி மிகுந்த அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் நேரங்களில் ஒரு தவறாகும். ஆனால் தற்போதைய சூழ்நிலையை வாஷிங்டனின் சதித்திட்டங்களின் விளைவு மட்டுமே என்று கருதுவதும், ஆளும் வர்க்கத்தைப் ஒரு ஒற்றுமையான, முழு அதிகாரம் கொண்ட குழுவாக பார்ப்பதும் மிகப்பெரிய தவறாகும். ஆளும் வர்க்கத்தை நெருக்கடிக்கு தள்ளிய அதே காரணிகள், தொழிலாளர் வர்க்கத்தை சோசலிசப் புரட்சியை நோக்கி நகர்த்துகின்றன. 

சென்றமுறை நடந்த நமது கட்சிக் காங்கிரஸில், தோழர் எரிக் லண்டன் (Eric London), தொழிலாள வர்க்கத்தில் ஒரு வெகுஜனப் புரட்சிகர சோசலிச இயக்கத்தின் எழுச்சியை சாத்தியமாக்கும் உலகச் சூழ்நிலையின் பல்வேறு குணாதிசயங்களை மதிப்பாய்வு செய்து ஒரு விரிவான அறிக்கையை வழங்கியிருந்தார். நேரத்தின் நலன் கருதி அவரது உரையிலிருந்து நான் மேற்கோள் காட்டவில்லை, ஆனால் நான்கு அடிப்படைக் கூறுகளை தோழர் லண்டன் அதில் குறிப்பிட்டிருந்தார். அவைகளாவன:

  • முதலாவதாக, தொழிலாளர் வர்க்கத்தின் அளவிலும் சர்வதேச தொடர்புகளிலும் ஏற்பட்ட மிகப்பெரிய வளர்ச்சி, இது வரலாற்றில் முதல் முறையாக உலக மக்கள்தொகையில் முழுமையான பெரும்பான்மையாக மாறியுள்ளது.
  • இரண்டாவதாக, அதிகாரப்பூர்வ விரோதம் மற்றும் அடக்குமுறையை எதிர்கொண்டதால் அரசியல்ரீதியாக தீவிரமயமாக்கப்பட்ட தொழிலாளர்களிடையே சமூக சமத்துவமின்மைக்கு எதிரான எதிர்ப்பு வளர்ந்து வருகிறது. இது ‘ஒட்டுமொத்த எதிர்ப்பு இயக்கங்கள்’ என அழைக்கப்படும் போராட்டங்களுக்கு வழிவகுத்துள்ளது.
  • மூன்றாவதாக, தொழிற்சங்க இயந்திரத்தின் சமூகச் செல்வாக்கு குறைவதும், அவற்றின் கட்டுப்பாட்டிற்கு வெளியே இணையவழிப் பயன்பாடு மற்றும் தகவல் தொடர்பு ஊடகங்கள் எழுச்சி பெறுவதும் ஆகும்.
  • நான்காவதாக, மிகப்பெருமளவு அரசாங்கக் கடன் குவிப்பால் உந்தப்படுகிற உலகளாவிய சிக்கன நடவடிக்கைக்கு தவிர்க்க முடியாத எதிர்ப்புநிலை, பெருந்தொற்று நோயின் தொடக்கத்தில் பிணை எடுப்புகளுக்குப் பிறகு அதன் உச்சநிலையை அடைந்திருக்கிறது.

2022 முதல் 2024 வரை வர்க்கப் போராட்டம் எவ்வாறு விரிவடையும் என்பதை நாம் எப்படி முன்கூட்டியே கணித்தோம்? சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி (IWA-RFC) குறித்த எமது கட்சிக் காங்கிரஸ் 27வது, 9வது மற்றும் 10வது தீர்மானத்தில் இதனை இவ்வாறு நாம் விளக்கியுள்ளோம்:

27. உலகளாவிய தொழிலாளர் வர்க்கத்தின் வளர்ந்து வரும் இயக்கத்தில், அமெரிக்க தொழிலாளர் வர்க்கத்தின் புரட்சிகர அரசியல் விழிப்புணர்விற்கான சூழ்நிலைகள் தயார் நிலையில் உள்ளன. அமெரிக்க சமூகத்தின் நெருக்கடிக்கான தீர்வு, பழைய இரு கட்சி முறையின் மூலம் கிடைக்காது; மாறாக, அதற்கு எதிராக ஒரு பெரும் தொழிலாளர் வெகுஜன இயக்கத்தை உருவாக்குவதன் மூலம் மட்டுமே கிடைக்கும். இந்த இயக்கமானது அதன் புரட்சிகர ஆற்றலை அடைவதா என்பதை சோசலிச சமத்துவக் கட்சியின் (SEP) செயல்பாடுகள் தீர்மானிக்கும்.

இதில் சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியின் (IWA-RFC) குறிப்பிட்ட பங்கு பற்றி, நாங்கள் பின்வருமாறு அதில் விளக்கினோம்:

9. IWA-RFC என்பது புரட்சிகரக் கட்சிக்கு மாற்றீடு அல்ல, அதேபோல் இது வெறும் பாரம்பரிய தொழிற்சங்கப் போராட்டங்களுக்கான கருவியும் அல்ல. இதன் நோக்கம், பெருநிறுவன-அரசு கூட்டணியான AFL-CIO தொழிற்சங்கக் கருவிகளின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்ட ஒரு இயக்கத்தை உருவாக்குவதற்கு உதவுவதும், அமெரிக்க தொழிலாளர் வர்க்கத்தின் மாபெரும் சமூக சக்தியை வெளிக்கொணர்வதும் ஆகும்.

10. … AFL-CIO க்கு எதிரான ஒரு கிளர்ச்சி இயக்கத்தின் வளர்ச்சியானது, வரலாற்று மற்றும் அரசியல் கேள்விகளை அவசியம் எழுப்பும். சோசலிச சமத்துவக் கட்சியானது (SEP) சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் வரலாற்று அனுபவங்களில் இருந்து பெற்ற படிப்பினைகளை இந்தப் போராட்டங்களுக்குள் கொண்டு செல்ல வேண்டும். இதன் மூலம் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் மற்றும் கலாச்சார மட்டத்தை ஒட்டுமொத்தமாக உயர்த்த வேண்டும். ஒரு சோசலிச நனவின் வளர்ச்சிக்கான நிலைமைகள் உருவாக்கப்பட வேண்டும்.

கடந்த இரண்டு ஆண்டுகள், இந்த முன்னோக்கை முழுமையாக உறுதிப்படுத்தியுள்ளன. ஆனால் இந்த ‘உறுதிப்படுத்தல்’ வெறும் வெளிப்புற உலகின் செயலற்ற சிந்தனையின் விளைவு அல்ல; அதன் சொந்த நிலைமைகளில் ‘சரியானது’ என்பதை நிரூபித்துள்ளது.

தற்போதுள்ள சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் செயல்பட வேண்டும் என்று கட்சி எடுத்த முடிவின் மூலம் நிகழ்வுகளின் போக்கை மாற்றப் போராடி எங்கள் மதிப்பீட்டின் சரியான தன்மையை நிரூபிக்க முடிந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில் கட்சி சாதித்த எதுவும் ‘விதிவசத்தால்’ நடந்தது அல்ல. ஒரு கட்டத்தில், கட்சி இருந்த சாத்தியக்கூறுகளை அடையாளம் கண்டு, கட்சியின் காரியாளர்கள் மூலம் பதிலிறுப்பை ஏற்பாடு செய்து, அதற்காக கடின உழைப்பை மேற்கொண்டது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் நாம் செய்த பணியில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று இருக்கின்றதென்றால், அது புறநிலை சூழ்நிலையின் முக்கிய பகுதியாக கட்சியின் நனவான காரணியின் தீர்மானகரமான பங்கு ஆகும்.

இரயில்வே ஊழியர்களின் போராட்டம்

[Photo: WSWS]

கடந்த இரண்டு ஆண்டுகளில் கட்சியின் மிக முக்கியமான போராட்டங்களில் ஒன்று, 120,000 இரயில்வே தொழிலாளர்களின் போராட்டத்தில் தலையிட்டதாகும்.

ஆரம்பத்திலிருந்தே இரயில்வே போராட்டமானது அரசாங்கத்திற்கு எதிரான போராட்டமாக இருந்தது. இரயில் தொழிலாளர்கள் இரயில்வே தொழிலாளர் சட்டத்தின் கீழ் (Railway Labor Act) உள்ளனர், இதன் நோக்கம் இரயில் மற்றும் விமானத் துறைகளில் வேலைநிறுத்தங்களைத் தடை செய்வதாகும். 2022 ஆண்டு ஜனவரியில், புதிய Hi Viz கொள்கைக்கு எதிராக வேலைநிறுத்தம் செய்ய BNSF (BNSF என்பது பர்லிங்டன் வடக்கு சாண்டா ஃபே ரயில்வேயைக் குறிக்கிறது, இது வட அமெரிக்காவின் மிகப்பெரிய சரக்கு இரயில் பாதை நெட்வொர்க்குகளில் ஒன்றாகும்) தொழிலாளர்களுக்கு தடையுத்தரவு பிறப்பிக்க ஒரு ஃபெடரல் நீதிபதி உத்தரவிட்டார். அவர் தனது தீர்ப்பை ‘தேசிய நலன்’ என்ற பெயரில் நியாயப்படுத்தினார்.

தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் பங்கானது, டெப்ஸ் (Debs) ஒருமுறை “நீதிமன்ற உத்தரவு மூலம் ஆட்சி” என்று அழைத்ததை நிறைவேற்ற உதவுவதாக இருந்தது. கோடைக்காலத்திற்குப் பிறகு ஏறக்குறைய ஒருமனதான வேலைநிறுத்த வாக்கெடுப்பு நடந்த பின்னரும் கூட, ரயில்வே தொழிற்சங்கங்கள் உண்மையில் ஒரு தீர்வை திணிக்க உதவ ஜனாதிபதி அவசர வாரியத்தை (Presidential Emergency Board - PEB) நியமிக்குமாறு பைடெனிடம் வேண்டுகோள் விடுத்தன. அரசாங்கத்தின் மத்தியஸ்தம் ரயில்வே நிறுவனங்களை முக்கிய சலுகைகளை விட்டுக்கொடுக்க நிர்ப்பந்திக்கும் என்று அவை தொழிலாளர்களிடம் கூறின.

இறுதியில், அது நேர் எதிர்மாறாக நடந்தது. இதற்கு முன்பு நூற்றுக்கணக்கான முறை, ஜனாதிபதி அவசர வாரியம் (PEB) கிட்டத்தட்ட ஒவ்வொரு பிரச்சினையிலும் இரயில்வேக்கு ஆதரவாக பரிந்துரைகளை வழங்கியது. முன்மொழியப்பட்ட தீர்வின் கீழ் தொழிலாளர்கள் நோய்க்கால விடுப்பு கூட எடுக்க முடியவில்லை.

இது சாமானியத் தொழிலாளர்களிடையே கடும் கோபத்தை உருவாக்கியது. ஆனால் அந்த கோபத்திற்கு நாங்கள் வெறும் ஆதரவாளர்களாக செயல்படவில்லை; மாறாக, அடிப்படை பிரச்சினைகளைப் பற்றி தொழிலாளர் வர்க்கத்திற்கு கல்வி அளிக்க முயன்றோம்.

ஜனாதிபதி அவசர வாரிய (PEB) விசாரணைகளின் போது, இரயில்வே நிறுவனங்களின் வழக்கறிஞர்கள் மிகவும் சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை முன்வைத்தனர். இத்தொழில்துறை நாட்டிலேயே மிகவும் இலாபகரமானதாக இருந்தபோதிலும், தொழிலாளர்கள் அந்த மதிப்பில் பங்கு பெற தகுதியற்றவர்கள் என்று அவர்கள் கூறினர். அவர்களது கூற்றுப்படி, “மூலதன முதலீடு மற்றும் இடர்பாடுகளே அவர்களின் இலாபத்திற்கான காரணங்கள், தொழிலாளர்களின் பங்களிப்பு அல்ல.”

தொழிலாள வர்க்கத்தினை சுரண்டுவதன் மூலம் ஏற்படும் உபரி மதிப்பின் தோற்றம் மற்றும் அதன் அடிப்படையில் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அவசியத்தை விஞ்ஞானபூர்வமாக விளக்குவதற்கு கட்சி இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தியது. ஒரு முக்கிய கட்டுரையில், மூலதனம் தொகுதி 1 இல் மார்க்ஸ் எழுதியதை மதிப்பாய்வு செய்தோம்.

2020 இல் வோல் ஸ்ட்ரீட்டின் டிரில்லியன் டாலர்கள் பிணை எடுப்பின் சமூகத் தாக்கங்களைச் சுட்டிக்காட்டி அந்தக் கட்டுரை இவ்வாறு நிறைவு செய்திருந்தது:

அந்த மதிப்பை இன்னும் செலுத்த தொழிலாளர்களை மிகப்பெரிய அளவில் சுரண்டுவது அதிகரிக்கப்பட வேண்டும்.

கடந்த நான்கு தசாப்தங்களாக அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் நிலை எவ்வளவு மோசமாக இருந்தாலும், உபரி மதிப்பு விதியானது முதலாளித்துவ வர்க்கத்தை அதை இன்னும் மோசமாக்கத் தூண்டுகிறது, தொழிலாளர்களை தொழில்துறை அடிமைகளின் நிலைக்கு தள்ளுகிறது. இது ஏகாதிபத்திய கொள்ளையின் புதுப்பிக்கப்பட்ட எழுச்சியின் மூலம் வலுக்கட்டாயமாக புதிய சந்தைகள் மற்றும் மூலப்பொருட்களின் ஆதாரங்களை அதன் முக்கிய போட்டியாளர்களான ரஷ்யா மற்றும் சீனாவின் இழப்பில் கையகப்படுத்துவதன் மூலம் துணைபுரிகிறது.

…இரயில்வே தொழிலாளர்கள் தேவையான முடிவுகளை எடுக்க வேண்டும். அவர்கள் பேராசை கொண்ட இரயில்வே நிறுவனங்களுக்கு எதிராக ‘நியாயமான ஊதியம்’ மட்டுமே கேட்டு போராடவில்லை; மாறாக, அவர்கள் முதலாளித்துவ சுரண்டல் முறைக்கு எதிராகவே போராடுகின்றனர். இரயில்வே நிறுவனங்கள் தங்களின் வார்த்தைகளாலும் செயல்களாலும் இதை உண்மையென நிரூபிக்கின்றன.

அக்டோபரில், தோழர் ரொம் மக்காமன் (Tom Mackaman) எழுதிய யூஜின் டெப்ஸின் (Eugene Debs) முக்கியமான சுயவிவரத்தை உலக சோசலிச வலைத் தளம் (WSWS) வெளியிட்டது. இது இரயில்வே தொழிலாளர்களுக்கு அவர்களது சொந்த வரலாற்றைப் பற்றிய கல்வியை வழங்க முயன்றது, அதில் 19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதிகளிலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்க காலங்களிலும் வெடித்த போராட்டங்கள் மட்டுமின்றி, இரயில்வே தொழிலாளர்களின் போராட்டத்தில் சோசலிச இயக்கம் எப்போதும் ஆற்றிய முக்கிய பங்கு பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.

[Photo: WSWS]

செப்டம்பர் 1 அன்று, கட்சியின் உதவியுடன், இரயில்வே தொழிலாளர்கள், இரயில்வே தொழிலாளர்களின் சாமானியர் குழுவை (Railroad Workers Rank-and-File Committee – RWRFC) நிறுவினர். குழுவின் நிறுவக அறிக்கையானது ஒரு குறிப்பிடத்தக்க வேலைத்திட்ட ஆவணமாகும். இது பின்வரும் விதிமுறைகளில் குழுவின் நோக்கத்தை விளக்கியது:

இந்தச் சாமானிய தொழிலாளர் குழுவானது, கருங்காலி தொழிற்சங்க அதிகாரிகள் மற்றும் பெருநிறுவன அடியாட்களின் கண்காணிப்பிற்கு அப்பால், கட்டுப்பாட்டை மீறி மூலோபாயம் மற்றும் கூட்டு நடவடிக்கைகளை செயல்படுத்தவும், நாடு முழுவதும் மற்றும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களிடமிருந்து பரந்த ஆதரவைக் கோரவும் தகவல் தொடர்பு வழிமுறையாக இருக்கும். இது தடை உத்தரவுகள், நிர்வாகத்தின் பழிவாங்கல் மற்றும் பிற வேலைநிறுத்தங்களை முறியடிக்கும் முயற்சிகளை தோற்கடிக்க நம்மை மிகவும் சக்திவாய்ந்த நிலையில் நிறுத்தும்.

குறிப்பாக, ஏறக்குறைய ஒருமனதாக வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு வாக்கெடுப்புக்கு இணங்க இரயில்வே தொழிலாளர்களின் சாமானியர் குழுவானது (RWRFC) ஒரு தேசிய வேலைநிறுத்தத்தப் போராட்டத்தை மையக் கோரிக்கையாக எழுப்பியது. தொழிலாளர்கள் தங்கள் விருப்பத்தைத் தீர்மானிக்க தங்களை ஒழுங்கமைத்து பிரச்சினையை சக்திப்படுத்த வேண்டும் என்று அது வலியுறுத்தியது, வேலைநிறுத்தப் போராட்டத்தை வேண்டுமென்றே தடுக்கும் தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்காக காத்திருக்கக் கூடாது.

ஆரம்பத்திலிருந்தே, குழுவானது போராட்டத்தின் அரசியல் குணாம்சத்தை இவ்வாறு வெளிப்படுத்த முயன்றது: 

வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் தலையிடும் என்று தொழிற்சங்க அதிகாரிகள் எங்களை பயமுறுத்த முயற்சிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. தடை உத்தரவு பிறப்பிக்க காங்கிரஸ் முயற்சிக்கும் என்பது நிச்சயம் உண்மை ஆகும். ஆனால் இது அரசாங்கமானது, ஜனநாயகக் கட்சி மற்றும் பைடென் நிர்வாகம் ஆகியவற்றின் மீது தொழிற்சங்கங்களின் சார்பான முழுமையான செயலிழந்த நிலையை அம்பலப்படுத்துகிறது.

[அதற்குப் பதிலாக,] கப்பல்துறை தொழிலாளர்கள், சுத்திகரிப்பு தொழிலாளர்கள் மற்றும் நம்மைப் போலவே பிரச்சினைகளை எதிர்கொள்ளும் நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான தொழிலாளர்களின் ஆதரவை நாம் கோர வேண்டும்.

இந்தக் குழுவானது சாமனியர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர்களின் கூட்டணியின் (IWA-RFC) ஒரு பகுதியாக இருப்பதை விளக்கி, போராட்டத்தின் சர்வதேச தன்மையை இவ்வாறு வலியுறுத்தியது:

மேலும் மேலும், அரசாங்கங்களை மீறி தொழிலாளர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இலங்கையில், வாழ்க்கைச் செலவுக்கு எதிராக இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் நடத்திய போராட்டங்கள் அந்நாட்டின் ஜனாதிபதியை ராஜினாமா செய்யத் தூண்டியது. வாஷிங்டன் எங்கள் போராட்டத்தை கண்டு அச்சப்படுகின்றது, ஏனெனில் அது அமெரிக்காவில் இதேபோன்ற ஒரு இயக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அவர்கள் அறிந்துள்ளனர்.

சாமானியர் தொழிலாளர்களின் குழுவின் பலம் என்னவென்றால், இது சரியான நோக்குநிலை மற்றும் முன்னோக்குடன் இரயில்வே தொழிலாளர்களிடையே செயல்பட்ட ஒரே போக்காக இருந்தது. இந்த முக்கியமான காரணியானது கட்சியால் வழங்கப்பட்டது, இது இரயில்வே தொழிலாளர்களின் தன்னிச்சையான முயற்சிகளை நனவாக வெளிப்படுத்த எல்லா இடங்களிலும் முயன்றது.

ஜனாதிபதி அவசர வாரியம் (PEB) வடிவமைக்கப்பட்ட ஒப்பந்தங்களின் ஆரம்ப தோல்விக்கு கட்சியும், இரயில்வே தொழிலாளர்களின் சாமானியர் குழுவும் (RWRFC) முதன்மையான காரணியாக இருந்தன. இது அதிகாரிகளுக்கு மட்டுமல்ல, அரசாங்கத்திற்கும் நெருக்கடியை ஏற்படுத்தியது, செப்டம்பர் 15ந் திகதி  வேலைநிறுத்த காலக்கெடுவிற்கு முன்னதாக ஒப்பந்தத்தை நிறைவேற்ற அரசாங்கம் நேரடியாக தலையிட்டது.

அன்று காலை, வெள்ளை மாளிகை ரோஸ் கார்டனில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பைடென் மற்றும் தொழிற்சங்க மற்றும் இரயில்வே பேச்சுவார்த்தையாளர்கள் நன்றாக வேலை செய்ததற்காக ஒருவரையொருவர் முதுகில் தட்டிக் கொண்டனர். சில வாரங்களில், ‘கூட்டு பேரம்’ என்ற மூடுதிரையின் மூலம் ஒரு தீர்வைத் திணிக்க முயன்றதை தொழிலாளர்கள் தோற்கடிப்பார்கள் என்று அவர்கள் கற்பனைக்கூட செய்ய முடியவில்லை.

அந்த நேரத்திலிருந்து, இரயில்வே தொழிலாளர் சட்டத்தின் (RLA) விதிகள் முடிவுக்கு வந்தபின், வேலைநிறுத்தங்களை தடுப்பதில் முதலாளிகளுக்கு தொழிற்சங்க அதிகார அமைப்பு முக்கியமான கருவியாக மாறியது. இந்த காலத்தில் சாமானிய தொழிலாளர்களின் குழுவின் செயல்பாடு, அதிகாரத்துவத்தின் கட்டுப்பாடுகளை மீறி வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தும் கிளர்ச்சிக்கு தொழிலாளர்களை தயார்ப்படுத்தி, வேலைநிறுத்தத்திற்கு எதிரான சட்ட உத்தரவை முறியடிக்கச் செய்யும் சிறந்த சூழலை உருவாக்குவதில் கவனம் செலுத்தியது.

சாமானிய தொழிலாளர் குழுவின் பணியானது, சர்வதேச மின்சாரத் தொழிலாளர்கள் சங்கம் (International Brotherhood of Electrical Workers - IBEW) மற்றும் தேசிய தீயணைப்பு வீரர்கள் மற்றும் எண்ணெய் பணியாளர்கள் காங்கிரஸ் (National Conference of Firemen and Oilers) ஆகியவை வாக்குச்சீட்டுகளை களவாக நிரப்பி, தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகளை மீறியதை வெளிக்கொணர்ந்தன. இரயில்வே தொழிலாளர்களின் சாமானியர் குழுவானது IBEW உறுப்பினர்களிடம் கணக்கெடுப்பு நடத்தி, பெரும்பாலான உறுப்பினர்கள் ஒப்பந்தத்தில் வாக்களிக்கும் உரிமையை இழந்திருந்தனர் என்பதற்கான உறுதியான ஆதாரங்களைப் பெற்றது.

எதிர்ப்பை எழுப்புவதற்கும், தங்கள் வேலைத்திட்டத்திற்காகப் போராடுவதற்கும், இரயில்வே தொழிலாளர்களின் சாமானியர் குழு (RWRFC) உறுப்பினர்கள் கன்சாஸ் சிட்டி, லிங்கன் (நெப்ராஸ்கா), மற்றும் பால்டிமோர் ஆகிய இடங்களில் முக்கிய இரயில் துறைகளில் தகவல் மறியல் (pickets) போராட்டங்களை நடத்தினர்.

[Photo: WSWS]

சாமானிய தொழிலாளர் குழுவானது பெரிய அளவிலான இணையவழிக் கூட்டங்களையும் நடத்தியது. இவை குறுகியகால அறிவிப்பின் பேரில் நடத்தப்பட்ட போதிலும் ஒரு முக்கிய நிகழ்வாக, வேலைநிறுத்தப் போராட்ட காலக்கெடுவுக்கு முன்னதாக 500 பேர் கலந்து கொண்ட ஒரு கூட்டம் உட்பட நூற்றுக்கணக்கான இரயில்வே தொழிலாளர்களை சாமானியர் குழு ஈர்த்திருந்தது.

அந்தக் கூட்டத்தின் முடிவில், தோழர் டேவிட் நோர்த், இந்த முயற்சியை அமெரிக்காவின் புரட்சிகர மற்றும் ஜனநாயக மரபுகளுடன் இணைக்க முயலும் சாமானிய தொழிலாளர் குழுக்களின் முக்கிய விளக்கத்தை அளித்தார்.

அமெரிக்கப் புரட்சியில் காலனித்துவ எதிப்பாளர்களால் நிறுவப்பட்ட தகவல் பரிமாற்றக் குழுக்களுடன் (Committees of Correspondence) சாமானியர் குழுக்களை (rank-and-file committees) ஒப்பிட்டு அவர் பின்வருமாறு கூறினார்:

தகவல் பரிமாற்றக் குழுக்களிலிருந்து கான்டினென்டல் காங்கிரஸ் (Continental Congress)  உருவானது, இது ஒரு புதிய அமைப்பு வடிவமாக, விரிந்த நிலப்பரப்பில் வாழும் மக்களை ஒன்றிணைத்து, அரசரின் ஆட்சிக்கு எதிராக தங்கள் போராட்டத்தை ஒழுங்கமைத்து, தங்கள் சொந்த கொள்கைகளை உருவாக்குவதற்கான வாய்ப்பை வழங்கியது.

அதை எப்படிப் பயன்படுத்துவது என்று உங்களுக்குத் தெரிந்தால் உங்களிடம் மிகப் பெரிய சக்தி உள்ளது... ஆனால் முதலில் நீங்கள் செய்ய வேண்டியது ஒவ்வொரு பணியிடத்திலும் ஒரு மாற்று அமைப்பைக் கட்டமைக்க வேண்டும். நீங்கள் துரோகம் செய்யப்பட்டுள்ளீர்கள் என்ற செய்தி வந்தவுடன், அது முடிவாக இருக்கக்கூடாது. உங்கள் எதிரிகளுக்கு சேவை செய்யும் அதிகாரிகளின் முடிவுகளை மீறவும், எதிர்க்கவும், இரத்து செய்யவும் நீங்கள் வழிகளை உருவாக்க வேண்டும்.”

அதிகாரத்துவமானது சாமானிய தொழிலாளர் குழுவின் பணியை மிகுந்த கவனத்துடன் கையாண்டது. டீம்ஸ்டர்ஸ் (Teamsters) தொழிற்சங்கத்தின் ஒரு அங்கமான லோகோமோட்டிவ் இன்ஜினியர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் சங்கம் (Brotherhood of Locomotive Engineers and Trainmen) நடத்திய தேசிய மாநாட்டில், தொழிலாளர்கள் “வெளியாட்களிடம்” “புகார் செய்வதை” நிறுத்த வேண்டும் என்றும், தங்கள் குறைகளை உங்கள் “சாப்பாட்டு மேசையில்” வைத்திருக்க வேண்டும் என்றும்-அதாவது, அதிகாரத்துவத்தின் உள் கட்டுப்பாட்டின் கீழ் இருக்க வேண்டும் என்று சீன் ஓ பிரையன் (Sean O’Brien) ஒரு பதட்டமான உரையை வழங்கினார்.

டீம்ஸ்டர்களின் ஒரு பகுதியான, பாதை ஊழியர்களின் பராமரிப்பு சங்கம் (Brotherhood of Maintenance of Way Employes) அதன் தலைவரான டோனி கார்டுவெல் (Tony Cardwell), “அனுமதியற்ற வேலை நிறுத்தப் போராட்டங்களின் ஆபத்தான யோசனைகளுடன், அநாமதேய ஓரங்கட்டப்பட்ட குழுக்களை” கண்டித்து ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

சாமானிய தொழிலாளர் குழுவானது (RFC) இந்த அறிக்கைக்கு ஒரு பகிரங்கக் கடிதத்துடன் சக்திவாய்ந்த முறையில் இவ்வாறு பதிலளித்தது:

இரயில்வே தொழிலாளர்களின் சாமானியர் குழுவானது (RWRFC) ஒரு “ ஓரங்கட்டப்பட்ட” குழு என்று நீங்கள் குற்றம் சாட்டுகிறீர்கள். நீங்கள் தான் ஓரங்கட்டப்பட்டு இருக்கிறீர்கள், திருவாளர் கார்டுவெல், நாங்கள் அல்ல. உங்கள் குப்பை ஒப்பந்தங்களையும் வேலைநிறுத்தப் போராட்டம் செய்யவும் நிராகரிக்கவும் நாங்கள் வாக்களித்துள்ளோம். தொழிலாளர்களாகிய நாங்கள் உங்களை விட 1,000 மடங்கு அதிகம். அதிகாரத்துவரீதியாக எங்களை மௌனமாக்குவதற்கான முயற்சிகளுக்கு எதிராக இரயில்வே ஊழியர்களுக்கு குரல் கொடுக்கவும், ஒருங்கிணைக்கவும் இரயில்வே தொழிலாளர்களின் சாமானியர் குழு (RWRFC) உருவாக்கப்பட்டது.

திரு. கார்டுவெல், எங்கள் 120,000 சக பணியாளர்கள் சார்பாக, நாங்கள் உங்களுக்கு பின்வரும் அறிவுறுத்தலை வழங்குகிறோம்: உறுப்பினர்களின் விருப்பத்திற்கு நீங்கள் இணங்க விரும்பவில்லை என்றால், வழியை விட்டு வெளியேறவும்.

இறுதியில், அதிகாரத்துவமானது நவம்பர் மாத இறுதியில் பைடென் மற்றும் காங்கிரஸ் வேலைநிறுத்தத் தடையை நிறைவேற்ற போதுமான நேரத்தை வாங்கிக் கொள்ள முடிந்தது. ஆனால் முதலாளித்துவ வர்க்கத்திற்கு இது ஒரு பெரும் இழப்பைத் தந்த வெற்றியாக அமைந்தது. இது வெள்ளை மாளிகையின் சுயநலக் கூற்றுகளான “அமெரிக்க வரலாற்றில் மிகவும் தொழிலாளர் ஆதரவு நிர்வாகம்” என்பதையும், அரசாங்கத்தின் உண்மையான கொள்கையானது அடிப்படையில் தொழிலாளர் கட்டுப்பாட்டின் முழு அமைப்பையும் வெளிப்படையாக அம்பலப்படுத்தியது.

போலி-இடதுகள், குறிப்பாக பெர்னி சாண்டர்ஸ் (Bernie Sanders) மற்றும் அமெரிக்காவின் ஜனநாயக சோசலிஸ்டுகள் (DSA) அமைப்பு தங்களை முற்றிலும் அம்பலப்படுத்திக்கொண்டனர். வேலைநிறுத்தப் போராட்டத் தடையை விரைவாகப் பெறுவதற்கான பாராளுமன்றத்தில் மேற்கொண்ட சூழ்ச்சியில் அவர்களில் முக்கியமானவர்கள், ஒகாசியோ-கோர்டெஸ் (Ocasio-Cortez) மற்றும் காங்கிரஸின் மற்றய DSA உறுப்பினர்கள் தடைக்கு ஆதரவாக வாக்களித்தனர். அந்த அமைப்பிற்குள் ஒரு பெரும் நெருக்கடியை இது உருவாக்கியது, அவர்களின் வர்க்க அரசியலின் நிலைப்பாட்டிலிருந்து வாக்குகளின் முக்கியத்துவத்தைப் பற்றிய நமது இடைவிடாத பகுப்பாய்வு தீவிரத் தன்மையைப் பெற்றது.

கட்சியின் தலையீட்டின் காரணமாக இரயில்வே தொழிலாளர்களில் மிகவும் முன்னேறிய பிரிவினர் இந்த அனுபவப் பாடத்தை உணர்வுபூர்வமாக கிரகித்துக்கொண்டனர்.

வேலைநிறுத்தப் போராட்டத்தின் தடைக்குப் பிறகு, கட்சியானது இரயில்வே துறையில் தனது வேலையைத் தொடர்ந்து செய்தது. சில மாதங்களுக்குப் பிறகு, பிப்ரவரி 2023 இல், அமெரிக்க ஓஹியோவின் கிழக்கு பாலஸ்தீனத்தில் இரயில் தடம் புரண்டதுடன் நச்சுவாயு இரசாயனக் கசிவும் ஏற்பட்டது. இது இடைவிடாத செலவுக் குறைப்பால் உந்தப்பட்ட இரயில் உள்கட்டமைப்பின் கொடூரமான நிலையை அம்பலப்படுத்தியது. இது ஒரு சமூகக் குற்றமாகும், இது வேலைநிறுத்தப் போராட்டத்தின் மீதான தடையிலிருந்து நேரடியாக பாய்ச்சலை உண்டாக்கியுள்ளது, இது வேலைநிறுத்தப் போராட்டத்தின் தடை காரணமாக நேரடியாக ஏற்பட்ட ஒரு சமூகக் குற்றமாகும், இதில் பாதுகாப்பு குறைபாடு முக்கிய பிரச்சினையாக இருந்திருக்கிறது.

இதற்கிடையில், ஜனநாயகக் கட்சியால் அதன் முழு அலட்சியத்தையும் மறைக்க முடியவில்லை, ஒரு முழு வருடத்திற்குப் பிறகுதான் பைடென் அந்த நகரத்திற்கு வருகை தந்தார். இதற்கிடையில், நமது கட்சியானது நகரத்திற்கு ஏராளமான வருகைகளை செய்ததுடன் மற்றும் குடியிருப்பாளர்களுடன் நேர்காணல்கள் உட்பட ஒரு குறிப்பிடத்தக்க தலையீட்டை செய்தது.

முதலாளித்துவத்தின் எதிர்த் தாக்குதல்

2022 ஆம் ஆண்டின் இறுதியில், வளர்ந்து வரும் வர்க்கப் போராட்டத்திற்கு எதிராக ஆளும் வர்க்கம் எதிர்த் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பூஜ்ஜியத்திற்கு அருகில் இருந்த வட்டி விகிதங்களை 2023 ஆம் ஆண்டு மே மாதத்திற்குள் 5 சதவிகிதத்திற்கும் மேலாக உயர்த்துவதற்கு பெடரல் ரிசர்வ் எடுத்த முடிவு ஒரு குறிப்பிடத்தக்க திருப்புமுனையாகும்.

இது 1970களின் பிற்பகுதியில் “வோல்க்கர் பதற்றம்” (Volcker Shock) ஏற்பட்ட பிறகு இது நனவாக வடிவமைக்கப்பட்டது, இது “கூலி-விலை சுழல்” (wage-price spiral) என்று அழைக்கப்படுவதை எதிர்த்துப் போராடுவதன் பெயரில் வேண்டுமென்றே உற்பத்தி மந்தநிலையைத் தூண்டியது - உண்மையில், உயர் பணவீக்கத்தின் தாக்கத்திற்கு எதிராக வேலைநிறுத்தப் போராட்டங்களின் வளர்ச்சிக்கு எதிராக வெகுஜன வேலையின்மையை ஆயுதமாக்கும் நோக்கத்துடன் இது செய்யப்பட்டது.

இந்தப் பணக்கொள்கையின் மறுபக்கம், வேலைநிறுத்தங்களைத் தடுக்கவும் தொழிலாளர் நலனுக்கு எதிரான ஒப்பந்தங்களைத் திணிக்கவும், தொழிற்சங்க அதிகாரத்துவம் வெள்ளை மாளிகையுடன் பெருநிறுவன கூட்டணி அமைத்தது. 2022 ஆம் ஆண்டின் இறுதியில், தொழிற்சங்கம் சாராத தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, தொழிற்சங்கத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வை விஞ்சியது. 

[Photo: WSWS]

இந்தக் கொள்கைகள் வெகுஜன வேலை இழப்புகளை ஏற்படுத்தி தனது “பலன்களை” காட்டத் தொடங்கின. இது 2023 ஆம் ஆண்டில் மேலும் தீவிரமடைந்தது. வேலைவாய்ப்பு நிறுவனமான சேலஞ்சர் (Challenger), கிரே (Gray) மற்றும் கிறிஸ்மஸ் (Christmas) இன் மாதாந்திர புள்ளிவிவரங்களின்படி, பெரும் பொருளாதார மந்தநிலைக்குப் பிறகு பணிநீக்கங்களின் வேகம் மிக உயர்ந்த அளவை எட்டியது. கடந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து ஒரு மில்லியனுக்கும் அதிகமான வேலை இழப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தொழிலாளர்கள் மீதான தாக்குதலானது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர்க்கால கொள்கைகளுடன் கைகோர்த்துச் சென்றது. 2022 ஆண்டு இரயில்வே போராட்டத்தின் போது, ​​20,000 க்கும் மேற்பட்ட மேற்கு கடற்கரை கப்பல்துறை பணியாளர்களுக்கான ஒப்பந்தமும் காலாவதியானது.

கப்பல்துறைகளின் முக்கிய “தேசிய பாதுகாப்பு” தாக்கங்களை வலியுறுத்தி, லாஸ் ஏஞ்சல்ஸ் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டாம் உலகப் போர் கால போர்க்கப்பலான யுஎஸ்எஸ் அயோவாவின் (USS Iowa) கப்பல் தளத்திலிருந்து அந்தக் கோடையில் நடந்த பேச்சுக்களைக் குறித்து பைடென் உரையாற்றினார். சர்வதேச லாங்ஷோர் மற்றும் வேர்ஹவுஸ் தொழிற்சங்கம் (ILWU) கப்பல்துறை தொழிலாளர்களை ஒரு வருடத்திற்கும் மேலாக ஒப்பந்தம் இல்லாமல் பணிசெய்ய வைத்திருந்தது, வேண்டுமென்றே அவர்களை முதலில் இரயில்வே பின்னர் யுபிஎஸ் (UPS) தொழிலாளர்களிடமிருந்து தனிமைப்படுத்தியது.

[Photo: WSWS]

திடீர் வேலைநிறுத்தப் போராட்ட நடவடிக்கைகள் மூலம் தொழிலாளர்கள் இந்த நடைமுறைத் தடை உத்தரவை மீறத் தொடங்கியபோது, சர்வதேச லாங்ஷோர் மற்றும் வேர்ஹவுஸ் தொழிற்சங்கம் (ILWU) விரைவாக தொழிலாளர்கள் மீது ஒரு ஒப்பந்தத்தை உருவாக்குவதன் மூலம் பதிலளித்தது. முன்னாள் தொழிற்சங்க அதிகாரத்துவவாதியும் பாஸ்டனின் முன்னாள் மேயருமான மார்டி வால்ஷ் (Marty Walsh) பதவி விலகியதற்குப் பிறகு, பதில் தொழிலாளர் செயலாளரான ஜூலி சுவின் (Julie Su) முக்கிய உதவியுடன் இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

யுபிஎஸ் (UPS) இல் போராட்டம் 

2022 ஆண்டில் டீம்ஸ்டர்ஸ் (Teamsters) அதிகாரத்துவம் மற்றும் தொழிற்சங்க பொதுத் தலைவர் சீன் ஓ’பிரைன் (Sean O’Brien) இரயிவே போராட்டத்திற்கு அரசாங்கம் மேற்கொண்ட பதில் நடவடிக்கைக்கு முக்கிய பங்கு வகித்தன. அடுத்த ஆண்டு, யுபிஎஸ் இல் 340,000 தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை முறியடிக்க அவர்கள் விரிவான சூழ்ச்சிகளை மேற்கொண்டனர். இது 2018 இல் பெரும்பான்மையான “வேண்டாம்” என்ற வாக்குகள் இருந்தபோதிலும், கடைசி ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்ட பின்னர் பல ஆண்டுகளுக்கு முன்பே செயல்படுத்தப்பட்ட ஒரு மூலோபாயத்தைப் பின்பற்றியது.

இந்தத் துரோகத்தின் மீதான சாமானிய தொழிலாளர்களின் பெரும் கோபத்தை உணர்ந்து, அதிகாரத்துவத்தின் ஒரு பிரிவானது ஒரு தொழில் அதிகாரியும் மற்றும் மோசமான குண்டராகவும் இருக்கும் ஓ’பிரைனை (O’Brien) 2021 ஆண்டு தொழிற்சங்கத் தேர்தலில் “சீர்திருத்த” வேட்பாளர் என்று அழைத்து அவரை நியமித்தது. இந்த நடவடிக்கையில் போலி-இடது முக்கிய பங்கு வகித்தது, ஜனநாயக டீம்ஸ்டர்ஸ் சங்கமானது அவரது பின்னணியை மறைத்து, அவரது புதிய நிர்வாகத்தில் ஒரு பகுதியாக இணைந்தது.

உண்மையில், டீம்ஸ்டர்கள் சங்கத்தின் வரலாற்றில் மிகக் குறைந்த வாக்குப்பதிவான சுமார் 15 சதவீத வாக்குகளுடன் நடந்த தேர்தலில் ஓ’பிரைன் “தேர்ந்தெடுக்கப்பட்டார்”. உண்மையில், அடுத்த ஆண்டு நடந்த UAW  தேர்தலில் 9 சதவீத வாக்குப்பதிவு ஏற்படும் வரை, இதுவே அமெரிக்க தொழிற்சங்க தேர்தல் வரலாற்றில் மிகக் குறைந்த வாக்குப்பதிவாக இருந்தது.

யுபிஎஸ் இல், டீம்ஸ்டர்ஸ் அதிகாரத்துவமானது சாமானிய தொழிலாளர்களின் அழுத்தத்தின் விளைவாகவும், நிர்வாகத்துடன் ஏற்கனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தை அது முன்வைக்கும் ஒரு சந்தர்ப்பமாகவும் “வேலைநிறுத்தப் போராட்டம் தயார் என்ற பிரச்சாரத்தை” நடத்துவதாகக் கூறியது.

இது மறைந்த தொழிற்சங்க ஆலோசகர் ஜேன் மெக்அலேவியின் (Jane MacAlevey) மூலோபாய நூல் பரிந்துரைகளிலிருந்து உத்வேகம் பெற்றது.  அவர் ஒரு முன்னாள் சேவை ஊழியர்கள் சர்வதேச சங்க (Service Employees International Union - SEIU) அமைப்பாளரான அவர், லேபர் நோட்ஸ் (Labor Notes) மற்றும் DSA உடன் மிக நெருக்கமான உறவுகளைப் பேணிக்கொண்டு, லாஸ் ஏஞ்சல்ஸ் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் (UCLA) தொழிலாளர் கற்பித்தல் திட்டத்தில் (Labor Studies program) ஆசிரியர் பதவியை வகித்தார். எதிர்காலத்தில் அவரது பங்கு பற்றி மேலும் எழுதப்பட வேண்டும். ஆனால் அவர் வலியுறுத்திய அடிப்படைக் கோட்பாடு என்னவென்றால், சாமானிய உறுப்பினர்களுக்கு உண்மையான கட்டுப்பாட்டை வழங்காமலேயே, ஜனநாயக ஈடுபாட்டின் தோற்றத்தை உருவாக்குவதற்கான வழிமுறைகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை
அவர் வலியுறுத்தினார்.

உதாரணமாக, மேக்அலேவி “ஒப்பந்த பிரச்சாரங்கள்” என்று அழைத்ததை பரிந்துரைத்தார், இது டீம்ஸ்டர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதில் தொழிற்சங்க ஊழியர்கள் மனுக்கள், கணக்கெடுப்புகள், “நடைமுறை மறியல்” போன்றவற்றை சாமானிய தொழிலாளர்களிடம் கொண்டு செல்வார்கள். அவர் “திறந்த பேரம் பேசும் அமர்வுகளை” ஆதரித்தார், அங்கு தொழிலாளர்கள் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க முடியும், ஆனால் அதிகாரத்தின் கடுமையான கட்டுப்பாட்டின் கீழ் மட்டுமே. பேச்சுவார்த்தைகளின் உணர்திறன் காரணமாக இது கூட நடைமுறையில் சாத்தியமற்றதாக இருந்தபோது, டீம்ஸ்டர்கள் “சாமானிய” பேரம் பேசும் குழு உறுப்பினர்களை உருவாக்கி மாற்றியமைக்கப்பட்ட முறையை ஏற்றுக்கொண்டனர். உண்மையில், இவர்கள் அதிகாரத்துவ இயந்திரத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்ட கீழ்மட்ட உள்ளூர் அதிகாரிகளும் தொழிலாளர்களுமாக இருந்தனர்.

இந்தச் சூழ்ச்சிகளை அம்பலப்படுத்த சோசலிச சமத்துவக் கட்சி (SEP) திட்டமிட்டு வேலை செய்தது. கோடையில், யுபிஎஸ் (UPS) தொழிலாளர்களின் சாமானிய தொழிலாளர் குழுவைக் அமைப்பதற்கு செயல்பட்டோம். அதன் நிறுவக அறிக்கையில், அது இவ்வாறு விளக்கியது:

பொதுவான சொல்லாட்சி எதுவாக இருந்தாலும், அனைத்து அறிகுறிகளும் காட்டுவது என்னவென்றால், நாம் இன்னும் அதே பழைய டீம்ஸ்டர்ஸ் அதிகாரத்துவத்துடன்தான் கையாளுகிறோம். இது நமது உரிமைகளை மீறி, காட்டிக்கொடுப்புகளை நடைமுறைப்படுத்துகிறது. இதற்கான ஒரே பதில் நம்மை நாமே ஒழுங்கமைத்துக் கொள்வதுதான் - பேரம் பேசும் குழுவை “ஆதரிப்பதோ” அல்லது அவர்களுக்கு உற்சாகமூட்டுவதோ அல்ல, மாறாக நமது ஜனநாயக விருப்பத்தை நிலைநாட்டவும், தவிர்க்க முடியாத காட்டிக்கொடுப்பை எதிர்கொள்ளவும் நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். 

பேச்சுவார்த்தையில் முழு வெளிப்படைத்தன்மை, சாமானிய தொழிலாளர்களின் கோரிக்கைகளை உருவாக்குதல் மற்றும் டீம்ஸ்டர்கள் உண்மையில் அழைப்புவிடும் நோக்கம் இல்லாத ஒரு வேலைநிறுத்தப் போராட்டம் தொழிலாளர்களாலேயே தயாரிக்கப்பட வேண்டும் என்பது உட்பட பேச்சுவார்த்தையின் மீது உண்மையான தொழிலாளர்களின் கட்டுப்பாட்டை அமல்படுத்துவதற்கான கோரிக்கைகளை சாமானிய தொழிலாளர் குழு எழுப்பியது.

இறுதியாக அறிவிக்கப்பட்டதும், தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு மிகவும் குறைவான பதிலாக ஒப்பந்தம் இருந்தது. பகுதி நேர தொடக்க ஊதியம் ஒரு மணி நேரத்திற்கு $21 டாலராக மட்டுமே அதிகரிக்கும் மற்றும் ஒப்பந்தத்தின் பெரும் பகுதிக்கு ஏற்கனவே இருந்ததைப்போன்று சமமாக இருக்கும். நிறுவனம் சில ஆயிரம் பேருக்கு மட்டுமே முழுநேர வேலைகளை உறுதியளித்தது மற்றும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஓய்வூதிய பலனுக்கான பங்களிப்புகளை முடக்கியது. குளிரூட்டிகள் (air conditioning) பற்றிய வாக்குறுதியை நிறுவனம் பல தசாப்தங்களாக அவற்றை இயக்கும் போது புதிய வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

யுபிஎஸ் சாமானிய தொழிலாளர் குழுவானது (UPS RFC) ஒப்பந்தத்திற்கு எதிராக தீவிரமாக பிரச்சாரம் செய்தது, ஆனால் ஒரு அறிக்கை விளக்கியது போல் அது “வேண்டாம்” என்ற வாக்கு மட்டும் போதாது என்பதை இவ்வாறு வலியுறுத்தியது:

ஆனால், நாம் ஒப்பந்தத்தை நிராகரித்து வாக்களித்தால், அதிகாரத்துவத்தினர் உண்மையை உணர்ந்து சிறந்த ஒன்றை முன்வைக்க மாட்டார்கள். அவர்கள் நம்மை மீண்டும் வாக்களிக்க வைக்க முயல்வார்கள், அல்லது அதைவிட மோசமாக, தடை உத்தரவு பெற பைடெனிடம் செல்வார்கள். எனவே, “இல்லை” என்ற வாக்கு, அதிகார வர்க்கத்தின் கட்டுப்பாட்டிற்கு வெளியே மாற்று அமைப்புகளை உருவாக்குவதற்கும், அதிகாரத்தை அது சேர வேண்டிய சாமானிய தொழிலாளர்களுக்கு மாற்றுவதற்கும் சாமானிய தொழிலாளர்களுக்கான தொடக்கப் புள்ளியாக இருக்க வேண்டும். 

TDU (Teamsters for a Democratic Union) வரலாற்றாசிரியர் ஜோ ஆலன் (Joe Allen) மற்றும் உள்ளூர் நிர்வாக உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறுவப்பட்ட டீம்ஸ்டர்களை அணிதிரட்டல் (Teamsters Mobilize) உட்பட TDU இன் இரண்டாவது பதிப்பை உருவாக்க முயற்சிக்கும் மற்ற குழுக்களில் இருந்து சாமானிய தொழிலாளர் குழுவை இது வேறுபடுத்தியது. இந்தக் குழுக்கள், ஓ’பிரைன் (O’Brien) இன் ஒப்புதலால் அதிருப்தி அடைந்த சில முன்னாள் TDU உறுப்பினர்களை உள்ளடக்கி, “வேண்டாம்” என்ற வாக்கு அளிப்பதன் மூலம் அது மதிக்க வேண்டிய அதிகாரத்துவத்திற்கு ஒரு செய்தியை அனுப்பும் என்று கூறியது. அவர்களின் செயல்பாடு TDU அதுவாகவே வீழ்ச்சியடையத் தொடங்கிய நிலைமைகளின் கீழ் அதைப் பாதுகாப்பதற்கான இரண்டாவது அணியாக அது செயல்பட்டது.

உலக சோசலிச வலைத் தளம் (WSWS) மற்றும் யுபிஎஸ் சாமானிய தொழிலாளர் குழுவானது (UPS RFC) அதிகாரத்துவவாதிகளையும் போலி-இடதுகளையும் முக்கிய அச்சுறுத்தலாக எடுத்துகொண்டது. நியூஸ்வீக்கில் (Newsweek) குறிப்பாக வெளிப்படுத்தும் ஒரு கட்டுரையின் பகுதியில் உலக சோசலிச வலைத் தளத்தை (WSWS) “அறிவுஜீவித-தொழில்துறை வளாகம்” மற்றும் “கவசமுள்ள நாற்காலி ஆர்வலர்கள்” என்று தாக்கி எழுதியது, அவர்கள் ஒப்பந்தத்தின் ஒப்புதலை அச்சுறுத்தும் வகையில் வெளிப்படுத்தி, “அந்தத் தொழிற்சங்கத்திலிருந்து தள்ளியிருங்கள்” என்று தொழிலாளர்களைக் கேட்டுக்கொண்டனர். எழுத்தாளர், ஜில் டன்சன் (Jill Dunson), தன்னை ஒரு பகுதி நேர யுபிஎஸ் தொழிலாளியாகக் காட்டிக் கொண்டார், ஆனால் உண்மையில் தேசிய பேரம் பேசும் குழுவின் “சாமானிய” உறுப்பினர்கள் என்று அழைக்கப்படுபவர்களில் ஒருவராக இருந்தார்.

பதிலளிக்கும் வாய்ப்பை நாங்கள் வலியுறுத்தியபோது, நியூஸ்வீக் அதற்கு சம்மதித்தது. WSWS சார்பாக நான் (ரொம்) எழுதிய பதில் இந்தப் புறம்பேச்சுகளை மறுத்துரைத்தது. குறிப்பாக, நமது சோசலிச அரசியல் நிலைப்பாட்டை பாதுகாத்து நாங்கள் அதை இவ்வாறு முடித்திருந்தோம், அதாவது “தொழிலாளர்கள் அதை ஏற்கத் தொடங்கியுள்ளனர்” என்று விளக்கியதோடு, அதிகாரத்துவத்தின் சோசலிசத்திற்கு எதிரான எதிர்ப்பு அவர்களின் சமத்துவமின்மைக்கான ஆதரவை வெளிப்படுத்துகிறது என்றும் சுட்டிக்காட்டினோம்.

எமது பதிலை வெளியிடும் தீர்மானம், எந்தவொரு நடுநிலையான ஊடகவியல் அளவுகோலின்படியும், முழுமையாக நியாயப்படுத்தப்பட்டது. எனினும் இது குறிப்பிடத்தக்கதாக இருந்தது, ஏனெனில் உலக சோசலிச வலைத் தளத்தை (WSWS) அங்கீகரிக்க மறுக்கும் பெருவணிக ஊடகங்களின் நீண்டகால நடைமுறைக்கு முரணாக இது அமைந்தது. 

இது நியூஸ்வீக் திடீரென சோசலிசத்தை ஏற்றுக்கொண்டதாகவோ அல்லது பெருநிறுவன ஊடகமாக இருப்பதை நிறுத்திவிட்டதாகவோ பொருள்படவில்லை. ஆனால் கட்சி மிகவும் வலுவான சமூகப் போக்குகளுக்காகப் பேசுகிறது என்பதை தெளிவாக அங்கீகரிப்பதாக இருந்தது, இதனை முதலாளித்துவ வர்க்கம் தங்களின் சொந்த ஆபத்தில் மட்டுமே புறக்கணிக்க முடியும்.

யுபிஎஸ் ஒப்பந்தம் சந்தேகத்திற்குரிய சூழ்நிலையில் அங்கீகரிக்கப்பட்டது, தொழிலாளர்கள் பரவலாக இந்த மோசடியை சந்தேகித்தனர். உண்மையில், முழு வாக்கெடுப்பும் மோசடியாக நடத்தப்பட்டிருந்தது, ஏனெனில் நீண்டகாலமாக திட்டமிடப்பட்ட வேலைநீக்கங்கள் செய்வதற்கான ஒப்பந்தமான அதற்கு பச்சைகொடி காட்டியிருந்தது என்ற உண்மையை டீம்ஸ்டர்கள் மறைத்துவிட்டனர்.

ஒரு சில வாரங்களுக்குள், யுபிஎஸ் பண்டகசாலைகளில் முழு ஷிப்டுகளும் பணிநீக்கம் செய்யப்படுவதாக தொழிலாளர்கள் தெரிவிக்கத் தொடங்கினர். டீம்ஸ்டர்கள் கூறியது போல் இவை பருவகால வேலைநீக்கங்கள் அல்ல, தானியங்கி முறையை (automation) ஒரு முக்கிய ஆயுதமாகப் பயன்படுத்தி வேலைகளை நீக்குவதற்கு அதன் மீதான விரிவான தாக்குதல் என்று யுபிஎஸ் சாமானிய தொழிலாளர் குழு (UPS RFC) மற்றும் உலக சோசலிச வலைத் தளம் (WSWS) மட்டுமே என்ன நடக்கிறது என்பதைப் பற்றி தொழிலாளர்களுக்கு தெரிவிக்க முயன்றன.

இந்த ஆண்டு ஜனவரியில், “தானியங்கி உற்பத்தி வேலைகள் யுபிஎஸ் இல் இரத்தக்களரியைக் கொண்டுவருகிறது: தொழிலாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஏழு உண்மைகள்.“ என்ற யுபிஎஸ் சாமானிய தொழிலாளர் குழு (UPS RFC) ஒரு அறிக்கையை வெளியிட்டது. நிறுவனத்தின் பண்டகசாலை (warehouse) தொழிலாளர்களில் 80 சதவீதம்பேரை அகற்றும் திறன் கொண்ட தானியங்கி உற்பத்தி பிரிவை (automated facilities) நிறுவனம் ஏற்கனவே திறக்கிறது என்று அதில் விளக்கியிருந்தது.

இது பின்னர் மார்ச் மாதத்தில் நடந்த முதலீட்டாளர்கள் கூட்டத்தில் யுபிஎஸ் அதனை உறுதிப்படுத்தியிருந்தது, அங்கு அது 200 உற்பத்தி பிரிவுகளை மூட அல்லது தானியங்கி முறைப்படுத்தும் நோக்கமாகக் கொண்டிருக்கிறது என்பதை “எதிர்காலத்தின் வலையமைப்பு” (“Network of the Future”) தொடக்க விழாவில் அதனை வெளிப்படுத்தியது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, யுபிஎஸ் சாமானிய தொழிலாளர் குழுவானது (UPS RFC), புதிய தொழிலாளர் குறைப்பு தொழில்நுட்பங்களை ஒழிப்பதற்காக அல்ல, மாறாக உற்பத்தியினை தொழிலாளர்களின் கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டுவர அழைப்பு விடுத்தது, இதன் மூலம் இந்த தொழில்நுட்பங்கள் வேலையின் சுமையை எளிதாக்கவும் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் பயன்படுத்தப்படலாம். ஏப்ரலில் விடுக்கப்பட்ட ஒரு அறிக்கையில், தானியங்கி முறை மூலம் எடுத்துக்கொள்ளப்பட்ட பலன்களை ஊதியத்தில் இழப்பு இல்லாமல் வேலை நேரத்தைக் குறைக்கவும், முழுநேர பதவிகளில் பகுதி நேர ஊழியர்களை வேலையில் அமர்த்தவும், உடல்நலம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தவும் மற்றும் ஓய்வூதிய வயதைக் குறைக்கவும் பயன்படுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்தது.

இதற்கு பதிலளிக்கப்பட்டதன் மூலம், கட்சியானது, சோசலிச வேலை முறையை, பிரபலமான ஒரு வேலைத்திட்டத்தை உருவாக்கத் தொடங்கியது. தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ், யுபிஎஸ் ஐ பொது உடைமைக்கான தேவையுடன் இந்தக் கோரிக்கைகளை அது இணைத்துக்கொண்டது.

தபால் துறையில் போராட்டம்

அமெரிக்கத் தபால் துறையில் நடந்து வரும் போராட்டத்தில் இதுபோன்ற பல பிரச்னைகள் வெளிவந்துள்ளன. ஒரு புதிய “அமெரிக்காவுக்காக கொண்டு சேர்” (Delivering for America) என்ற மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், ஆயிரக்கணக்கான உள்ளூர் தபால் நிலையங்களை மூடுவதையும், குறைந்தபட்சம் 60,000 வேலைகளை நீக்குவதையும் அமெரிக்க தபால் சேவை (United States Postal Service - USPS) நோக்கமாகக் கொண்டிருந்தது. கிராமப்புற கடிதம் கொண்டு சேர்ப்போர்களின் ஊதியத்தை பல்லாயிரக்கணக்கான டாலர்களால் குறைக்க நிர்வாகம் புதிய ஊதிய சூத்திரங்களைப் பயன்படுத்துகிறது. நகரத்தில் கடிதம் கொண்டு சேர்ப்போர்கள் ஊடுருவும் புதிய கண்காணிப்பு அமைப்புகளின் கீழ் உள்ளனர், மேலும் யுபிஎஸ் இல் உள்ளதைப் போன்று அஞ்சல் வலையமைப்பின் மறுவடிவமைப்பில் தானியங்கி முறை (automation) அறிமுகப்படுத்தப்படுகிறது. இறுதியில், தபால் அலுவலகத்தை முழுவதுமாக தனியார்மயமாக்குவது, முதலாளித்துவத்தின் கொள்கை நோக்கம் ரிச்சர்ட் நிக்சன் காலத்திற்கு செல்வதாக இருக்கும்.

[Photo: WSWS]

எங்கள் முழுத் தகவல் அறிக்கைகளானது தபால் ஊழியர்கள் மத்தியில் மகத்தான வரவேற்பைப் பெற்றுள்ளது. இது கடந்த செப்டம்பரில் தபால் ஊழியர்களின் சாமானியர் குழுவை உருவாக்க வழிவகுத்தது. அதன் முக்கிய அறிக்கைகளில் ஒன்று அமெரிக்காவுக்காக கொண்டு சேர் (Delivering for America) திட்டத்தினைப் பற்றி அளித்த விரிவான விளக்கமாகும், அதன் உண்மையான நோக்கங்கள் தொழிற்சங்க அதிகாரத்துவத்தால் மறைக்கப்பட்டன.

தபால் அலுவலகத்தில் கட்சியின் தலையீடு ஒரு வெளிப்படையான வடிவத்தில், ஒரு சர்வதேச போராட்டமாக உள்ளது. உலகெங்கிலும் தேசிய அஞ்சல் அலுவலகங்கள் குறைக்கப்படுகின்றன, மேலும் கனடா, ஜேர்மனி, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள தபால் ஊழியர்களிடையே சாமானியர் குழுக்களை அமைக்க கட்சி உதவியுள்ளது. இந்த மற்றய நாடுகளின் சாமானியக் குழுக்களுடன் நெருக்கமாக கலந்தாலோசித்து, தபால் வேலைகள் மீதான தாக்குதலின் உலகளாவிய தன்மையை விளக்க சர்வதேச பிரதிநிதிகளை குழுக் கூட்டங்களுக்கு அனுப்புவது உட்பட அமெரிக்காவின் தபால் ஊழியர்களின் சாமானியர் குழுவின் பணி வளர்ச்சியடைந்துள்ளது.

காஸாவில் போர் மற்றும் தொழிலாள வர்க்கம்

அக்டோபரில், இஸ்ரேல் காஸாவில் அதன் இனப்படுகொலைப் போரைத் தொடங்கியது, இது உலகெங்கிலும் ஒரு கண்டனப் போராட்டத்தை வேகமாக உருவாக்கியுள்ளது.

வெகுஜன போர்-எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு முழு விரோதமான செயலாக தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் பதில் இருக்கிறது. இது அதிகாரத்துவத்தின் ஆழமான சமூக செயல்பாட்டின் காரணமாக இருக்கிறது. ட்ரொட்ஸ்கி 1938 இல் இடைமருவு வேலைத்திட்டத்தில் விவரித்தபடி:

கடுமையான வர்க்கப் போராட்டத்தின் காலகட்டங்களில், தொழிற்சங்கங்களின் முன்னணி அமைப்புகள் வெகுஜன இயக்கத்தின் எஜமானர்களாக மாறுவதை இலக்காகக் கொண்டுள்ளன. போர் அல்லது புரட்சியின் காலங்களில், முதலாளித்துவம் விதிவிலக்கான சிரமங்களில் மூழ்கும்போது, ​​தொழிற்சங்கத் தலைவர்கள் பொதுவாக முதலாளித்துவ அமைச்சர்களாக மாறுகிறார்கள்.

தோழர் ஜெர்ரி வைட்டின் அறிக்கை, போர்-எதிர்ப்பு இயக்கத்திற்கும் பொதுவாக அதன் அரசியல் பணிக்கும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் பதிலளிப்பை மேலும் விரிவாக ஆராயும். இங்கு நான் பொதுவான கருத்துக்களோடு நிறுத்திக் கொள்கிறேன். பெரும்பாலும், அதிகாரத்துவத்தின் வலுவற்ற “போர் நிறுத்த” தீர்மானங்கள் மூலம் எதிர்ப்பை அடக்க முயன்றுள்ளது. இது “இனப்படுகொலை ஜோ” எனக் குறிப்பிடப்படும் பைடெனுக்கான உறுதியான ஆதரவுடன் இணைந்துள்ளது. கடந்த மாதம் AFL-CIO அவரது “உள்நாட்டு நேட்டோ” என்ற பைடெனின் கூற்று, அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் அதிகாரத்துவத்தின் உண்மையான உறவின் துல்லியமான சுருக்கமாக அமைந்தது.

வசந்த காலத்தில் (மார்ச்-ஏப்ரல்), இரு கட்சி ஆதரவுடன் பல்கலைக்கழக வளாகங்களில் நடத்தப்பட்ட பாரிய பொலிஸ் அடக்குமுறைகள் இன்னும் பெரும் ஆர்ப்பாட்டங்களைத் தூண்டின. நாங்கள் எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்ற பிரச்சினையை கட்சி எதிர்கொண்டது. வெளியில் இருந்து நிகழ்வுகள் பற்றி கருத்து மட்டும் வெறுமனே போதாது. முக்கியமான கேள்வி: பல்கலைக்கழக வளாக எதிர்ப்புகள் வெடித்ததற்கு தொழிலாள வர்க்கத்தின் பதில் என்னவாக இருக்க வேண்டும்?

சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியின் மே 1 அறிக்கை ஒரு முக்கியமான முன்னேற்றமாக இருந்தது. இது தொழிலாளர்கள் பின்வருமாறு ஒழுங்கமைக்க அழைப்பு விடுத்தது:

ஆர்ப்பாட்டங்கள், வெகுஜனக் கூட்டங்கள் மற்றும் பல்கலைக்கழக வளாக எதிர்ப்புகளுக்கான தொழிலாளர் குழுக்கள் ஒழுங்கமைக்கப்பட வேண்டும். இவை கருத்து சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமை மீதான தாக்குதலை முடிவுக்குக் கொண்டுவர கட்டாயப்படுத்தும் வகையில், தேசிய மற்றும் சர்வதேச அளவிலான வேலைநிறுத்தத்தில் உச்சம் பெற வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கை விளக்கியது, தொழிலாள வர்க்கம் என்பது போருக்கு எதிரான போராட்டத்தை அடிப்படையாகக் கொண்ட தீர்க்கமான சமூக சக்தியாகும். அந்த கட்டுரை மேலும் தொடர்ந்தது:

மாணவர்கள் தைரியமான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். ஆனால் அவர்களின் நடவடிக்கைகள் இன்னும் சக்திவாய்ந்த இயக்கத்தை தொழிலாள வர்க்கத்தில் எதிர்பார்க்கின்றனர். அவர்கள் எழுப்பிய பிரச்சினைகளை பல்கலைக்கழக வளாகங்களில் தீர்க்க முடியாது, மாறாக தொழிற்சாலைகள், பண்டகசாலைகள் (warehouses), ரயில்வே மற்றும் கப்பல்துறைகளின் தலையீடுகளால்தான் தீர்க்கப்படமுடியும்.

போருக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கு, போருக்கு ஆதரவான தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு எதிராக ஒரு கிளர்ச்சி தேவைப்படுகிறது. “இனப்படுகொலை ஜோ பைடென் மற்றும் பிற போர்-சார்பு அரசியல்வாதிகளை ஆதரிக்கும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தால் நிறைவேற்றப்பட்ட நேர்மையற்ற போர்நிறுத்த தீர்மானங்களில் தொழிலாளர்கள் திருப்தியடையக்கூடாது” என்று அந்த அறிக்கை கூறுகிறது. “தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டங்களை அனுமதிக்க வேண்டும் என்று கோருவதற்கு, தொழிற்சங்க கூட்டங்களை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது உங்கள் சொந்த கூட்டங்களை ஏற்பாடு செய்யுங்கள்” என்று அது தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்தது. அவர்கள் அவ்வாறு செய்ய மறுத்தால், அதிகாரத்துவத்தை தூக்கி எறிந்துவிட்டு, வேலைத்தளத்திலிருந்து (shop floor) தேர்ந்தேடுக்கப்பட்ட தலைவர்களைக் கொண்டு மாற்ற வேண்டும்.

சாமனிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர்களின் கூட்டணியின் (IWA-RFC) அறிக்கை நிகழ்வுகளின் உண்மையான போக்கை எதிர்பார்த்தது. சில நாட்களுக்குப் பிறகு, கலிபோர்னியா பல்கலைக்கழக கல்வித் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வெடித்தது. ஆரம்பத்திலிருந்தே, இது ஐக்கிய வாகனத் தொழிலாளர் (United Auto Workers - UAW ) தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு எதிரான கிளர்ச்சியின் வடிவத்தை எடுத்தது. இது போராட்டத்தை மட்டுப்படுத்துவதற்கும் நாசப்படுத்துவதற்கும் அதன் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது.

முதலில், UAW தொழிற்சங்கமானது வேலைநிறுத்தத்தை கலிபோர்னியா பல்கலைக்கழக (UC) அமைப்புக்குட்பட்ட பத்து கல்லூரிகளில் ஒரு கல்லூரி வளாகமாக மட்டுப்படுத்த முயற்சித்தது. ஆனால், UAW அனுமதியுடன் அல்லது அனுமதியில்லாமல் நடக்கத் தயாராக இருப்பதாக தொழிலாளர்கள் தெளிவுபடுத்தியிருந்த நிலைமைகளின் கீழ், இறுதியில் மேலும் ஐந்து வளாகங்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது.

இந்த வேலைநிறுத்தப் போராட்டம் தொழிலாள வர்க்கத்தின் கணிசமான பகுதியினர் போருக்கு எதிரான போராட்டத்தில் முதல் நுழைவைக் குறித்தது. இந்த கல்விசார் தொழிலாளர்கள், குறிப்பாக பட்டதாரி மாணவர்கள், கல்லூரி வளாகத் தொழிலாளர்களின் பாட்டாளி வர்க்க அடுக்குகளாக உள்ளனர், இவர்கள் வறுமை நிலை ஊதியம் பெறுகிறார்கள் மற்றும் வாடகை செலுத்த முடியாதவர்களாகவும் இருக்கின்றனர்.

ஆரம்பத்திலிருந்தே, கட்சியானது இந்தக் கிளர்ச்சியை ஊக்குவித்து வரவேற்றது. அது வேலைநிறுத்தப் போராட்டத்தை தொழில்துறையின் தொழிலாள வர்க்கத்திற்கு விரிவுபடுத்துவதற்காக போராடியது, குறிப்பாக வாகன ஆலைகளில், வேலைநிறுத்தப் போராட்டம் பற்றிய அறிவை UAW வேண்டுமென்றே மறைத்து வைத்திருந்தது.

இதற்கிடையில், UAW ஆனது, முதலீடு விலக்கல் அரசியலை முன்னெடுப்பதன் மூலம் போருக்கு எதிரான வர்க்க அடிப்படையிலான இயக்கத்திற்கான எமது போராட்டத்தை எதிர்கொள்ள முயன்றது. அவர்கள் முன்வைத்த சொல்லப்பட்ட “கோரிக்கைகள்” கல்லூரி நிர்வாகங்களை மட்டுமே குறிவைத்திருந்தன. அதே நேரத்தில், வெள்ளை மாளிகை மற்றும் மாநில, உள்ளூர் ஜனநாயகக் கட்சித் தலைவர்களின் பங்கை குறைத்து மதிப்பிட்டு கண்டுகொள்ளவில்லை.

கட்சி நடத்திய இணையவழிக் கூட்டத்தில் தோழர் ஜோ (Joe) விளக்கியதாவது:

உண்மையில், ஜனநாயகக் கட்சிக்கும் மற்றும் தொழிற்சங்க இயந்திரத்திற்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பொறுப்பிலிருந்து விலகுதல் என்பதே கேள்வியாக இருக்கிறது. ஏனெனில் அது அடிப்படைக் கேள்விகள் என்ன என்பதை எழுப்பவில்லை.

முதலாளித்துவ வர்க்கமானது இறுதியில் UAW இன் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு எதிரான ஒரு தடையுத்தரவு மூலம் பதிலளித்தது. வேலைநிறுத்தப் போராட்டத்தை முடக்குவதற்கான ஒரு சாக்காக இதை அதிகாரத்துவம் வரவேற்றது.

இந்த போராட்டத்திலிருந்து ஏற்பட்ட முடிவுகளை எடுத்து, நாங்கள் எழுதினோம்:

கலிபோர்னியா பல்கலைக்கழக வேலைநிறுத்தப் போராட்டத்தின் முக்கிய பாடம் என்னவென்றால், தொழிலாள வர்க்கம் போருக்கு எதிரான அடிப்படை சக்தியாக மாற வேண்டும்… ஆனால் போருக்கு எதிரான போராட்டத்திற்கு தொழிலாள வர்க்கத்தின் முக்கியத்துவம், அது உற்பத்தியை நிறுத்தும் திறனைக் கொடுத்து இயக்கத்தின் சக்தியை அதிகரிக்கும் என்பது மட்டுமல்ல. மாறாக, முதலாளித்துவத்திற்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் போராட்டமானது போருக்கு எதிரான போராட்டத்தின் மையத்தில் உள்ளது, ஏனெனில் போரே முதலாளித்துவத்தின் நெருக்கடி மற்றும் முறிவின் விளைவாக இருக்கின்றது.

ஜனநாயகத்தின் நெருக்கடி 

ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்திற்கும் தொழிலாள வர்க்கத்தின் மீதான கட்சியின் தலையீட்டிற்கும் உள்ள தொடர்பு பற்றி தோழர் ஜெர்ரி மேலும் பேசுவார். ஆனால் நாம் வலியுறுத்திய அடிப்படை நோக்கம், குறிப்பாக ஜூலை 24ல் நடைபெற்ற பேரணி மற்றும் எங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில் சர்வாதிகாரம், பாசிசம் மற்றும் உலகப் போரை நோக்கிய உந்துதலுக்கு எதிராக போராடுவதற்கான ஒரே வழி, முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதுதான்.

அரசியல் நெருக்கடி தொடர்ந்து வெளிப்படுவதால், இதற்கு ஒரு சக்திவாய்ந்த பதில் கிடைக்கும் என்று நம்புவதற்கு பல காரணங்கள் உள்ளன. நிச்சயமாக, இதில் தொழிலாள வர்க்கத்தில் கட்சியின் பிரச்சாரங்களுக்கு கிடைக்கும் எதிர்வினை, சாமானியர் குழுக்களின் வளர்ந்து வரும் செல்வாக்கு மற்றும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே வளர்ந்து வரும் அரசியல் தீவிரமயமாக்கல் ஆகியவை அடங்கும்.

ஆனால் இந்த சாத்தியக்கூறுகளானது முதலாளித்துவத்தின் நெருக்கடி மற்றும் சீர்குலைவுக்குள்ளும் காணமுடியும். பைடென் இரண்டாம் உலகப் போரின் போது “ஜனநாயகத்தின் ஆயுதக் களஞ்சியம்” என்ற பிரச்சாரப் பெயரில் அழைக்கப்பட்டிருந்த தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் போர்க்கால கூட்டணியைப் பின்பற்ற விரும்புகிறார், ஆனால் அவர் எதிர்கொள்ளும் பிரச்சனை என்னவென்றால், 1940 களில் இருந்ததை விட இன்றைய அதிகார வர்க்கத்தினருக்கு தொழிலாளர்களுடனான உறவு முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது. அவர்கள் பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறும் தொழிலாளர்களிடமிருந்து வெறுக்கப்படுவதுடன் மற்றும் முற்றிலும் தொலைவில் உள்ளனர்.

ஜனநாயகக் கட்சியினருக்கும் இதையே கூறலாம். இன்று வழங்குவதற்கு புதிய ஒப்பந்தத் (New Deal) திட்டம் என்று எதுவும் இல்லை. மாறாக, ஒட்டுமொத்த ஆளும் வர்க்கமும் பாரிய சிக்கன நடவடிக்கைகளுக்குப் பின்னால் ஒருமனதோடு உள்ளது, உற்பத்தி மந்தநிலையையும் தூண்டுகிறது, அதே நேரத்தில் அவர்கள் உள்நாட்டுப் முன்னணியை போருக்கு தயார்படுத்த முயற்சிக்கின்றனர்.

இது திருப்தி அடைவதற்கான காரணம் அல்ல. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பூகோள மற்றும் உள்நாட்டு முரண்பாடுகள் சர்வாதிகாரத்தை நோக்கிய வளர்ச்சிக்கான புறநிலை அடிப்படையை உருவாக்குகின்றன. இது ட்ரம்ப் வருகையால் மிகவும் வெளிப்படையாக வெளிப்படுத்தப்படுகிறது, ஆனால் முழு உத்தியோகபூர்வ அரசியல் அளவின் முழுவதிலும் தொடர்கிறது.

இருப்பினும், இதே முரண்பாடுகள்தான் சோசலிசப் புரட்சிக்கான புறநிலை அடிப்படையாகவும் உருவாக்குகின்றன. ட்ரொட்ஸ்கி சுட்டிக்காட்டியதுபோல:

வரலாற்றின் விதிகள் அதிகாரத்துவ இயந்திரத்தை விட வலிமையானவை... காலப்போக்கில், வரலாற்றின் சக்கரத்தைத் தடுத்து நிறுத்த அவர்கள் மேற்கொள்ளும் நம்பிக்கையற்ற முயற்சிகள், பாட்டாளி வர்க்கத் தலைமையின் நெருக்கடியானது மனித குலத்தின் கலாச்சார நெருக்கடியாக மாறிவிட்டதை வெகுஜனங்களுக்கு மேலும் தெளிவாக எடுத்துக்காட்டும். இந்நெருக்கடியை நான்காம் அகிலத்தால் மட்டுமே தீர்க்க முடியும்.

அமெரிக்க முதலாளித்துவத்தின் முரண்பாடுகள் மிக அதிதீவிரமடைந்துள்ளன, அவற்றை ஒரு கீழ்த்தரமான சூழ்ச்சி அல்லது பொய்யான வார்த்தைகளால் மறைக்க இயலாது. தொழிலாளர் வர்க்கத்தில் புரட்சிகர இயக்கம் தோன்றுவதைத் தடுக்க நெடுங்காலமாக செயல்பட்டுவந்த அந்த சக்திகள், ட்ரொட்ஸ்கி எதிர்வு கூறியவாறே மேன்மேலும் நம்பகத்தன்மையை இழந்துவருகின்றன.

ஏப்ரலில், சிகாகோவில் லேபர் நோட்ஸ் (Labor Notes) அதன் இரு வருட மாநாட்டை நடத்தியது. மேலோட்டமாகப் பார்த்தால், இந்த மாநாடு சவாலுக்கு இடமில்லாத பலம் வாய்ந்த நிலையிலிருந்து நடப்பதைப்போல் தோன்றியது. எல்லாவற்றிற்கும் மேலாக, UAW மற்றும் டீம்ஸ்டர்கள் உட்பட “சீர்திருத்த” பிரிவுகள் என்று அழைக்கப்படுபவற்றின் உதவியளிப்பவர்கள் மூலம் லேபர் நோட்ஸ் (Labor Notes) அடிப்படையில் பல பெரிய தொழிற்சங்கங்களின் தலைமையில் செயற்படுகிறது. 

மாறாக, அது தொடங்கிய உடனேயே ஒரு புகைச்சலை உருவாக்கிவிட்டது. சிகாகோ மேயர் பிராண்டன் ஜான்சனின் (Brandon Johnson) தொடக்க உரையின் போது இனப்படுகொலைக்கு எதிரான போராட்டக்காரர்களை காவல்துறை கைது செய்தது. 2022 நிகழ்வின் முக்கிய பேச்சாளராக இருந்த டீம்ஸ்டர்ஸ் தலைவர் சீன் ஓ’பிரைன் (Sean O’Brien), இந்த ஆண்டு கலந்து கொண்டார், ஆனால் டிரம்ப் மற்றும் பாசிஸ்டுகளுடனான அவரது வெளிப்படையான உறவுகளின் காரணமாக இதில் பேசவில்லை. ஒரு இளம் பங்கேற்பாளர் UPS பணிநீக்கங்களைப் பற்றி ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்க முயன்றபோது அவர் உண்மையில் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டார்.

[Photo: WSWS]

லேபர் நோட்ஸ் இனப்படுகொலைக்கு எதிராக தன்னை அர்ப்பணிப்புடன் காட்டிக் கொள்வதில் மும்முரமாக இருந்தபோது, ​​மாநாடானது UAW தலைவர் ஷான் ஃபெயின் (Shawn Fain) உரையுடன் முடிவடைந்தது, இது மூன்றாம் உலகப் போருக்கு முழு ஆதரவாக இருந்தது. ஒரு குண்டுபோடுபவரின் புகைப்படத்துடன் கூடிய சட்டையை அணிந்திருந்த ஃபெயின், இரண்டாம் உலகப் போரின் போது தொழிலாளர்கள் செய்த அதே தியாகங்களைச் செய்யுமாறு தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்தார். அடிப்படையில் தொழிலாளர் குறிப்புகளின் பைபிள் ஆகவும், மேலும் UAW இன் கொள்கைகள் அனைத்திலும் பெரும் செல்வாக்கு செலுத்தும் ட்ரபிள்மேக்கர்ஸ் கையேட்டின் (Troublemakers Handbook) தனிப்பட்ட ஒரு நகலைப் பிடித்துக் கொண்டு, அவர் நினைத்ததை விட அதிகமாகச் உரையாற்றி முடித்தார்.

ஓ’பிரையனின் மற்றும் டீம்ஸ்டர்களின் பாதை சிறப்பு கவனத்திற்குரியது, ஏனெனில் குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் அவரது சமூகமளிப்பு போலி-இடதுகளை நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது. தொழிலாளர் இயக்க வரலாற்றில் மிகச்சிறந்த சீர்திருத்தவாதிகளில் ஒருவராக அவர்கள் போற்றிய நபர் இவர்தான். இப்போது அவர்கள் பல ஆண்டுகளாக ஒரு வெளிப்படையான பாசிஸ்டின் நற்சான்றிதழை மெருகேற்றியிருப்பது தெரிய வந்துள்ளது.

அவர்கள் தவிர்க்க முடியாமல் செய்வது போல, அவர்கள் பொறுப்பை தங்களிடம் இருந்து தொழிலாளர்களுக்கு மாற்ற முற்பட்டுள்ளனர். ஜக்கோபின் (Jacobin) பத்திரிக்கையின் ஒரு சமீபத்திய கருத்து, டிரம்பை ஆதரிக்கும் வலதுசாரி தொழிலாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்க ஓ’பிரையன் உரையை விளக்க முயற்சி செய்துள்ளது. உண்மையில், தொழிலாளர்கள் மத்தியில் வலதுசாரி ஆதரவைப் பெறுவதற்கு, இது தங்கள் ஆற்றல்கள் அனைத்தையும் அர்ப்பணித்து தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை நசுக்க இந்த சக்திகள் முழுப் பொறுப்பாக இருந்து வருகின்றன.

ஆனால் அவர்களின் முக்கிய கவலை என்னவென்றால், ஓ’பிரையன் குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் (RNC) தனது உரையை ஆற்றினார், ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டில் (DNC) உரையாற்றவில்லை என்பதுதான். அமெரிக்காவிற்கு எந்த விசுவாசமும் இல்லாமல், வேரற்ற சர்வதேச உயரடுக்குகளுக்கு எதிரான அவரது ஹிட்லரிய கூக்குரலை அவர்கள் முழுவதுமாக ஆதரித்தது மட்டுமல்லாது, அதை முதலாளித்துவ எதிர்ப்பு என்றும் முன்வைத்தனர்.

ஒரு குறிப்பிட்ட தர்க்கம் இங்கு நிகழ்த்தப்படுகிறது. தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் தேசியவாதமும் கம்யூனிச எதிர்ப்பும், அரசைச் சார்ந்திருப்பதும் தொழிலாள வர்க்கத்தின் மீதான அச்சமும், அதனை பாசிசத்திற்கான இயல்பான ஆதரவு தளமாக மாற்றுகிறது என்பதை நாம் நெடுங்காலமாக கவனித்து வருகிறோம்.

“ஏகாதிபத்திய சீரழிவின் காலகட்டத்தில் தொழிற்சங்கங்கள்” என்ற கட்டுரையில், ட்ரொட்ஸ்கி தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் இயல்பான தேவை குறித்து இவ்வாறு எழுதினார்: “முதலாளித்துவ அரசுடன் தங்களைத் தகவமைத்துக் கொள்ளவும், அதன் ஒத்துழைப்பைப் பெறுவதற்காகப் போராடவும்...

தொழிலாளர் அதிகாரத்துவமானது அமைதிக் காலத்திலும், குறிப்பாக போர்க் காலத்திலும், தாங்கள் எவ்வளவு நம்பகமானவர்கள் மற்றும் இன்றியமையாதவர்கள் என்பதை “ஜனநாயக” அரசுக்கு நிரூபிக்க, தங்களால் இயன்ற அளவு சொற்களாலும் செயல்களாலும் முயற்சிக்கின்றனர். தொழிற்சங்கங்களை அரசின் உறுப்புகளாக மாற்றுவதன் மூலம், பாசிசம் புதிதாக எதையும் கண்டுபிடிக்கவில்லை; அது வெறுமனே ஏகாதிபத்தியத்தில் உள்ளார்ந்த போக்குகளை அவற்றின் இறுதி முடிவுக்குக் கொண்டு செல்கிறது.

நிறைவுரை

கடந்த இரண்டு ஆண்டுகளில் கட்சியின் பணிகளை மதிப்பாய்வு செய்வதில், நாம் என்ன முடிவுகளை எடுக்க வேண்டும்?

முதலாவதாக, புறநிலை சமூக நிலைமைகள், அத்துடன் அமெரிக்காவையும் உலகையும் பற்றிக்கொண்டிருக்கும் மிகப்பெரும் அரசியல் மற்றும் சமூக நெருக்கடி, தொழிலாள வர்க்கத்தை சமூகப் போராட்டத்திற்குள் தள்ளுகிறது.

இரண்டாவதாக, கட்சியானது, அதன் நனவான தலையீட்டின் மூலம், நிலைமையில் உள்ளார்ந்த முற்போக்கான வாய்ப்புகளை  வெளிப்படுத்தி, ஒரு அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளது. அதே வேளையில், நமது அரசியல் எதிரிகள் நிச்சயமாக முற்றிலும் முடிவுக்கு வரவில்லை என்றாலும், அவர்களின் சொந்த செயல்கள் மூலமாகவும், உண்மையான சுயாதீன நிகழ்ச்சி நிரலுக்கான நமது போராட்டத்தின் மூலமாகவும் சிக்கலுக்குள்ளாகின்றனர்.

மூன்றாவதாக, தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்கள், ஆரம்பத்தில் பல சந்தர்ப்பங்களில் பணியிட நிலைமைகள் மற்றும் ஒப்பந்தப் பிரச்சினைகள் தொடர்பாக வெடித்தவை, இப்போது தீவிரமடைந்து வருகின்றன. மேலும் அரசியல் நெருக்கடியுடன் மேன்மேலும் வலுவாக இணைகின்றன. கட்சியின் பணியின் மூலம், தொழிலாள வர்க்கம் ஒரு நனவு கொண்ட, புரட்சிகர அரசியல் சக்தியாக மாற முடியும் மற்றும் மாற வேண்டும்.

நமக்கு உடனடியாக முன்னிருக்கும் காலகட்டத்தில் நாம் என்ன எதிர்பார்க்கலாம்? இப்போதிலிருந்து நவம்பர் தேர்தல் வரை பெரிய தொழில்துறைப் போராட்டங்கள் உள்ளன. போயிங் தொழிலாளர்கள் மற்றும் கிழக்குக் கடற்கரை துறைமுகத் தொழிலாளர்களுக்கான ஒப்பந்தங்கள் அடுத்த மாதம் முடிவடைகின்றன. மேலும், சிகாகோ, டெட்ராய்ட் மற்றும் நாடு முழுவதும் உள்ள பள்ளி மாவட்டங்களில் பெரும் வெட்டுக்கள் நிகழவுள்ளன.

என்ன நடக்கும் என்று நமக்கு துல்லியமாகத் தெரியவில்லை, ஆனால் புதிய போர்கள் வெடிப்பது மற்றும் சாத்தியமான நிதிய நெருக்கடி உள்ளிட்ட பேரதிர்ச்சிகளை நாம் எதிர்பார்க்க வேண்டும். இவை தொழிலாள வர்க்கம் தனது சொந்த வேலைத்திட்டத்துடன் தலையிட வேண்டிய தேவையை முன்னிறுத்தும்.

Loading