உக்ரேனிய சோசலிஸ்டும் நேட்டோவின் பினாமிப் போரின் எதிர்ப்பாளருமான போக்டன் சிரோட்டியுக்கை விடுதலை செய்!

ஏன் இந்தக் கோரிக்கை மனு மிக முக்கியமானது

உலக சோசலிச வலைத் தளத்தால் வெளியிடப்படுகிறது

ஏப்ரல் 25 வியாழக்கிழமையன்று, பாசிசவாத செலென்ஸ்கி ஆட்சிக்கும் நேட்டோவால் தூண்டப்பட்ட உக்ரேன்-ரஷ்யா போரிற்கும் எதிரான ஒரு சோசலிச எதிர்ப்பாளரான போக்டன் சிரோடியுக் தெற்கு உக்ரேனில் உள்ள அவரது சொந்த ஊரான பெர்வோமைஸ்க்கில் (Pervomaisk) உக்ரேனின் பாதுகாப்பு சேவை (SBU) ஆல் கைது செய்யப்பட்டுள்ளார்.

[Photo: WSWS]

25 வயதான மோசமான உடல்நலத்துடன் இருக்கும் போக்டன், ரஷ்ய நலன்களுக்கு சேவை செய்தார் என்ற மோசடிக் குற்றச்சாட்டுக்களின் பேரில் கொடூரமான நிலைமைகளின் கீழ் நிகோலேவ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். உண்மையில், போக்டன் முதலாளித்துவ புட்டின் ஆட்சிக்கும் உக்ரேன் மீதான அதன் படையெடுப்பிற்கும் விட்டுக்கொடுக்காத எதிர்ப்பாளர் ஆவார். அவர் உக்ரேன், ரஷ்யா மற்றும் முன்னாள் சோவியத் ஒன்றியம் முழுவதிலும் தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்காக போராடுகிறார்.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

இந்தக் குற்றச்சாட்டுக்களானது ஒரு போலியான நீதிமன்றத்தால் குற்றம் நிரூபிக்கப்பட்டால், போக்டனுக்கு 15 ஆண்டுகள் முதல் ஆயுள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று அச்சுறுத்தப்படுகிறது, இது மரண தண்டனைக்கு சமமாகும்.

இடதுசாரி இயக்கங்கள் மீதான செலென்ஸ்கியின் ஆட்சியின் மூர்க்கமான ஒடுக்குமுறைக்கு போக்டானின் கைது சமீபத்திய உதாரணமாகும். போருக்கு இடதுசாரி இயக்கங்களின் எதிர்ப்பு உக்ரேனிய தொழிலாள வர்க்கத்திற்குள் அதிகரித்து வரும் விடையிறுப்பைக் கண்டு வருகிறது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் (ICFI) உலக சோசலிச வலைத் தளமும் (WSWS.ORG) போக்டன் சிரோட்டியுக் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று கோரும் ஒரு உலகளாவிய பிரச்சாரத்திற்கு அழைப்பு விடுக்கின்றன. போக்டனின் விடுதலைக்கான போராட்டம் என்பது ஏகாதிபத்தியப் போர், இனப்படுகொலை மற்றும் பாசிசவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் ஒரு இன்றியமையாத கூறுபாடாகும்.

இந்தக் கோரிக்கை மனுவில் கையெழுத்திடுங்கள்

Loading