அனைத்து வாகனத் தொழிலாளர்களுக்கும் செயலூக்கமான ஒரு அழைப்பு: இந்த போராட்டத்தில் சாமானிய தொழிலாளர்கள் மட்டுமே வெல்ல முடியும்!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

கடந்த ஆண்டு UAW இன் தேசிய தேர்தல்களில் ஐக்கிய வாகன தொழிலாளர்களின் தலைவர் பதவிக்கு சோசலிச வேட்பாளராக போட்டியிட்ட வில் லேமன், மேக் ட்ரக்ஸில் ஒரு சாமானிய தொழிலாளி ஆவார்.

ஞாயிறு கிழக்கத்திய நேரப்படி மாலை 3 மணிக்கு இணையவழி கூட்டத்தில் சேரும்படியும் Big Three பெரிய மூன்று ஒப்பந்தப் போராட்டத்தில் தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கான சாமானிய தொழிலாளர்களின் மூலோபாயத்தைப் பற்றி விவாதிக்க கலந்துகொள்ள இங்கே பதிவு செய்யவும்.

(866) 847-1086 க்கு AUTO க்கு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் டெட்ராய்ட் மூன்று ஒப்பந்த போராட்டம் குறித்த உரை செய்தி புதுப்பிப்புகளுக்கு இங்கே பதிவு செய்யவும்.

எனது அனைத்து வாகனப் பணியாளர்களே, இன்னும் ஒரு வாரத்தில் வாகன ஒப்பந்தங்கள் காலாவதியாவது பற்றி உங்களிடம் நேரடியாகப் பேச விரும்புகிறேன்.

இந்த போராட்டத்தில் வெற்றி பெற தொழிலாளர்கள் உறுதியாக உள்ளனர். நீங்கள் Ford, GM, Stellantis, Mack Trucks, Lear அல்லது Dana இல் பணிபுரிந்தாலும் சரி, நாம் அனைவரும் ஒரே பிரச்சனைகளை எதிர்கொள்கிறோம்: அவை, உயர்ந்த பணவீக்கம், போதாத ஊதியம், நம்மைப் பிரிக்கும் அடுக்கு வேலை முறைகள், நீண்ட வேலை நேரம் மற்றும் ஆபத்தான பணியிடங்கள், பணிநீக்க அச்சுறுத்தல், வறுமையில் ஒரு ஓய்வு போன்றவை ஆகும்.

UAW தலைவர் ஷான் பெயினும் அவரது நிர்வாகமும் தாங்கள் “மறுபடியும் போராட்டத்தில்” இருப்பதாகவும், தங்களுக்கு முன் இருந்த ஊழல் அதிகாரிகளில் இருந்து தாங்கள் வேறுபட்டவர்கள் என்றும் கூறியுள்ளனர். COLA மற்றும் ஓய்வூதியங்களை மீட்டெடுக்க வேண்டும், 40 சதவீத ஊதிய உயர்வு மற்றும் வேலை நாளைக் குறைக்க வேண்டும் என்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை” தாங்கள் நிறுவனங்களிடம் கோருவதாக அவர்கள் கூறுகின்றனர்.

ஆனால், பெயினும் UAW தலைமையும் இந்தக் கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கான தங்களின் மூலோபாயம் பற்றி எதுவும் கூறவில்லை. நமக்குத் தேவையான எதற்காகவும் போராடும் எண்ணம் அவர்களிடம் இல்லை என்பதே இதற்குக் காரணம். மாறாக, பெயின் ஜனநாயகக் கட்சியை முன்னிறுத்தி ஊக்குவிக்கிறார். ஏனெனில் அவர்கள் நிறுவனத்தின் கோரிக்கைகளை தொழிலாளர்கள் மீது திணிக்க அவர்களுடன் கூட்டாக சதி செய்கிறார்கள்.

வேலைநிறுத்தம் நடைபெறும் என்று தான் நினைக்கவில்லை என்று திங்களன்று பைடென் கூறினார், பெயினும் UAW தலைமையும் அரசாங்கத்துடன் இணைந்து வேலைநிறுத்தத்தைத் தடுக்க அல்லது தனிமைப்படுத்தவும் மற்றும் நிறுவனங்கள் பரந்தளவில் வேலை வெட்டுக்களை மேற்கொள்ளவும் சதி செய்வது உண்மை என ஒப்புக்கொண்டார். புதனன்று, பெயின் வேலைநிறுத்தத்திற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பின்வாங்கத் தொடங்கினார் மற்றும் தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்புகளைக் குறைக்கவும் முயற்சி செய்யத் தொடங்கினார். UAW ஒரு விற்றுத்தள்ளலுக்கு (காட்டிக்கொடுப்புக்கு) தயாராகி வருகிறது என்பதை ஒப்புக்கொண்டார்.

2009-ல் நடந்ததை விட மோசமானதாக இருக்கக்கூடிய வேலைகள் மற்றும் ஊதியங்கள் மீதான தாக்குதலை நடத்துவதற்கு நிறுவனங்கள் உறுதியாக உள்ளன. அப்போது UAW-Chrysler பேரம்பேசும் குழுவின் உறுப்பினராக இருந்த பெயின் தாக்குதல்களுக்கு ஆதரவாக வாக்களித்தார்.

தற்போது அவர்கள் மின்சார வாகனங்களுக்கு மாறும்போது, நிர்வாகம் தங்கள் லாபத்தை அதிகரிக்க விரும்புகிறது, மற்றும் மின்சார வாகனங்களுக்கு மாற்றுவதற்கான செலவுகளை தொழிலாளர்களின் முதுகில் சுமத்த விரும்புகிறது. அமெரிக்காவில் மட்டும் பல்லாயிரக்கணக்கான அல்லது நூறாயிரக்கணக்கான வேலைகளை அழிக்க இந்த மாற்றத்தைப் பயன்படுத்த பெருநிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. உலகளவில் பாதி அல்லது அதற்கு மேற்பட்ட வாகன வேலைகள் நீக்கப்படலாம் என நிபுணர்கள் மற்றும் தொழில்துறை ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

UAW எந்திரம் இந்தத் திட்டங்களை தொழிலாளர்களிடம் இருந்து மறைத்து வருகிறது. பெயினின் கடுமையான பேச்சுக்கள் அனைத்திற்கும் பின்னால், UAW இன் முக்கிய அக்கறையாக இருப்பது மின்சார வாகனங்களுக்கான பேட்டரி ஆலைகளில் கால் பதித்து அதிக சந்தா பணத்தைப் பெறுவதுதான்.

கடந்த ஆண்டு UAW தலைவருக்கான எனது பிரச்சாரத்தை நான் தொடங்கியபோது, UAW இல் ஊழல் “ஒரு சில மோசமான ஆப்பிள்கள்” அல்ல என்று விளக்கினேன். தொழிலாளர்கள் ஒரு மாபெரும் கோர்ப்பரேட் சார்பு அதிகாரத்துவத்தை எதிர்கொள்கின்றனர். அந்த அதிகாரத்துவம் ரே கரி மற்றும் முந்தைய UAW தலைவர்களின் கீழ் இருந்ததைப் போலவே பெயினின் கீழும் தொடர்கிறது.

சக தொழிலாளர்களே, நாங்கள் கடுமையான போராட்டத்தை எதிர்கொள்கிறோம். நிறுவனங்கள் விருப்பப்பட்டு தொழிலாளர்களுக்கு ஒரு அங்குலமும் விட்டுக் கொடுக்கப் போவதில்லை.

பெயின் மற்றும் UAW அதிகாரத்துவம் ஒரு மூலோபாயத்தை முன்வைக்கவில்லை, ஆனால் எங்கள் போராட்டத்தின் கட்டுப்பாட்டை எடுப்பதற்கு சாமானிய தொழிலாளர்கள் முன் வைக்க வேண்டும். அதனால்தான், உங்கள் பணியிடத்தில் சாமானிய தொழிலாளர்கள் குழுக்களை உருவாக்கி, இந்த நடவடிக்கைகளுக்கான கோரிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்:

  1. வேலைநிறுத்த ஊதியத்தை வாரத்திற்கு $750 ஆக உயர்த்து
    வேலைநிறுத்த நிதியானது எங்களது சந்தா தொகையிலிருந்து $800 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளது. வேலைநிறுத்த ஊதியத்தை உயர்த்துவது என்பது நாங்கள் ஒரு உண்மையான போராட்டம் குறித்து தீவிரமாக இருக்கிறோம் என்ற செய்தியை நிறுவனங்களுக்கு அனுப்பும். அத்துடன், நிர்வாகத்தின் விதிமுறைகளின் அடிப்படையில் ஒப்பந்தத்தை ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் வரை தொழிலாளர்களை வறுமை ஊதியத்தில் இருந்து வெளியேற்ற முடியாது.
  2. அனைத்து தொடர்பு பேச்சுவார்த்தைகள் குறித்தும் சாமானிய தொழிலாளர்களின் மேற்பார்வை இருப்பதை உறுதி செய்ய வேண்டும்
    அனைத்து பேச்சுவார்த்தைகளிலும் சாமானிய தொழிலாளர்களின் உண்மையான கட்டுப்பாடு இருக்க வேண்டும். UAW தொழிற்சங்கம் வெளிப்படையானது என்று பெயின் கூறுகிறார், ஆனால் நிர்வாகம் மற்றும் வெள்ளை மாளிகையுடன் அவர்களின் பேச்சுக்கள் அனைத்தும் மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடக்கின்றன. அது நிறுத்தப்பட வேண்டும். நிறுவனங்கள் மூடத் திட்டமிட்டுள்ள ஆலைகளின் முழுப் பட்டியலும் வெளியிடப்பட வேண்டும், அத்துடன் ஒப்பந்தப் பேச்சுக்களில் UAW, நிர்வாகம் மற்றும் பைடென் இடையே பரிமாறிக்கொள்ளப்பட்ட அனைத்து ஆவணங்களும் வெளியிடப்பட வேண்டும்.
  3. செப்டம்பர் 14 அன்று நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்குத் தயாராகுங்கள்.
    பலனளிக்ககூடிய, எந்தவொரு வேலைநிறுத்தமும் மூன்று நிறுவனங்களிலும் உள்ள அனைத்து இடங்களையும் தாக்க வேண்டும். ஒரு சில ஆலைகளுக்கு மட்டுமே போராட்டத்தை தனிமைப்படுத்தப்படக் கூடாது. உதிரிப்பாக ஆலைகளில் உள்ள நமது சகோதர சகோதரிகளுடன் நாம் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும், அவர்கள் ஏற்கனவே UAW ஆல் திணிக்கப்பட்ட (நிர்வாக சார்பு) சலுகைகளைத் திரும்பப் பெற முயற்சிக்கின்றனர்.
  4. சர்வதேச அளவில் ஒருங்கிணைக்கப்பட்ட திருப்பி தாக்கும் போராட்டத்தை தொடங்குங்கள்! மின்சார வாகனங்கள் தொடர்பாக தொழிலாளர்களின் வேலைகள் மீதான தாக்குதல்கள் உலகளவில் நடைபெற்று வருகின்றன. ஜேர்மனி, ஸ்பெயின் மற்றும் இந்தியாவில் உள்ள ஃபோர்டு தொழிலாளர்கள் ஏற்கனவே ஆலை மூடல் அல்லது அபாரமான வேலை வெட்டுக்களுக்கு இலக்காகியுள்ளனர்.

    அமெரிக்க மற்றும் கனேடிய வாகனத் தொழிலாளர்களுக்கான ஒப்பந்தங்கள் சில நாட்களில் காலாவதியாகின்றன. மெக்சிகோ, ஜேர்மனி, துருக்கி மற்றும் பிற இடங்களில் உள்ள வாகனத் தொழிலாளர்கள் வேலை வெட்டுக்கள் மற்றும் சலுகைகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    அமெரிக்க வாகனத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் உடனடியாக உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களின் கவனத்தையும் ஆதரவையும் ஈர்க்கும். நாம் அதே நிறுவனங்கள் மற்றும் அதே ஆளும் வர்க்க மூலோபாயத்துக்கு எதிராக போராடுகிறோம் என்ற புரிதலின் அடிப்படையில், சர்வதேச அளவில் அனைத்து வாகனத் தொழிலாளர்களையும் தொழிலாள வர்க்கத்தின் மற்ற பிரிவுகளையும் ஐக்கியப்படுத்த நனவுடன் போராட வேண்டும்.

கடந்த ஆண்டு நடைபெற்ற UAW இன் தேசியத் தேர்தல்களில், நான் UAW அதிகாரத்துவத்தை ஒழிக்கும் திட்டத்தை முன்வைத்து, அனைத்து அதிகாரங்கள் மற்றும் முடிவெடுக்கும் அதிகாரம் கடைத் தளத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு மாற்றப்படவேண்டும் என்பதற்காக போட்டியிட்டேன்.

UAW தலைவர் பதவிக்காக வில் லெஹ்மனுக்கு தொழிலாளர்கள் ஆதரவு தெரிவிக்கின்றனர் [Photo: WSWS]

UAW அதிகாரத்துவம், UAW இன் கண்காணிப்பாளர் மற்றும் பைடென் நிர்வாகத்தின் ஆதரவுடன், தேர்தலில் வாக்களிக்கும் எண்ணிக்கையை நசுக்குவதன் மூலமும், நூறாயிரக்கணக்கான UAW உறுப்பினர்களின் வாக்குரிமையை மறுப்பதன் மூலமும், இந்தப் பிரச்சினைகள் பற்றிய விவாதத்தைத் தடுக்க முயன்றது. தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகள் மீதான இந்த நசுக்குதலை அம்பலப்படுத்தும் போராட்டத்தை நான் தொடர்ந்து நடத்தி வருகிறேன், மேலும் தேர்தலை மீண்டும் நடத்தக் கோரி தொழிலாளர் துறை மீது வழக்கு தொடர்ந்துள்ளேன்.

ஒப்பந்தப் போராட்டத்தைப் பற்றி நான் பேசிய சில தொழிலாளர்கள், பெயின் உண்மையில் அவர் என்ன செய்யப் போகிறார் என்பது குறித்து அவர் என்ன சொல்கிறாரோ அதை அவர் உண்மையில் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்கள். அல்லது குறைந்தபட்சம், அவர் செய்வாரா என்று காத்திருந்து பார்க்க விரும்புகிறார்கள்.

ஆனால், பெயின் நிர்வாகத்தால் எடுக்கப்பட்ட ஒவ்வொரு செயலும் ஏற்கனவே மற்றொரு விற்றுத்தள்ளல் நடக்குமா என்பதை காத்திருந்து பார்ப்பது தவறு என்பதை நிரூபிக்கிறது. அவர்கள் ஏற்கனவே கிளாரியோஸில் தொழிலாளர்களை விற்றுவிட்டார்கள், இந்தியானாவில் உள்ள லியர் தொழிலாளர்களை விற்க முயற்சிக்கின்றனர், மேலும் அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் Big Threeயில் தொழிலாளர்களை விற்றுவிடுவார்கள்.

பெயின் நிர்வாகம் உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்காக போராடுவதாக காட்டிக்கொண்டதற்கான ஒரே காரணம், தொழிலாளர்கள் மத்தியில் போராட்டத்திற்கான மகத்தான விருப்பத்தை அவர்கள் அறிந்திருப்பதால்தான். UAW அதிகாரத்துவம் தொழிலாளர்களை செயலற்ற பார்வையாளர்களாக மாற்ற விரும்புகிறது. ஆனால் உண்மையில் நமக்குத் தேவையானது தாக்குதலை நிறுத்துவது தான்.

பெயினைப் பற்றி நீங்கள் என்ன நினைத்தாலும், ஒரு போராட்டம் இருக்க வேண்டும் என்பதை நீங்கள் ஒப்புக்கொண்டால், அந்த போராட்டத்தை ஒழுங்கமைக்க இப்போதே முன்முயற்சி எடுத்து, இந்த முறை தோற்கடிக்கப்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு தளத்திலும் ஒவ்வொரு துறையிலும் சாமானிய தொழிலாளர் குழுக்களை உருவாக்குவதன் மூலம் நாம் ஒற்றுமையை நிலைநாட்ட முடியும்.

இந்த சாமானிய தொழிலாளர் இயக்கத்தில் சேருங்கள்: செய்தி புதுப்பிப்புகளைப் பெறவும், சாமானிய தொழிலாளர் குழுவுடன் தொடர்புகொண்டு விவாதிக்கவும் (866) 847-1086 AUTO இலக்கத்துக்கு குறும் செய்தி அனுப்பவும்.

Loading