இலங்கைப் பாராளுமன்றம் கொடூரமான “புனர்வாழ்வு” சட்டத்தை நிறைவேற்றியது

இத்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கை பாராளுமன்றம் புதன் அன்று புனர்வாழ்வு பணியக மசோதவை நிறைவேற்றியது. இந்த மசோதா, இராணுவம் , கடற்படை மற்றும் விமானப்படைக்கு புனர்வாழ்வு மையங்கள் எனப்படுவதை நடத்த அதிகாரம் வழங்குகின்றது. இந்தச் சட்ட மூலமானது மேலும் மேலும் வெறுக்கப்டுபடுகின்ற ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் ஆட்சிக்கு தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஏனைய அரசியல் எதிரிகளை இராணுவத்தால் இயக்கப்படும் தடுப்பு முகாம்களில் அடைத்துவைக்கும் இயலுமையை வழங்கும்.  

தேசிய அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டு, நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரைமைப்பு அமைச்சர் விஜயதாச இராஜபக்ஷவால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கபட்ட இந்த சட்ட மூலம், 23 வாக்குகள் ஆதரவுடனும் எதிராக 6 வாக்குகளுடனும் நிறைவேற்றப்பட்டது. 255 ஆசனங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் 29 பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே சமூகமளித்திருந்தனர்.

ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னிணியின் (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) பாராளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு அதரவாகவும், எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.) மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலையிமையிலான தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர்.

விவாதத்தின் போது ஐ.ம.ச. பாராளுமன்ற உறுப்பினர்கள் வாய்சவாடல் விமர்சனங்களை செய்த போதும், வாக்களிக்கும் வேளையில் கட்சியின் 54 பாராளுமன்ற உறுப்பினர்களில் ஐந்துக்கும் குறைவானவர்களே பாராளுமன்றத்தில் இருந்தனர். 

நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரைமைப்பு அமைச்சர் விஜயதாச இராஜபக்ஷ [Photo by Justice Media Division]

இந்தச்   மசோதாவின் அசல் வடிவம் செப்ரம்பர் 23 அன்று சமர்ப்பிக்கப்பட்ட போதிலும் சிவில் சமூக ஆர்வலர்கள் மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் உயர் நீதி மன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்ததன் மூலம் சாவாலுக்குட்படுத்தினர். நீதிமன்றம், இந்த மசோதா “அரசியலமைப்புக்கு முற்றிலும் விரோதமானது” எனத் தீர்ப்பளித்தது. இது நீதித் துறை அமைப்பின் சமீபத்திய வரலாற்றில் முன்னெப்போதுமில்லாத கண்டுபிடிப்பாகும்.

நீதிபதிகள், பெரும்பாலான முரண்பாடான சரத்துக்களுக்கு பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பாண்மையின் ஒப்புதல் தேவை என்றும், அந்தச் சரத்துக்கள் ஒரு தேசிய வாக்கெடுப்பின் மூலம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் ஆணையிட்டனர். இராணுவத்தால் நடத்தப்படுகின்ற இந்தப் புனர்வாழ்வு மையங்களுக்கு “முன்னாள் போராளிகள்”, “வன்முறை மற்றும் அதிதீவிரவாதக் குழுக்கள்” மற்றும் “ஏனைய குழுவினரையும்” அனுப்புவதற்கு அரசாங்கத்தை அனுமதிக்கும் விதிகளே நீதி மன்றத்தின் பிரதான கவலையாக இருந்தன. இந்தச் சரத்துக்களை நீக்கி இந்த மசோதா திருத்தப்பட்டால், மூன்றில் இரண்டு பாராளுமன்ற பெரும்பாண்மை மற்றும் வாக்கெடுப்பு இன்றி அதை நிறைவேற்ற முடியும் என நீதி மன்றம் பரிந்துரைத்தது.

தொடக்கதில் இருந்தே, அரசாங்கத்தின் இந்த புதிய சட்டத்துக்கும் போதைக்கு அடிமையானவர்களுக்கு “புனர்வாழ்வு” அளிப்பதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. மாறாக, தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் அரசியல் எதிரிகளை காலவரையறையின்றியும் எந்தவொரு நீதித் துறை தீர்மானம் இன்றியும் இராணுவத்தால் நடத்தப்படுகின்ற மையங்களில் அடைத்து வைப்பதே அதன் இலக்காகும்.

மசோதாவின் புதிய வடிவத்தை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்த அரசாங்கம், நீதி மன்றத்தின் பரிந்துரைகளுக்கு இணங்க மசோதாவைத் திருத்தியதாகவும், “போதைப் பொருள் சார்ந்த நபர்கள்” மற்றும் “சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட பிற நபர்களுக்கு” மட்டுப்படுத்தப்பட்டதாகவும் கூறிக்கொண்டது.

இந்த வார பாராளுமன்ற விவாதத்தில் சுட்டிக் காட்டியது போல், “சட்டத்தால் அடையாளம் காணப்பட்ட பிற நபர்கள்” என்ற சொற்தொடரின் உட்சேர்ப்பு, தெளிவற்ற மற்றும் அடையாளங்கூறமுடியாத வகையை அறிமுகப்படுத்துகின்றது. “சட்டத்தால் அடையாளங்காணப்பட்ட” என்பதன் அர்த்தம், “நீதித்துறை தீர்மானமா” அல்லது இல்லையா என்ற கேள்விக்கு பாராளுமன்றத்தில் தெளிவான பதில் கொடுக்கப்படவில்லை. இது, இந்த ஒடுக்குமுறைச் சட்டத்தின் வீச்சு மற்றும் அதன் பயன்பாட்டை விரிவுபடுத்துவதற்கான அடுத்தடுத்த திருத்தங்களுக்கான சாத்தியக் கூறுகளை பரந்தளவில் திறந்து விடுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷவுக்கு எதிரான 2022 ஏப்ரல்-ஜீலை வெகுஜன எழுச்சி பற்றிய அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சரவை அமைச்சர்களின் தொடர்ச்சியான சுட்டிக்காட்டல்கள், இந்தச் சட்டத்தை அரசியல் செயற்பாட்டாளர்களின் “புனர்வாழ்வு”க்காகப் பயன்படுத்தும் அவர்களின் நோக்கத்தை தெளிவாக்குகின்றது.

வியாழன் அன்று இந்தச் சட்டமூலத்துக்கு எதிராக குரல் எழுப்பிய சர்வதேச மன்னிப்புச் சபை, “மனித உரிமைகள் மீதான குறிப்பிடத்தக்க அடி” என விபரித்தது. இந்த மசோதா, பலாத்காரத்தைப் பயன்படுத்துவதன் ஊடாக “சுயவிருப்பமற்ற ’புனர்வாழ்வை’ அனுமதிப்பதாகவும் “போதைப்பொருள் பயன்படுத்துவோரின் வாழ்வையும் ஆரோக்கியத்தையும் ஆபத்தில் ஆழ்த்தும்” எனவும் அது குறிப்பிட்டது. 

உண்மையில், இராணுவத்தால் நடத்தப்படும் மையங்கள் போதைப்பொருள் புனர்வாழ்வு மையங்களாக இருக்காது, மாறாக, அரசியல் நோக்கங்களுக்காக் பயன்படுத்தப்படுத்தப்படும் சித்திரவதை முகாம்களாகவே இருக்கும். உயர் நீதி மன்றத்தால் பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்கள் கூட, இந்த இடங்களுக்கு அனுப்பப்படுகின்ற எவரேனும் கட்டாய உழைப்புக்கு உட்படுத்தப்படுவார்கள் மற்றும் அவர்களின் நடத்தையை ஒழுங்குபடுத்த “குறைந்தபட்ச பலம்” மற்றும் “அனுமதியளிக்கப்பட்ட” போதைப்பொருள் உபயோகத்துக்கும் உள்ளாக்கப்படுவார்கள் என குறிப்பிடுகின்றன.

சர்வதேச மன்னிப்பு சபையும் சுகாதார நிபுனர்களும் சுட்டிக்காட்டிய படி,  போதைப்பொருள் சார்ந்தவர்களின் புனர்வாழ்வுக்கு தொழிற்துறை உளவியலாளர்கள், மனோவியல் வைத்தியர்கள் மற்றும் ஏனைய சுகாதார நிபுனர்களால் வடிவமைக்கப்பட்ட தனிப்பட்ட திட்டங்கள் மற்றும் சமூகம்-சார்ந்த தன்னார்வ சிகிச்கைகள் அவசிமாகின்தே தவிர, அப்பட்டமான மனித உரிமைத் துஷ்பிரயோகங்களில் நீண்ட வரலாறு கொண்ட படையினரும் இராணுவமும் அல்ல.

கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மையம் [Photo by Facebook]

தற்போதுள்ள அரசாங்கம் நடத்தும் புனர்வாழ்வு மையங்களில் இருக்கும் கைதிகளின அவல நிலை, இந்த நிறுவனங்கள் கட்டாய உழைப்பு  முகாம்களே என்பதைத் தெளிவாக்குகினறன. அண்மைய கடந்த காலத்தில் இந்த மையங்களில் பல எழுச்சிகளும் கலவரங்களும் வெடித்தன.

பாதுகாப்பற்ற கொரோனா வைரஸ் நிலைகள் மீதான சீற்றமான போராட்டங்களைத் தொடர்ந்து, கடந்த ஜீன் மாதம், கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் 36 வயது கைதியொருவர் படையினரால் அடித்துக் கொல்லப்பட்டார். நூற்றுக்கணக்கான கைதிகள் போராட்டத்தின் போது தப்பியோடினர். தப்பியோடியவர்ளில் ஒருவர் பின்னர் ஊடகங்களுக்குத் தெரவிக்கையில், “நாங்கள் இங்கு சீர் திருத்தப்படுவதற்காக அனுப்பப்பட்டோம். ஆனால் அவர்கள் எங்களுக்கு சிகிச்சை அளிப்பதில்லை. அவர்கள் எங்களை கொன்றுவிடுகிறார்கள்,” என்றார்.

கைதிகள் மீது நடத்திய வன்முறைத் தாக்குதல்களுக்காக சில படையினர் கைது செய்யப்பட்டாலும், புதிய சட்டத்தின் கீழ், “பணியகத்திற்கு விதிக்கப்பட்ட அல்லது வழங்கப்பட்ட எந்தவொரு அதிகாரம், கடமை அல்லது இயக்கத்தை முன்னெடுக்கும், நிறைவேற்றும் அல்லது அமுல்படுத்தும் போது நல்ல எண்ணத்தில் செய்யப்பட்ட எதற்கும் சட்ட நடவடிக்கையில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. 

தனது அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்ட சிக்கன நடவடிக்கைக்கு எதிராக தொழிலாள வர்க்த்தின் எதிர்ப்பு வளர்ந்து வருவதை நன்கறிந்த விக்கிரமசிங்க, அரச எந்திரத்தை வேகமாகப் பலப்படுத்துகிறார்.

இராஜபக்ஷ வெளியேற்றப்பட்ட பின்னர் அதிகாரத்துக்கு வந்த விக்கிரமசிங்க, அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்குவதற்கு பொலிஸ் மற்றும் இராணுவத்தை அணிதிரட்டினார். நுற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே உட்பட மாணவத் தலைவர்களைக் கைது செய்ய கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும் பயன்படுத்தினார். முதலிகே ஐந்து மாதங்களுக்கும் மேலாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 

விக்கிரமசிங்க, நாடு முழுவதும் இராணுவத்தை விழிப்புடன் வைத்துள்ளதோடு மின்சாரம், சுகாதாரம் மற்றும் பெற்றோலிய தொழிலாளர்களின் தொழிற்துறை நடவடிக்கை மற்றும் போராட்டங்களைத் தடை செய்ய அத்தியவசிய சேவைகள் சட்டத்தையும் பயன்படுத்துகின்றார்.

எவ்வாறாயினும், தொழிலாள வர்க்கம் இந்த ஒடுக்குமுறை நடவடிக்கைகளை வேலை நிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களுடன் சவால் செய்தது. தனியார் மயமாக்கலுக்கு எதிராக ரெலிகொம் மற்றும் காப்புறுதிக் கூட்டுத்தாபன தொழிலாளர்களின் ஒரு நாள் வேலை நிறுத்தம் மற்றும் டிசம்பரில் மேலதிக நேரக் கொடுப்பனவு வெட்டுகளுக்கு எதிராக தேசிய அஞ்சல் ஊழியர்களின் வேலை நிறுத்தம் ஆகியவை இதில் அடங்கும். ஜனவரி தொடக்கத்தில், சம்பள உயர்வுகள்  மற்றும் தனி நபர் கடன்கள் மீதான உயர்ந்த வட்டி விகிதங்களைக் குறைக்கக் கோரி சுகாதார ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். இந்த ஆண்டு கிராமப் புறங்கள் உட்பட நாடு முழுவதும் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் ஆர்ப்பாட்டங்களும் அரசாங்கத்தின் ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராக ஆயிரக்கணக்கணக்கான மாணவர்களின் போராட்டங்களும் நடந்துள்ளன. 

2 நவம்பர் 2022 அன்று மாணவர் தலைவர்களை விடுதலை செய்யக் கோரி மாணவர்களும் இளைஞர்களும் கொழும்பில் நடத்திய போராட்டம். [Photo: WSWS]

புதன் அன்று நடைபெற்ற பாராளுமன்ற விவாதத்தின் போது, எதிர்க் கட்சி உறுப்பினர்கள் புதிய சட்டம் தொடர்பாக அரசாங்கத்தின் “பொருத்தமற்ற அவசரம்” என விமர்சித்ததோடு சமூச செயற்பாட்டாளர்களுக்கு எதிராக இதைப் பயன்படுத்துவது குறித்து கவலை தெவித்தனர். ஆனால் இந்தச் சட்ட மூலத்தின் மைய உந்துதலை எதிர்க்கவில்லை.

முன்னாள் இலங்கை இராணுவத் தளபதியும் ஐ.ம.ச.யின் பாராளுமன்ற உறுப்பினருமான சரத்பொன்சேகா, “மசோதாவில் அரசியல் அடக்குமுறைகள் இல்லையெனில், இந்த மசோதா பற்றி எமக்கு எந்த கேள்வியும் கிடையாது” எனக் குறிப்பிட்டார். வேறு வார்த்தையில் கூறுவதானால், அரசாங்கம் குறித்த பாதிப்புக்கு ஒரு அர்த்தமற்ற “உத்தரவாதத்தை” வழங்கினால் கூட, இதை ஆதரிக்க ஐ.ம.ச. தயாராக உள்ளது என்பதாகும்.

எதிர்க்கட்சிகளான ஐ.ம.ச. மற்றும் ஜே.வி.பி. போன்ற கட்சிகள் அதிகரத்தில் இருந்த போது, தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற வெகுஜனங்களுக்கு எதிரான அரச ஒடுக்குமுறைகளை ஆதரித்த சாதனை கொண்டவை ஆகும்.

சோசலிச சமத்துவக் கட்சி, இந்த புதிய “புனர்வாழ்வு” மசோதாவை எதிர்ப்பதோடு பொது மக்கள் பாதுகாப்புச் சட்டம், அத்தியவசிய பொதுச் சேவைகள் சட்டம், பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் எதேச்சதிகார நிறைவேற்று ஜனாதிபதி முறைமையுடன் சேர்த்து இதையும் ஒழிக்க அழைப்பு விடுக்கின்றது.

இத்தகைய ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டமும் சகல ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பும் சோசலிசத்துக்கான போராட்டத்துடன் பிணைந்துள்ளன. இந்தப் போராட்டத்தை கிராமப்புற ஏழைகளை அணிதிரட்டிக்கொண்டு தொழிலாள வர்க்கம் வழிநடத்த வேண்டும். நாம், சகல முதலாளித்துவ கட்சிகள் மற்றும் அவற்றின் தொழிற்சங்கங்களிடம் இருந்து பிரிந்து சுயாதீனமான நடவடிக்கைக் குழுக்களை ஒவ்வொரு வேலைத் தளங்கள், தொழிற்சாலைகள், சுற்றுப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் கட்டியெழுப்ப தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு அழைப்பு விடுக்கின்றோம்.

சோ.ச.க., சோசலிசக் கொள்கைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கத்தை கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தை முன்னெடுப்பதற்கு, தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளர்களின் நடவடிக்கைக் குழுக்களின் பிரதிநிதிகளால் கட்டியெழுப்பப்பட்ட, ஜனநாயகத்துக்கும் சோசலிசத்துக்குமான தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுஜனங்களதும் மாநாட்டை கூட்டுவதற்கு போராடுகின்றது. நாம், இந்தப போராட்டத்தில் இணைந்துகொள்ளுமாறு இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளை வலியுறுத்துகின்றோம்.

இலங்கை ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயத்திற்கு எதிராக நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் செய்தனர்

ஆயிரக்கணக்கான இலங்கை சுகாதாரத் தொழிலாளர்கள் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக வேலை நிறுத்தம் செய்தனர்

இலங்கை ஜனாதிபதி வரவு-செலவுத் திட்டம் சம்பந்தமாக 'கடுமையான முடிவுகளை' எடுக்கப்போவதாக அச்சுறுத்துகிறார்

Loading