இலங்கை தொழிற்சங்கம் வேலை நிறுத்தத்தைக் காட்டிக் கொடுத்த பின் கிளனுகி தோட்டத் தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்புகிறார்கள்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கையில் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள கிளனுகி தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், ஊதிய வெட்டுக்கள் மற்றும் தாங்கமுடியாத வேலை நிலைமைகளுக்கு எதிராக தாங்கள் முன்னெடுத்த வேலை நிறுத்தத்துக்கு தொழிற்சங்கங்கள் நிர்வாத்துடன் ஒத்துழைத்து குழிபறித்த பின்னர், நவம்பர் 14 அன்று தமது 18 நாள் வேலை நிறுத்தத்தை முடிவுக்குகொண்டுவர நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.

202 நவம்பரில் டீசைட் தோட்டத் தொழிலளாகர்கள் நடத்திய போராட்டம் [Photo: WSWS]

வேலைச்சுமை அதிகரிப்பு மற்றும் ஊதிய வெட்டுக்களை அமுல்படுத்த நிர்வாக எடுத்த முடிவை கைவிடக் கோரி, ஒக்டோபர் 27 கிளனுகி மற்றும் அதன் டீசைட் பிரவிலும் சுமார் 500 தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை தொடங்கினர். அதற்கு முன்னர் தீபாவளி பண்டிகை கொடுப்பவை ரூபா 15 ஆயிரத்தில் இருந்து ரூபா 10,000 ஆக வெட்டிக்குறைக்க தோட்டத்தை இயக்கும் மஸ்கெலியா தோட்டக் கம்பனியின் தீர்மானத்தையும் அவர்கள் எதிர்த்தனர்.

ஹட்டனில் உள்ள உதவித் தொழில் ஆணையாளர், தோட்ட முகாமையாளர், உள்ளுர் தொழிற் சங்கத் தலைவர்கள் மற்றும் சில தொழிலாளர்களின் பங்கேற்புடன் நவம்பர் 11 அன்று ஒரு கலந்துறையாடல் மேற்கொள்ளப்பட்டது. அதன் பின், தமது அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக முகாமையாளர் உறுதியளித்துள்ளதாக கூறி, தொழிற்சங்கத் தலைவர்கள் தொழிலாளர்களை வேலைக்குத் திரும்புமாறு கூறினர்.

நாளொன்றுக்கு 18 கிலோ தேயிலைக் கொழுந்து பறிக்கும் இலக்கை முன்னைய 16 கிலோ இலக்குக்குத் குறைக்க வேண்டும் என்பதும், நாளாந்தம் துப்பரவு செய்யும் 150 சதுர மீற்றர் நில இலக்கை 75 சதுர மீற்றராக குறைக்க வேண்டும் என்பதும் தொழிலாளர்களின் பிரதான கோரிக்கைகளாக இருந்தன. தொழிலாளர்கள் உயர்ந்த அளவினை அடைந்தால் மாத்திரமே நாளாந்த ஊதியமாக ரூபா 1,000 வழங்க முடியும் இல்லையேல் ஊதியங்கள் வெட்டப்படும் என தோட்ட நிர்வாகம் தெரிவித்தது.

தோட்டக் கம்பனிகள், தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் தொழிலாளர்களின் வருமானத்தை மேலும் அரித்தெடுக்க வடிவமைக்கப்பட்டுள்ள ”வருமானப்-பகிர்வு முறைகள்” என அழைக்கப்படுவதுடன் சேர்ந்து ஒவ்வொரு தோட்டத்திலும் இத்தகைய கடுமையான சுரண்டல் நிலைமைகளை அமுல்படுத்துகின்றன.

தொழிற்சங்கங்களின் படி, கிளனுகி தோட்ட முகாமையாளர் கொழுந்து பறிக்கும் இலக்கை 16 கிலோவாகக் குறைக்கவும் உயர்ந்த இலக்குகளின் இழக்கப்பட்ட அக்டோபர் மாத ஊதிய பாக்கிகளை வழங்கவும் உறுதியளித்துள்ளார்.

எவ்வாறாயிம், தொழிலாளர்கள் தங்களது சம்பளத்தை வாங்குவதற்கு நவம்பர் 11 மாலை நேரத்தில் சென்ற போது ஒக்டோபர் மாத பாக்கி கொடுப்பனவுகள் உள்ளடக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டது. கம்பனியின் ஏனைய தோட்டங்களில் 18 கிலோ இலக்கு பேணப்படுவதனால் வேலைச் சுமைகைளைக் குறைக்க முடியாது என முகாமையாளர் அறிவித்தார். இந்த நிலைப்பாட்டை தொழிற்சங்க பிரதிநிதிகள் ஆதரவளித்துள்ளனர்.

தொழிலாளர்கள், ஊதிய வெட்டுக்களை ஏற்க மறுத்து தமது வேலை நிறுத்தத்தை தொடர்ந்த போது, வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர தொழிற்சங்கங்கள் அவர்களுக்கு தீவிரமாக அழுத்தம் கொடுத்ததுடன் நிதிச் சுமை காரணமாக இறுதியாக திங்கள் அன்று தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்ப நிர்ப்பந்திக்கப்பட்டனர். இலங்கைத் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தங்களைத் தொடரவும் தொழிலாளர்களின் குடும்பங்களைத் தாங்கவும் அவர்களுக்கு பொருளாதார உதவிகளை வழங்குவதில்லை.

கிளனுகி வேலை நிறுத்தமானது தொழிற்சங்கங்களிடம் இருந்து சுயாதீனமாக வெடித்தது ஆகும். தொழிலாளர்கள் குறிப்பிடத்தக்க போர்க்குணத்தையும் உறுதியையும் வெளிப்படுத்தினர். எவ்வாறாயினும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.), தொழிலாளர் தேசிய சங்கம் ( தொ.தே.ச) ஆகியன, இந்த தொழிற்துறை நடவடிக்கையை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர உடனடியாகத் தலையீடு செய்ததுடன் தொழிலாளர்களைத் தனிமைப்படுத்தவும் ஒரு காட்டிக்கொடுப்பைத் தயாரிக்கவும் திட்டமிட்டு செயற்பட்டன.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் [Photo by Facebook]

ஒக்டோபர் 31 அன்று, உதவித் தொழில் ஆணையாளர் மற்றும் தொழிலாளர்களின் கோரிக்கை களை முழுமையாக மறுத்த தோட்ட முகாமையாளருடன் தொழிங்சஙகத் தலைவர்கள் ஒரு கலந்துறையடலை மேற்கொண்டனர். இ.தொ.கா. பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், கொழும்ல் நவம்பர் 8 அன்று நிர்வாகத்துடன் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளார் எனவும் அதில் சில தொழிலாளர்கள் கலந்துகொள்ள வேண்டும் எனவும் நவம்பர் 6 அன்று உள்ளுர் தொழிற்சங்கத் தலைவர்கள் அறிவித்தனர். எவ்வாறயினும், வேலைநிறுத்தககாரர்களின் குழுவொன்று கொழும்பு செல்வதற்கு தயாரான பின்னர், இந்த கலந்துறையாடல் இரத்து செய்யப்பட்டுள்தென நவம்பர் 7 அன்று தொழிற் சங்கம் அவர்களுக்கு தகவல் வழங்கியது. இந்த சுழ்ச்கிகள் தொழிலாளர்களை நம்பிக்கை இழக்கவும் நிராயுதபாணியாக்கவும் வடிவமைக்கபட்டுவை ஆகும்.

இந்தக் காட்டிக்கொடுப்பில் இருந்து கிளனுகி மற்றும் ஏனைய தோட்டத் தொழிலாளர்களும் படிப்பினைகளைப் பெற வேண்டும்.

முதலாவது, தொழிலாளர்கள் தமது மிக அடிப்படையான உரிமைகளைக் கூட பாதுகாக்க தொழிற்சங்கங்கள் மீது தங்கியிருக்க முடியாது. இலங்கை மற்றும் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிற்சங்கங்கள் முதலாளித்துவம் மற்றும் பெரு வணிகங்களின் முகவர்களாக மாறியுள்ளதோடு தொழிலாளர்கள் போராட்டத்தை அடக்கும் ஒரு தொழிற்துறைப் பொலிஸ் படையாகச் செயற்படுகின்றன.

இரண்டாவது, போர்க்குணமும் உறுதியும் போதாது. தொழிலாளர்கள், தொழிற்சங்கங்களில் இருந்து விலகி ஜனநாயரீதியான தெரிவுசெய்யப்பட்ட நடவடிக்கைக் குழுக்களை அமைப்பதன் மூலம், தமது சொந்தப் போராட்டங்களை கையில் எடுக்க வேண்டும். இத்தயை வேலைத்தள குழுக்கள் ஒரு பொதுவான போராட்டத்தில் ஒட்டுமொத்த இலங்கைத் தொழிலாளர்களுடன் பெருந்தோட்ட தொழிலாளர்களை ஐக்கியப்படுத்த போராடும்.

கிளனுகி தோட்ட தொழிலாளர்கள் நடவடிக்கைக் குழுவானது, வேலை நிறுத்தத்தை பாதுகாத்து இதே போன்ற தாக்குதல்களுக்கு முகங்கொடுக்கின்ற ஏனைய தொழிலாளர்களை அணிதிரட்டுவதன் ஊடாக இதை விரிவுபடுத்தப் போராடியது. கிளனுகி தோட்ட தொழிலாளர்கள் நடவடிக்கைக் குழுவானது, தொழிற்சங்கங்கள் காட்டிக்கொடுப்புக்குத் தயார் செய்கின்றன என எச்சரிக்கை விடுத்து நவம்பர் 10 அன்று ஒரு அறிக்கையை வெளியிட்டது.

கிளனுகி வேலை நிறுத்தம், பெருந்தோட்டத் தொழிலாளர்க தொடர்ச்சியாக நடத்தி வரும் வேலை நிறுத்தங்களில் சமீபத்தியதாகும். மஸ்கெலியாவில் ஒல்டன், தலவாக்கலையில் கட்டுக்கல மற்றும் ஹட்டனில் வெலிஓயா தோட்டங்களின் தொழிலாளர்கள், வேலைச்சுமை அதிகரிப்பு மற்றும் ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக சமீபத்தில் வேலை நிறுத்தங்களை முன்னெடுத்திருந்தனர்.

கிளனுகி தோட்டத்தில் நிலைமை மிகவும் பதட்டமாகவே உள்ளது. கோபம் நிறைந்த தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களின் காட்டிக்கொடுப்பு பற்றி உலக சோசலிச வலைத் தளத்துடன் பேசியதுடன் தமது கடினமாக வேலை நிலைமைகளையும் சமூக நிலைமைகளையும் விளக்கினர்.

டீசைட் தோட்டத்தைச் சேர்ந்த ஜெனட் மேரி கூறியதாவது: “டீசைட் பிரிவில் சகல தொழிலாளர்களும் எட்டு மணித்தியாலங்கள் வேலை செய்துகொண்டிருந்தாலும் எதிர்ப்பின் அடையாளமாக நாளாந்தம் பறிக்கும் தேயிலைக் கொழுந்தை 16 கிலோவாக மட்டுப்படுத்தியுள்ளனர். ரூபா 1,000 வழங்குவதற்கு 18 கிலோ பறித்தாக வேண்டும் என முகாமையாளர் கூறினார். அவர், எட்டு மணித்தியாலம் வேலை செய்வோருக்கு ரூபா 1,000 நாளாந்த ஊதியமாக வழங்கப்பட வேணடும் என்ற உதவி தொழில் ஆணையாளரின் கட்டளையை செயல்படுத்த மறுத்துள்ளார்.” நிர்வாகம் 16 கிலோவுக்கு ரூபா 1,000 ஊதியம் வழங்க மறுத்தால் தொழிலாளர்கள் மீண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என அவர் எச்சரித்தார்.

கிளனுகி பிரிவில் இருந்து மஞ்சுளா, வேலை நிறுத்தக்காரர்களை மீண்டும் வேலைக்குச் செல்ல நிர்ப்பந்தித்த பொருளாதார இன்னல்களை விளக்கினார். “தோட்டத்தில் நான், எனது கனவர் மற்றும் அவரின் சகோதரி என மூன்று பேர் எமது குடும்பத்தில் வேலை செய்கின்றோம். நாம் அனைவரும் ஒரே வீட்டிலேயே வசிக்கிறோம். எங்களுக்கு ஐந்து பிள்ளைகள் உள்ளனர், அவர்களுக்கு சாப்பாடு கொடுக்க எங்களது சகல நகைகளையும் அடகு வைக்க வேண்டியிருந்தது. அதனால் நாங்கள் வேலைக்கு மீண்டும் திரும்ப முடிவு செய்தோம்” என அவர் கூறினார்.

அதிகரித்துச் செல்லுகின்ற வாழ்க்கைச் செலவுகள் மற்றும் நாடாளாவிய உணவுப் பற்றாக்குகளின் சமயத்திலேயே ஊதியங்கள் மற்றும் நிலைமைகள் மீதான தாக்குதல்கள் தலைதூக்கியுள்ளன. இலங்கையில் வருடாந்த பணவீக்கம் ஒக்டோபரில் 75 சதவீதமாக உயர்ந்ததுடன் உணவு விலைகள் கடந்த வருடத்தை விடவும் 102 சதவீமாகவும் உயர்ந்துள்ளன.

கிளனுகி தோட்ட தொழிலாளர்கள் நடவடிக்கைக் குழுவின் மேற்கூறிய அறிக்கை விளக்கியவாறு:

கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் உக்ரைனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரைத் தொடர்ந்து உக்கிரமாக்கப்பட்டுள்ள, சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தின் மீதான பரந்த தாக்குதலின் ஒரு பகுதியாகவே தோட்டத் தொழிலாளர்கள் மீதான சுரண்டல் தீவிரமாக்கப்பட்டுள்ளது. உலக முதலாளித்துவ நெருக்கடியின் முழுச் சுமையையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்துவதை இலக்காகக் கொண்டு, ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்ட கொடூரமான சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தோட்டத் தொழிலாளர்களின் நடவடிக்கைக் குழுக்களை கட்டியெழுப்ப முன்முயற்சி எடுத்துள்ள சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) விளக்கியது போல், தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளை தொழிற்சங்கங்கள் மூலம் பாதுகாக்க முடியாது. அவை முதலாளிகள் மற்றும் முதலாளித்துவ அரசின் சார்பாக செயல்படும் ஒரு தொழில்துறை பொலிஸ் படையாகும்.

எனவே, கிளனுகி தோட்டத் தொழிலாளர் நடவடிக்கை குழுவானது ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்திற்கான அடிப்படையாக, தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக மேலும் நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்ப எங்களுடன் இணையுமாறு கிளனுகி தோட்டத்தில் உள்ள ஏனைய தொழிலாளர்களுக்கும் ஏனைய பெருந்தோட்டங்களில் உள்ள தொழிலாளர்களுக்கும் நாம் அழைப்பு விடுக்கின்றோம். இந்த குழுக்கள் கென்யா, இந்தியா, பங்களாதேஷ் மற்றும் சீனா போன்ற நாடுகளில் உள்ள தோட்டத் தொழிலாளர்கள் உட்பட இலங்கை மற்றும் சர்வதேச அளவில் உள்ள ஏனைய தொழிலாளர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளும்.

இந்தப் போராட்டத்தில், கிளனுகி தோட்டத் தொழிலாளர் நடவடிக்கை குழு, பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கிறது:

  • வருவாய்-பகிர்வு முறை வேண்டாம்.
  • அனைவருக்கும் 75,000 ரூபாய் மாத ஊதியம், வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப அதிகரிக்கும் ஊதிய உயர்வு, முழு ஓய்வூதிய உரிமைகள் மற்றும் முழு ஊதியத்துடன் கூடிய சுகயீன விடுமுறை வேண்டும்.
  • அனைத்து தொழிலாளர்களுக்கும் மருத்துவச் சலுகைகள் மற்றும் ஒவ்வொரு தோட்டத்திலும் உயர்தர மருத்துவ வசதிகள் வேண்டும்.
  • அனைவருக்கும் ஒழுக்கமான, வாழக்கூடிய வீடுகள் வேண்டும்.
  • ஓல்டன், கட்டுக்கலை மற்றும் வெலிஓயா தோட்டங்களில் இடைநிறுத்தப்பட்ட அனைத்து தொழிலாளர்களையும் நிபந்தனையின்றி மீண்டும் வேலையில் அமர்த்த வேண்டும், அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விலக்கிக்கொள்ள வேண்டும்.

சோசலிச சமத்துவக் கட்சி வலியுறத்தியது போல், இந்தக் கோரிக்கைகள், பெருந்தோட்டங்கள், பெரும் நிறுவனங்கள் மற்றும் வங்கிகளை தொழிலாளர் வர்க்கத்தின் ஜனநாயக கட்டுப்பாட்டிக் கீழ் தேசிய மயமாக்குதல் உள்ளடங்களாக சோசலிச வேலைத்திட்டத்துக்கான போராட்டத்தில் இருந்து பிரிக்கமுடியாவை ஆகும். அனைத்து வெளிநாட்டுக் கடன்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தன் சிக்கனக் கோரிக்கைகள் நிராகரிக்கப்படவேண்டும்.

நாம், தொழிலாளர் நடவடிக்கை குழுக்களை அடிப்படையாக்கொண்ட, ஜனநாயகம் மற்றும் சோசலிசத்துக்கான தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற வெகுஜனங்களின் மாநாட்டைக் கட்டியெழுப்ப சோசலிச சமத்துவக் கட்சியில் இணையுமாறு பெருந்தாட்டத் தொழிலாளர்களை வலியுறுத்துகின்றோம். இது வெகுஜனங்களின் உடனடித் தேவைகளை புர்த்தி செய்வதற்கு சோசலிச கொள்கைகளை அடுல்படுத்தும் ஒரு தொழிலாளர் விவசாயிகள் அரசாங்கத்துக்காக போராட வழி அமைக்கும்.

Loading