தொற்று நோய், முதலாளித்துவத்தி பூகோள நெருக்கடி, வர்க்கப் போராட்டங்களின் மீள் எழுச்சி மற்றும் இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் பணிகள்-பகுதி 1

இந்தமொழிபெயர்ப்பின்மூலக்கட்டுரையைஇங்குகாணலாம்.

மே 14-16, 2022 வரைஇணையவழியாக நடைபெற்ற இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) மூன்றாவது தேசியமாநாட்டில்ஏகமனதாகஏற்றுக்கொள்ளப்பட்ட பிரதான தீர்மானம் இதுவாகும். இதுமூன்று பகுதிகளாக வெளியிடப்படுகிறது.

சோசலிச சமத்துவக் கட்சி மாநாட்டில், 'இராஜபக்ஷ அரசாங்கத்துக்குஎதிரானவெகுஜனஎழுச்சியும் சோசலிச சமத்துவக் கட்சியின் பணிகளும்' என்றதலைப்பிலான அவசரத்தீர்மானமும்நிறைவேற்றப்பட்டது.

1. இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் மூன்றாவது தேசிய மாநாடு, கோவிட்-19 பெருந்தொற்று நோயை ஒழிப்பதற்கான விஞ்ஞான ரீதியான மூலோபாயத்திற்கும், ஏகாதிபத்திய போருக்கு எதிராக உலகத் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கும் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் (ICFI) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களின் சர்வதேசக் கூட்டணியை (IWA-RFC) கட்டியெழுப்பவதற்கும் உத்வேகத்துடன் போராடுவதற்கு உறுதிபூணுகின்றது.

2. 2020 முற்பகுதியில் வெடித்த கோவிட்-19 தொற்று நோயை, உலக வரலாற்றின் ஒரு “துண்டுதல் நிகழ்வு” என அனத்துலக குழு சரியான முறையில் பகுப்பாய்வு செய்தது. “தொற்று நோயின் அரசியல் படிப்பினைகளும் 2021 இல் சோசலிசத்துக்கான போராட்டமும் என்ற தலைப்பில், உலக சோசலிச வலைத் தளத்தில் ஜனவரி 4 அன்று வெளியான முன்னோக்கு விளக்கிய படி, தொற்றுநோயானது முதலாளித்துவத்தின் நெருக்கடி மற்றும் முரண்பாடுகளை ஆழமாக்கியுள்ளதோடு “நீண்ட காலமாக ஒடுக்கி வைக்கப்பட்டிருந்த, சமூக மாற்றத்திற்கான சக்திகளை கட்டவிழ்த்து விட்டுக்கொண்டிருக்கின்றது”.

2021 ஜூலையில் பிரேசிலில் பொல்ஸனாரோ அரசாங்கத்தின் கொலைகார கொள்கைக்கு எதிராக இடம்பெற்ற வெகுஜனப் போராட்டம் (Credit: Mídia Ninja)

3. தொற்று நோய் வெடித்ததில் இருந்து அனைத்துலக குழுவும் உலக சோசலிச வலைத் தளமும் மேற்கொண்ட பகுப்பாய்வுகளும் வேலைத்திட்டமும் முற்றிலும் நிரூபிக்கப்பட்டுள்ளன. உலகலாவிய இறப்பு எண்ணிக்கை ஐந்து மில்லியனைக் கடந்துள்ளதுடன் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 245 மில்லியனுக்கும் அதிமாக உயர்ந்துள்ளதோடு அதிகரித்துக்கொண்டும் செல்கின்றது. த எகோனொமிஸ்ட் சஞ்சிகை நவம்பரில் கணிப்பிட்டது போல், மட்டுமீறிய இறப்புக்களை சேர்த்தால் உண்மையான மரண எண்ணிக்கை 18.4 மில்லியனளவுக்கு அதிர்ச்சிகரமாக உயரும்.உலகமுதலாளித்துவத்தின்மையமானஅமெரிக்கா, ஐரோப்பியநாடுகள், லத்தீன்அமெரிக்கா, ஆபிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியாஆகியநாடுகளில்ஆபத்தானபிறழ்வுகள்மற்றும்மாறுபாடுகள் ஊடானகொடியவைரசின்பரவலும், நீண்டகாலத் தாக்கங்கள்பற்றிவளரும்பட்டியலும் இந்தத்தொற்றுநோய்க்குதேசியதீர்வு கிடையாது என்பதைஅடிக்கோடிட்டுகாட்டுகின்றன.

4. 1914 ஜூன் 28 அன்று ஆஸ்திரிய முடிக்குரிய இளவரசர் பேர்டினன்ட் மற்றும் அவரது மனைவியும் படுகொலை செய்யப்பட்டதன் பின்னரான தொடர்ச்சியான பழிவாங்கும் நடவடிக்கைகளை அடுத்து வெடித்த, முதலாம் உலகப் போருடன், புதிய கொரோனா வைரஸ் தொற்று நோயை அனைத்துலக குழு ஒப்பிட்டது. இந்தப் போரானது பல ஆண்டுகளாக ஒன்று திரண்ட உலக முதலாளித்துவத்தின் பொருளாதார மற்றும் புவி-சார் அரசியல் முரண்பாடுகளின் வெடிப்பை குறித்ததோடு மூல வளங்கள் மற்றும் சந்தைகளுக்கான ஐரோப்பிய சக்திகளின் போட்டியை கூர்மையாக வெளிப்படுத்தின. உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவினதும் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவருமான டேவிட் நோர்த் விளக்கியது போல்:

“போரிடும் முதலாளித்துவ சக்திகளின் ஆளும் வர்க்கத்தின் புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார நலன்கள், பேச்சுவார்த்தை மூலமான தீரவுக்கு அனுமதிக்காத காரணத்தால், போரின் பயங்கரங்கள் இருந்த போதிலும் அதை முடிவுக்கு கொண்டுவர முடிந்திருக்கவில்லை.”

“போர் முடிவுக்கு வர, சமூகத்தின் இயக்கத்தை முதலாளித்துவ ஆட்சியாளர்களின் கைகளில் இருந்து பறித்தெடுக்க வேண்டியிருந்தது. அதாவது அன்றைய அரசாங்களின் கட்டளையின் கீழ் இருந்த இராணுவங்களை விடவும் பாரிய படையை அணிதிரட்ட வேண்டியிருந்தது. அதாவது போரிடும் அனைத்து நாடுகளிலும் உள்ள தொழிலாளர் வர்க்கத்தை அணிதிரட்ட வேண்டியிருந்தது. புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தினால் ஆயுதபாணியாக்கப்பட்ட சர்வதேச தொழிலாளர் வர்க்கமானது போருக்கு எதிராக ஒரு போரை முன்னெடுக்க வேண்டியிருந்தது. அதுவே லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் முன்னோக்காக இருந்தது…” (“2021 மே தினமும் பூகோள வர்க்கப் போராட்டமும்”, மே 2, 2021).

ரஷ்யாவில் தொழிலாள வர்க்கமானது லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியால் வழிநடத்தப்பட்ட போல்ஷிவிக் கட்சின் தலைமைத்துவத்தின் கீழ் ஒரு சுயாதீன அரசியல் சக்தியாக எழுச்சியில் தலையீடு செய்து, அந்த நாட்டில் அதிகாரத்தைக் கைப்பற்றி, உலகின் சோசலிச மாற்றத்திற்கான பணியை தொடங்கியது. இன்று, உற்பத்தியின் பூகோளமயமாக்கத்தின் கீழ் முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் சர்வதேசமயமாக்கபட்ட தொழிலாளர் வர்க்கம், ஏகாதிபத்திய நாடுகளிலும், அதே போல் இந்தியா மற்றும் இலங்கை போன்ற முதலாளித்துவ அபிவிருத்தி காலதாமதமான நாடுகளிலும், முதலாளித்துவத்தின் மிகவும் முற்றிப்போன அமைப்புரீதியான நெருக்கடியின் மத்தியில், போராட்டங்களில் இணைந்துகொண்டுள்ளதுடன் முதலாளித்துவத்தை தூக்கிவீசி உலகத்தின் சோசலிச மாற்றத்திற்கான பாதையை எடுக்கின்ற அதே பணியையே எதிர்கொள்கின்றது.

5. இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் கண்டிராத ஒரு பூகோளப் பேரழிவில், மில்லியன் கணக்கானோர் தமது தொழில்கள் மற்றும் வருமானத்துக்கான வழிகளை இழந்துள்ளதோடு வறுமை, பட்டினி மற்றும் மரணத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த தொற்றுநோய்க்கு முன்பே கூட, 6.9 பில்லியன் உலக சனத் தொகையின் செல்வத்தை விடவும் இரு மடங்குக்கும் அதிகமான செல்வத்தை அதிபணக்கார 1 சதவீதமானோர் தம் வசம் வைத்திருந்த நிலையில், உலகலாவிய சமூக சமத்துவமின்மை ஆழமடைந்திருந்தது. உலக செல்வந்தர்களின் கூட்டுச் சொத்தானது 8 றில்லியன் டொலர்களில் இருந்து 13.1 றில்லியன் டொலர்களாக 60 சதவீத்தால் அதிகரித்துள்ளது. 10 அதிபணக்காரர்களால் பதுக்கி வைக்கப்பட்டுள்ள 540 பில்லியன் டொலர் செல்வமானது, “வைரஸ் காராணமாக புமியில் உள்ள எவரும் வறுமைக்குள் விழுவதைத் தடுக்கவும் அனைவருக்கும் கோவிட்-19 தடுப்புசிக்கு பணம் செலுத்தவும் போதுமானது” என ஜனவரியில் வெளியான ஒக்ஸ்ஃபாம் அறிக்கை கூறுகின்றது.

6. பெருந்தொற்றுக்கு பதிலிறுப்பாக முதலாளித்துவ வர்க்கம் முன்னெடுத்த கொலைகார கொள்கைகளின் விளைவுகளே பாரிய உயிரிழப்புகளும் பரந்த சமூக சமத்துவமின்மையும் ஆகும். அவர்கள், வைரஸ் தடுக்கப்படாமல் பரவினால் அது இறுதியில் தானாகவே அழிந்து விடும் என கூறுகின்ற “சமூகத்தில் நோய் எதிர்ப்பு சக்தி பெருக்கம்” என்ற கொள்கையைப் பின்பற்றினர். தடுப்பூசி மற்றும் முகக் கவசம் ஊடாக தொற்று நோயின் தாக்கத்தை “தணிப்பது” ஆளும் வர்க்கத்தின் மற்றைய மூலோபாயம் ஆகும். இது நடைமுறையில், சமூகத்தில் நோய் எதிர்ப்பு சக்தி பெருக்குதல் எனப்படுவதை மெருகூட்டுவது மட்டுமே என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதுடன் உலகை மூழ்கடித்த வெகுஜன தொற்றுக்கள் மற்றும் மரணங்களின் அலை அதற்கு ஆதாரம் காட்டியுள்ளது. இந்தக் கொள்கைகளின் கீழ், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடியின் அதி-வலது அரசாங்கம் உட்பட உலகெங்கிலும் உள்ள ஆட்சிகள், பாதுகாப்பற்ற நிலைமைகளின் கீழ் பொருளாதாரங்களையும், பாடசாலைகளையும் மீண்டும் திறந்துவிட்டுள்ளன. மனித உயிர்களை விட இலாபத்துக்கு முன்னுரிமை கொடுத்தல் என்பதே, மரணங்களை வழமையாக்குதல் என்ற முதலாளித்துவ வர்க்கத்தின் கொள்கையை தீர்மானிக்கின்றது. மார்க்ஸ் கூறியது போல், “ஓய்வே இல்லாத, முடிவுக்கே வராத இலாபம் ஈட்டும் செயன்முறை மட்டுமே முதலாளித்துவத்தின் நோக்கமாகும். (மூலதனம், முதல் பாகம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக், 211).

7. சமூகத்தில் நோய் எதிர்ப்பு சக்தி பெருக்கம் மற்றும் தணித்தல் ஆகிய மூலோபாயங்களுக்கு நேர்மாறாக, தொற்று நோயை முடிவுக்கு கொண்டு வரும் விஞ்ஞான ரீதியான மூலேபாயத்தை அனைத்துலகக் குழு முன்நிறுத்துகிறது. முதல்நிலை தொற்று நோயியல் நிபுணர்கள், வைரலொஜிஸ்ட்கள் மற்றும் ஏனைய விஞ்ஞானிகளாலும் அபிவிருத்தி செய்யப்பட்ட கொள்கைகளையும், கோவிட்-19 வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான நடவடிக்கையில் அடங்கியுள்ள ஒவ்வொரு ஆயுதத்தையும் உலகளவில் ஒருங்கிணைத்து பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் இந்த மூலோபாயம் அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது. தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் கூட்டுத்தாபன நிறுவனங்கள் இலாபத்திற்கு முன்னுரிமை வழங்கும் அதேவேளை அவை அடித்தளமாகக் கொண்டுள்ள நாடுகள் தடுப்பூசி தேசியவாதத்தை பின்பற்றுகின்றன.

8. சர்வதேச தொழிலாள வர்க்கம் தொற்றுநோயால் உருவாக்கப்பட்ட பேரழிவுகரமான சமூக நிலைமைகளுக்கு எதிராக போராடத் தொடங்கியுள்ளது. 2021 ஒக்டோபர் 1 மற்றும் 15 ஆம் திகதிகளில் பிரித்தானியாவில் பாடசாலையை மீண்டும் திறப்பதற்கு எதிராக வேலை நிறுத்தம் செய்வதற்கு இங்கிலாந்து பெற்றோரான லீஸா டியஸ் தலைமையில் விடுக்கப்பட்ட அழைப்புக்கு சர்வதேச அளவில் ஆசிரியர்கள் மற்றும் ஏனைய தொழிலாளர்கள் மத்தியில் திரண்ட ஆதரவானது சர்வதேச வர்க்கப் போராட்டத்தில் ஒரு திருப்பு முனையைக் குறிக்கின்றது. மினசோட்டாவில் ஜோர்ஜ் புளொயிட் பொலிசாரால் படுகொலை செய்யப்பட்டதற்கு எதிராக சர்வதேச அளவில் வெடித்த எதிர்ப்பு இயக்கம்; அமெரிக்காவில் சர்வதேச ஆதரவைப் பெற்ற வொல்வோ மற்றும் டனா இயந்திரத் தொழிலாளர்களின் குறிப்பிடத்தக்க போராட்டங்கள்: இலங்கையில் 250,000 ஆசிரியர்களின் வேலை நிறுத்தங்கள் உட்பட பல நாடுகளில் ஆசிரியர்களின் போராட்டங்களும் அவற்றில் அடங்கும். இந்தப் போராட்டங்கள், வர்க்கப் போராட்டங்களை தடுத்து அடக்குவதற்கு முயற்சிக்கும் முதலாளித்துவ-சார்பு தொழிற் சங்கங்களின் இரும்புப் பிடியை மீறி அல்லது அதற்கு எதிராக அபிவிருத்தியடைந்தன.

9. சர்வதேச வர்க்கப் போராட்டங்களின் அபிவிருத்தியானது தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களின் சர்வதேசக் கூட்டணியை அமைக்க அனைத்துலக குழு விடுத்துள்ள சக்தி வாய்ந்த அழைப்பின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது. “இவை உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளவும் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பை கோருவதற்கும் பாதுகாப்பற்ற ஆலைகள் மற்றும் அத்தியவசியமற்ற உற்பத்திகளை மூடவும் மற்றும் வைரஸ் பரவலை நிறுத்துவதற்கு அவசியமான பிற அவரச நடவடிக்கைகளையும் கோரி ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தை ஒழுங்மைப்பதற்குமான ஒரு வழி முறையாக இருக்கும்” என, 23 ஏப்ரல் 2021 அன்று “தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச கூட்டணிக்கான முன்நோக்கு” என்ற தலைப்பில் அனைத்துலகக் குழு வெளியிட்ட அறிக்கை பிரகடனம் செய்தது.

தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களின் சர்வதேசக் கூட்டணி ஆனது, “தொழிலாளர் வர்க்கத்தை மோதிக்கொள்ளும் பிரிவுகளாக பிளவுபடுத்துவதற்கு முதலாளித்துவ அரசாங்கங்களும் எண்ணற்ற தேசியவாத, இனவாத, பேரினவாத மற்றும் அடையாள அரசியலின் பிற்போக்கு ஆதரவாளர்களும் முன்னெடுக்கும் ஒவ்வொரு முயற்சியையும் எதிர்த்து, ஒரு பொதுவான உலகளாவியப் போராட்டத்தில் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்கு முயற்சிக்கும்…

“தொற்று நோய்க்கு, மற்றும் போர், சமத்துவமின்மை, சுரண்டல் மற்றும் சர்வதிகாரத்துக்கு எதிரான போராட்டமானது ஒட்டுமொத்த முதலாளித்துவ சமூக மற்றும் பொருளாதார ஒழுங்கிற்கு எதிரான போராட்டம் ஆகும். அதிகாரத்தைக் கைப்பற்றவும், தன்னல செல்வந்த குழுக்களை அபகரிக்கவும், தனியார் இலபத்துக்காக அன்றி சமூகத் தேவைக்கு சேவை செய்யும் நோக்கிற்காக, உற்பத்திகளை பகுத்தறிவுடனும் விஞ்ஞான ரீதியிலும் மற்றும் ஜனநாய ரீதியிலும் கட்டுபடுத்துவதை அடித்தளமாக கொண்ட ஒரு சோசலிச சமூகத்தை ஸ்தாபிப்பதற்கு, அனைத்து நாடுகளிலும் உள்ள தொழிலாளர்களையும் ஒரு பொதுவான அரசியல் எதிர்த் தாக்குதலில் ஒன்றுபடுத்த வேண்டும்.”

10. பூகோள ரீதியில், இந்த நெருக்கடி மற்றும் தொழிலாள வர்க்கப் போராட்டங்களின் எழுச்சி அலைகள் சம்பந்தமாக ஆளும் வர்க்கங்களின் பதிலிறுப்பானது சர்வதிகார ஆட்சி வடிவங்களுக்குத் திரும்புவதாகவே உள்ளது. இந்தத் திருப்பம் உலக முதலாளித்துவத்தின் மையமான அமெரிக்காவில் கூர்மையாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஜனவரி 6 அன்று முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், 2020 ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை துக்கி எறியும் நோக்கில் காங்கிரஸ் கட்டிடத்தின் மீதான ஒரு குண்டர் தாக்குதலைத் துண்டிவிட்டு பாசிச ஆட்சிக் கவிழ்ப்புக்கு முயற்சித்தார். இந்த சதி முயற்சிக்கு ட்ரம்பினது குடியரசுக் கட்சி, அதி-வலது சக்திகள் மற்றும் அரச இயந்திரத்தின் பிரிவுகளின் ஆதரவும் இருந்தது. இந்த சதிகாரர்கள் மீண்டும் அதிகாரத்துக்கு வர முயற்சிக்கின்றனர். இந்த அபிவிருத்தியானது அமெரிக்காவில் ஜனநாயகத்தின் நீண்ட கால நெருக்கடி மற்றும் ஆழமான சமூக சமத்துவமின்மையில் வெளிப்படுத்தப்பட்ட சமூக முரண்பாடுகளின் உச்ச கட்டமாகும். அபிவிருத்தியடந்து வருகின்ற சமூக எதிர்ப்பால் பீதியடைந்துள்ள அமெரிக்க ஆளும் வர்க்கமானது தொழிலாள வர்க்கத்தை நசுக்க முயற்சிக்கின்றது. இந்த எதிர்- புரட்சிகர முயற்சியில் இரு கட்சி வர்க்க ஒற்றுமையானது சதித் திட்டத்தை மூடி மறைக்க ஜனநாயக கட்சியும் பைடன் நிர்வாகமும் எடுக்கும் முயற்சியில் பிரதிபலித்தது. இந்த பாசிச மற்றும் ஜனாதிபதி சரிவதிகார அச்சுறுத்தலுக்கு எதிராக தொழிலாளர் வர்க்கத்தை அணி திரட்டுவதற்கு ஒரு புரட்சிகர வேலைத்திட்டத்தை வழங்கி, ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை அம்பலப்படுத்திய ஒரே ஒரு கட்சி, அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே ஆகும். இது ஒரு கடந்து போகின்ற நிகழ்ச்சியோ அல்லது தனியான அமெரிக்க நிகழ்வோ அல்ல. இது இலங்கை உட்பட ஒவ்வொரு நாட்டிலும் உள்ள ஆளும் வர்க்கங்களை மேலும் வலது பக்கம் நகர்வதற்கு ஊக்குவித்தது.

11. தொற்று நோய் நெருக்கடியில் மூழ்கியுள்ள ஏகாதிபத்திய சக்திகள் தமது புவிசார் அரசியல் நலன்களை முன்னேற்ற முயற்சிக்கின்றன. பல தசாப்தங்களாக இழந்த உலக மேலாதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டும் அதன் முயற்சியின் பாகமாக, வாஷிங்டன் அதன் முக்கிய போட்டியாளராக சீனாவையும் ரஷ்யாவையும் இலக்கு வைக்கின்றது. யூரேசிய நிலப்பரப்பில் ஆதிக்கம் செலுத்துவதை இறுதி இலக்காகக் கொண்டு, மத்திய கிழக்கில் எண்ணெய் மற்றும் எரிவாயு உட்பட மூலவளங்களையும் சந்தைகளையும் கட்டுப்படுத்துவதற்கான அதன் உந்துதலில், இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்ற பொய் பதாதையின் கீழ், ஆப்கானிஸ்தான் மீது வாஷிங்டன் படையெடுத்தது. ஆகஸ்ட் மாதத்தில் வாஷிங்டன்-ஆதரவு காபூல் ஆட்சியின் சரிவு, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஒரு வரலாற்றுத் தோல்வியை குறிக்கின்றது. அமெரிக்க-சார்பு தாய்வானைப் பயன்படுத்திக்கொண்டு, சீனாவுக்கு எதிரான தனது ஆத்திரமூட்டல்களில் வெளிப்படுத்தியவாறு, இந்தத் தோல்வி வாஷிங்டனின் மேலாதிக்க உந்துதலை குறைக்கவில்லை, மாறாக தீவிரப்படுத்தியுள்ளது. ட்ரம்ப் செய்ததைப் போலவே, பைடனும், கொரோனா வைரஸின் தோற்றம் மற்றும் உலகளாவிய பரவலுக்கு பெய்ஜிங்கை குற்றம்சாட்டி, பொய்யான வுஹான் ஆய்வகக் கோட்பாட்டை பின்பற்றுகின்றார். செப்டெம்பரில், அமெரிக்காவானது ஐக்கிய இராச்சியத்துடன் சேர்ந்து அணுசக்தி நீர் மூழ்கிக் கப்பல் தொழில் நுட்பத்துடன் ஆஸ்திரேலியாவை அணைத்துக்கொள்ள அதனுடன் ஒரு உடன்படிக்கையை (AUKUS) எட்டின. ஒரு நாற்புற இராணுவ கூட்டணியில் (QUAD) புது டில்லியை ஆயுதபாணியாக்கி அதை ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பானுடன் அணிசேர்த்துக்கொண்டு, சீனாவுக்கு எதிரான தனது நகர்வில் இந்தியாவை முண்ணனி நாடாக அமெரிக்கா அரவனைத்துக்கொண்டுள்ளது.

பெய்ஜிங்கில் உள்ள தேசியவாத ஸ்ராலினிச செல்வந்த தன்னலக்குழு, அதன் சொந்த மூலோபாய மற்றும் பொருளாதார வலிமைகளைக் கட்டியெழுப்புவதன் மூலமும், அமெரிக்காவை எதிர்கொள்ள முயற்சிக்கின்றது. இதன் ஒரு பகுதியாக அது பெல்ட் அன்ட் ரோட் (Belt and Road Initiative) முன்முயற்சியை அபிவிருத்தி செய்கின்றது. ஐரோப்பிய நாடுகளுக்கு பொருளாதார மற்றும் வர்த்தக தடைகளை விதிக்கும் வாஷிங்டனின் அச்சுறுத்தலுக்கு மத்தியில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சக்திகளுக்கு இடையில் புகோள அரசியல் பதட்டங்கள் அதிகரித்துச் செல்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தின் முதுகுக்குப் பின்னால் AUKUS உடன்படிக்கையில் கையெழுத்திடுவதானது அட்லாண்டிக் முழுவதும், குறிப்பாக பிரான்ஸ் மற்றும் அமரிக்கா இடையில் பதட்டங்களை மேலும் ஆழமாக்கியுள்ளது. இவ் அபிவிருத்திகள் பூகோளப் போட்டியின் முன்னெப்போதும் இல்லாத தீவிரமாதலையும் ஒரு பேரழிவுகரமான பூகோள அணு ஆயுதப் போரின் அச்சுறுத்தலையும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது.

12. உலக முதலாளித்துவ நெருக்கடி மற்றும் மோதல்களின் அடிப்பகுதியில் உலக முதலாளித்துவ முறைமையின் அடிப்படை முரண்பாடுகளே உள்ளன -அதாவது, பூகோளமயமான உலகப் பொருளாதாரத்துக்கும் தேசிய அரச முறைமைக்கும் இடையிலான முரண்பாடும், மற்றும் சமூகமயமாக்கப்பட்ட உற்பத்திக்கும் உற்பத்திச் சக்திகளின் தனியார் உடமைக்கும் இடையிலான முரண்பாடுகளும் ஆகும். மூன்றாம் உலகப் போரின் ஆபத்து, உலகலாவிய தொற்று நோய் மற்றும் சமூகப் பேரழிவையும், சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தை அணி திரட்டுவதன் மூலம் மட்டுமே தடுக்க முடியும். அதாவது 2016 பெப்ரவரி 18 அன்று வெளியிடப்பட்ட சோசலிசமும் போருக்கு எதிரான போராட்டமும் என்ற அறிக்கையில் அனைத்துலகக் குழுவால் அபிவிருத்தி செய்யப்பட்ட பாதையில் சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு சோசலிச இயக்கத்தை கட்டியெழுப்புவதன் மூலமே தடுக்க முடியும்.

சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டமையும் அதன் தாக்கங்களும்

13. ஆளும் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதில் இருந்து 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை கடந்த டிசம்பர் குறிக்கின்றது. இப்பொழுது சர்வதேச அளவில் முதலாளித்துவத்திற்கு எதிரான தீர்க்கமான போர்களுக்கு வந்துகொண்டிருக்கும் தொழிலாள வர்க்கத்திற்கு இது பரந்த உள்ளர்த்தங்களையும் படிப்பினைகளையும் கொண்டுள்ளது. அந்த படிப்பினைகள் இன்றி தொழிலாள வர்க்கத்தால் அதன் வரலாற்றுப் பணியான சோசலிச புரட்சியை சாதிக்க முடியாது.

சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டமை, இப்போது மேற்பரப்புக்கு வந்துள்ள, முதலாளித்துவத்தின் உலகளாவிய நெருக்கடி, மூன்றாம் உலகப் போரை நோக்கிய ஏகாதிபத்திய உந்துதல் மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் எழுச்சி போன்ற, ஆழமான அபிவிருத்திகளை முன்னறிவித்தது

1919இல் பெற்றோகிராட்டில் லெனின் புரட்சிகர தொழிலாளர் முன் உரையாற்றுகின்றார். வலதுபுறம் ட்ரொட்ஸ்கி இருக்கின்றார்.

14. சோசலிசப் புரட்சியில் நிறுவப்பட்ட முதல் தொழிலாளர் அரசின் அழிவு, ஸ்டாலினின் 'தனி நாட்டில் சோசலிசம்' என்ற கோட்பாட்டின் அடிப்படையிலான எதிர்ப்போக்கு தேசிய சோசலிசக் கொள்கைகளின் விளைவே ஆகும். ஸ்ராலினிசத்தின் எதிர்ப்புரட்சிகர தன்மை பற்றிய ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் எச்சரிக்கைகளை அது உறுதிப்படுத்தியது. முதலாளித்துவ உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் பூகோளமயமாக்கல், சர்வாதிகார ஸ்ராலினிச பொருளாதாரங்களுக்கும், அனைத்து நாடுகளிலும் அனைத்து அரசியல் கட்சிகளினதும் மற்றும் தொழிற்சங்கங்களதும் சகல விதமான தேசிய அடிப்படையிலான கொள்கைகளுக்கும் குழிபறித்துவிட்டது.

15. மாஸ்கோ ஸ்ராலினிச அதிகாரத்துவம், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கத்தின் அடிப்படையில் நிறுவப்பட்ட இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய சமநிலைக்கு பிரதான முட்டுக்கட்டையாக இருந்தது. 1991 இல் சோவியத் யூனியன் கலைக்கப்பட்டதை, உலகம் முழுவதும் தனது நிகரற்ற ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டுவதற்கான ஒரு வாய்ப்பாக அமெரிக்கா கண்டது. இது, 'வரலாற்றின் முடிவு', அமெரிக்காவின் சவால் செய்ய முடியாத சக்தி 'புதிய உலக ஒழுங்கை' நிர்வகிக்கும் 'ஒருமுனைத் தருணத்தை' இது உருவாக்குகிறது என்று ஏகாதிபத்திய பிரச்சாரகர்களால் புகழப்பட்டது. கடந்த மூன்று தசாப்தங்களாக, ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சி நிர்வாகங்களின் கீழ் அமெரிக்கா எவ்வாறு தொடர்ச்சியான மற்றும் எப்போதும் விரிவடையும் போரில் ஈடுபட்டதையும் ஏகாதிபத்தியங்களுக்கு இடையேயான பகைமையின் வெளிப்பாட்டையும் கண்டது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 1989 இல், ஸ்ராலினிசத்தின் ஒரு கிளையான சீன மாவோவாத அதிகாரத்துவம், 1970களின் பிற்பகுதியில் ஆரம்பித்து வைத்த, சீனாவில் முதலாளித்துவத்தின் மறுசீரமைப்பை தீவிரப்படுத்தியது. அது தொழிலாள வர்க்க எதிர்ப்பை தனது பொலிஸ்-அரச அடக்குமுறை மூலம் நசுக்கி, நாடுகடந்த முதலீடுகளுக்காக மேலும் 'சுதந்திர வர்த்தக மண்டலங்களை' திறந்துவிடுவதன் மூலம் இதை முன்னெடுத்தது.

16. 1953ல் இருந்து நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட ட்ரொட்ஸ்கிச இயக்கம் மட்டுமே, சோவியத் ஒன்றியத்தின் சீரழிவுக்கு இட்டுச் சென்ற ஸ்ராலினிசத்திற்கு எதிராக, உலக சோசலிசப் புரட்சி வேலைத்திட்டத்தைப் பாதுகாப்பதற்காக, போராடியது. ஸ்ராலினிசம் மற்றும் ஸ்ராலினிச அதிகாரத்துவத்திற்கு முற்போக்கான வகிபாகம் இருப்பதாக சித்தரித்து, ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டத்தை கைவிட்ட பப்லோவாத திருத்தல்வாதத்தில் இருந்து பிரிந்தே, 1953 இல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஸ்தாபிக்கப்பட்டது. இந்தப் போராட்டம் 1985-86 இல் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் ஏற்பட்ட பிளவில் உச்சக்கட்டத்தை அடைந்தது. இந்தப் பிளவில் உண்மையான ட்ரொட்ஸ்கிஸ்டுகள், பிரிட்டிஷ் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் (WRP) தேசிய சந்தர்ப்பவாதிகளிடமிருந்து பிரிந்து, பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதத்தை பாதுகாத்தனர். இந்தப் போராட்டத்தில், அனைத்து தேசியவாத வேலைத்திட்டங்களையும் கீழறுக்கும் உற்பத்தியின் பூகோளமயமாக்கலுடன், உலகப் பொருளாதாரத்தில் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்ட மாற்றங்களைப் பற்றிய பகுப்பாய்வை மேம்படுத்தவும் ஆழப்படுத்தவும் அனைத்துலகக் குழுவால் முடிந்தது.

இந்த போராட்டத்தின் மூலம், சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதுடன் தோன்றிய நெருக்கடியான சூழ்நிலைக்கு அனைத்துலகக் குழு மட்டுமே தயாராக இருந்தது. கூர்மையாக வலது பக்கம் நகர்ந்தது உலகெங்கிலும் உள்ள ஸ்ராலினிசக் கட்சிகள் மட்டும் அல்ல, ஸ்ராலினிச அதிகாரத்துவத்தைச் சுற்றிச் சுழலும் திருத்தல்வாத மற்றும் தீவிரவாத அமைப்புக்களும் அதிர்ச்சியையும் மனச்சோர்வையும் வெளிப்படுத்தி 'சோசலிசம் முடிந்துவிட்டது' என்று அறிவித்தன.

இதற்கு நேர்மாறாக, 1992 ஜனவரி 4 அன்று, அமெரிக்காவில் சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான வேர்க்கர்ஸ் லீக்கின் தேசிய செயலாளரான டேவிட் நோர்த், சோவியத் ஒன்றியத்தின் முடிவின் வரலாற்றுப் பின்னணி மற்றும் முக்கியத்துவத்தை பகுப்பாய்வு செய்யும் அறிக்கையை வழங்கினார். அவர் விளக்கியதாவது:

'சோவியத் ஒன்றியத்தின் பொறிவு உலக நெருக்கடியை தீவிரப்படுத்துவதுடன், புதிய எதிர்த் தாக்குதலை நடத்துவதற்கான வாய்ப்பை தொழிலாள வர்க்கத்திற்கு வழங்கும். ஆனால், அதன் வளர்ச்சியும் வெற்றியும் நமது இயக்கத்தை கட்டியெழுப்புவதலேயே தங்கியுள்ளது. நான்காம் அகிலத்தின் வகிபாகத்தின் மீதுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையே எங்கள் பணிகளுக்கு அடிப்படையாக இருக்கின்றன. தொழிலாள வர்க்கத்தில் நமது அதிகாரத்தை நிலைநிறுத்தக்கூடிய அளவிற்கு, ஸ்ராலினிசம் பற்றிய குழப்பம் களையப்படும்...' (சிறு நூல்: “சோவியத் ஒன்றியத்தின் முடிவு”).

தெற்காசியா - மனித மற்றும் சமூகப் பேரழிவும் புவிஅரசியல் பதட்டங்களும்

17. கொரோனா வைரஸ் தொற்றுநோயால் மோசமாக பாதிக்கப்பட்டவற்றில் தெற்காசிய நாடுகளும் அடங்கும். இந்த நாடுகளில் உள்ள ஆளும் வர்க்கங்கள் உலகம் முழுவதும் உள்ள அவற்றின் சமதரப்பினரைப் போலவே, மனித உயிர்களுக்கு மேலாக இலாபத்தை முதன்மைப்படுத்தி, வறுமையால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளை இந்த கொடிய வைரசுக்கு இரையாக்கியுள்ளன. 2021 ஒக்டோபர் மாத இறுதிக்குள், தெற்காசியவில் கோவிட்-19 தொற்றுக்களின் மொத்த எண்ணிக்கை 38 மில்லியனுக்கும் அதிகமாகவும் மரண எண்ணிக்கை 543,000க்கும் அதிகமாகவும் உள்ளது. தங்களின் குற்றவியல் கொள்கைகளுக்கு எதிராக வளர்ந்து வரும் சமூக எதிர்புக்கு பதிலிறுக்கும் வகையில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, நேபாளம், பூட்டான், மாலைதீவு மற்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள ஆளும் உயரடுக்குகள், எதேச்சதிகார ஆட்சி வடிவத்தை நோக்கி வேகமாக நகர்கின்றன.

18 .கொவிட்-19 தொற்று நோயின் உலகலாவிய மனிதப் பேரழிவு இந்தியாவில் துயரமான முறையில் தலைதூக்கியுள்ளது. ஒக்டோபர் 25 அன்று அதிகாரபூர்வ இறப்புக்களின் எண்ணிக்கை 455,093 ஆகவும் தொற்றுக்கள் 34,200,957 ஆகவும் இருந்தன. எவ்வாறாயினும், அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட பூகோள மேம்பாட்டு மையம் நடத்திய ஆய்வின் படி, ஜூன் மாதத்திற்குள் உண்மையான மரண எண்ணிக்கையானது மூன்று முதல் ஐந்து மில்லியனுக்கு இடையிலானதாகும். “இது, பிரிவினை மற்றும் சுதந்திரத்திற்குப் பின்னரான இந்தியாவின் மிக மோசமாக மனித பேரிடர் என்று வாதிடக் கூடியவாறு, மரணங்களின் உண்மையான எண்ணிக்கை இலட்சக் கணக்கில் அன்றி, பல மில்லியன்களாக இருக்கக் கூடும்”, என அந்த ஆய்வு முடிவுக்கு வந்துள்ளது.

கோவிட்-19 தொற்றுநோயின் இரண்டாவது அலையை தூண்டிவிட்ட டெல்டா மாறுபாட்டினால் இந்தியாவில் ஏற்பட்ட பேரழிவில் உயிரிழந்தவர்களின் மரணச் சடங்குகள்: டெல்லி, 2021 ஏப்பிரல். (AP Photo/Altaf Qadri)

பிரதமர் நரேந்திர மோடியின் அதி-வலது அரசாங்கமானது 24 மார்ச் 2020 அன்று நாட்டைத் தயக்கத்துடன் முடக்கிய போதிலும், பெருநிறுவனங்களின் அழைப்புக்குச் செவிசாய்த்து ஒரு மாதத்திற்குப் பிறகு பொருளாதாரத்தை மீண்டும் திறக்க ஆரம்பித்தது. அதன் மூலம் அது ஒரு தொற்றுநோய் சுனாமிக்கு வழிதிறந்து விட்டது. தொற்று நோயின் இரண்டாவது அலையை தூண்டிவிட்ட டெல்டா மாறுபாட்டின் பரவலின் உச்சத்தில், 2021 ஏப்ரல் முதல் ஜூன் வரை தினசரி சுமார் 4,000 பேர் மரணித்தனர். தனது ஆட்சியின் ஈவிரக்கமற்ற, சமூகத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கும் கொள்கையை சமிக்ஞை செய்து, 2021 ஏப்ரல் 20 அன்று நாட்டுக்கு அவர் தொலைக்காட்சியில் உரையாற்றி இழிவான முறையில் பின்வருமாறு அறிவித்தார்: ‘‘இன்றைய நிலையில் நாம் நாட்டை முடக்கத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும்.” (தொற்றுக்கள் மற்றும் மரணங்களில் இருந்து அல்லாமல் பொது முடக்கத்தில் இருந்து நாட்டைப் பாதுகாக்க மோடி உறுதியளிக்கிறார்,“ WSWS, 10 மே 2021). முதலாளித்துவ அதிசெல்வந்த தன்னலக்குழுக்களுக்காக, மில்லியன் கணக்கானவர்களின் மரணங்களை உடனடியாக ஏற்றுக்கொள்ள முடியம், என இது மறைமுகமாக உணர்த்தியது.

19. புது டில்லியின் கொடூரமான வர்க்க கொள்கையானது, வெகு ஜனங்கள் மீதான அதன் அலட்சியத்திலும் பெருவணிக அதிசெல்வந்த தன்னலக் குழுக்களின் இலாபத்தை பெருகச்செய்ய எடுக்கும் நடவடிக்கைகளிலும் தெளிவாக காட்டப்பட்டுள்ளது. 2020 இல், வெறும் நான்கு மணி நேர அறிவித்தலுடன், அத ஒரு முன்தயாரிப்பற்ற முடக்கத்தை அறிவித்தமையானது, 40 மில்லியன் புலம்பெயர் தொழிலாளர்கள் உட்பட பல மில்லியன் தொழிலாளர்களை, சொல்ல முடியாதளவு தொழில் நெருக்கடிக்குள்ளும், வறிய மக்களுக்கு சரியான சமூக நிவாரணங்களை வழங்காமல் வருமான இழப்புக்குள்ளும் தள்ளியது. அது “பொருளாதாரத்தை “ஊக்குவித்தல்” என்ற போர்வையில் 20 ட்ரில்லியன் ரூபாய்களை அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதத்தை பெரு வணிகங்களுக்கு கொடுத்தது. முதலீட்டாளர்-சார்பு சீர்திருத்தங்களுடன் அவர்களுக்கு மேலும் வெகுமதிகள் வழங்கப்பட்டன. பெரும் முதலாளிகள் தங்களின் விருப்பத்திற்கேற்ப தொழிலாளர்களை வேலையில் இருந்து நிறுத்தவும் தொழிற்சாலைகளை மூடவும்; ஒப்பந்தத் தொழிலாளர் முறையை விரிவுபடுத்தவும், தொழில்களை பாதுகாப்பதற்கு தொழிலாளர்கள் எடுக்கும் நடவடிக்கைகளைச் சட்டவிரோதமாக்கவும் அவர்களுக்கு அதிகாரம் கொடுக்கின்ற, புதிய தொழிலாளர் சட்டங்களும்; சர்வதேச மற்றும் உள் நாட்டு பல்-தேசிய நிறுவனங்கள் விவசாயத்தில் மேலாதிக்கம் செய்ய அனுமதிக்கும் மூன்று பண்ணைச் சட்டங்களும் இந்த வெகுமதிகளில் அடங்கும். மோடி ஆட்சியானது இந்த ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் ஏழைகளுக்கான மானிய வேலைத்திட்டங்களை மேலும் வெட்டிக் குறைத்த அதேவேளை, சர்வதேச முதலீட்டாளர்களுக்கு அதிக வரிச்சலுகைகளையும் தனியார் மயமாக்கல் வேலைத் திட்டத்தையும் அறிவித்தது.

20. இந்தக் கொள்கைகள் இந்தியாவில் சமூக சமத்துவமின்மையை விரிவாக்கியுள்ளன. 1 சதவீதமான இந்தியப் பணக்காரர்கள் இப்போது கீழ் மட்டத்தில் உள்ள 50 சதவீதமானோரின் செல்வத்தை விட 15 மடங்குக்கும் அதிகமான செல்வத்தை தம்வசம் வைத்திருப்பதாக, ஜனவரியில் வெளியான ஒக்ஸ்பாமின் “சமத்துவமின்மை வைரஸ்” அறிக்கை காட்டுகின்றது. 2020இல் நாடு முடக்கப்பட்டதில் இருந்து இந்தியாவின் 100 முன்னணி பில்லியனர்கள், தொற்று நோய் வேளையில் 178 பில்லியன் டொலர்களை கூடுதலாக தமது செல்வத்தில் இழிவான முறையில் சேர்த்துக்கொண்டுள்ளனர். தொற்றுநோய் காலத்தில் மில்லியனர் முகேஷ் அம்பானி ஒரு மணி நேரத்தில் சம்பாதித்த வருமானத்தை, தொழிற்பயிற்சி அற்ற ஒரு தொழிலாளி சம்பாதிக்க வேண்டுமெனில் அதற்கு 10,000 ஆண்டுகள் எடுக்கும். 2020இல் வெளியான மற்றொரு ஆய்வானது, தொற்று நோய் காலத்தில் 230 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே தள்ளப்பட்டுள்ளனர் எனக் காட்டுகின்றது.

இந்த ஆண்டு, 1947 இல் இருந்து இந்து ஆளும் வர்க்கம் முன்னெடுத்து வந்த அரச தலைமையிலான அபிவிருத்திக் கொள்கைகளான, தேசிய எதேச்சதிகாரக் கொள்கைகளின் சரிவில் இருந்து, இந்தியா முதலாளித்துவ உலகமயமாக்கலுக்கு திறந்துவிடப்பட்டு முப்பது ஆண்டுகளைக் குறிக்கின்றது. சர்வதேச மூலதனத்தின் சூறையாடலுக்கு நாட்டைத் திறந்து விடுவதானது அபிவிருத்தியின் புதிய சகாப்பத்தையும் வெகுஜனங்களுக்கு செழிப்பையும் கொண்டு வரும் என இந்திய தேசிய காங்கிரஸ் அரசாங்கமும் உயரடுக்கும் பெருமை பீற்றிக்கொண்டன. எவ்வாறாயினும், சர்வதேச முதலீட்டாளர்கள் மற்றும் அவர்களின் இந்திய சகாக்கள் தமது இலாபங்களை பெருக்கிக்கொண்டுள்ள அதேவேளை, இந்தியத் தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் மக்களை ஈவிரக்கமற்று சுரண்டுவதை தீவிரப்படுத்தி, தொற்றுநோயின் கீழ் ஆழமடைந்துள்ள பாரிய சமூக சமத்துவமின்மை, வறுமை, மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடுகள் உருவாக்கப்பட்டுள்ளதையே கடந்த முப்பது ஆண்டுகள் கண்டுள்ளன.

21. அதனது பெரும் வல்லரசாகும் குறிக்கோளுடன் சேர்த்து, இந்திய உயரடுக்கின் வலதுசாரி கொள்கைகளை இடைவிடாமல் முன்னெடுக்கும் மோடியின் ஆட்சி, சீனாவுக்கு எதிராக இலக்கு வைக்கப்பட்டுள்ள அமெரிக்க பொருளாதார மற்றும் மூலோபாய தாக்குதலில் இந்தியாவை ஒருங்கிணைத்து வருகின்றது. ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா உடனான அமெரிக்கத் தலைமையிலான நாற்புற இராணுவ கூட்டணியில் இணைந்துகொண்டு, இந்தியா அதனது இராணுவ மூலோபாய உறவுகளின் வலையமைப்பை விரிவுபடுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் மூலோபாய ரீதியில் நிலைகொள்வதை மேம்படுத்தும் இந்தியாவின் முயற்சியானது ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் படு தோல்வியாலும், போட்டி நாடான பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற தலிபான்கள் காபூலில் ஆட்சியைக் கைப்பற்றியதாலும் சிக்கலில் விழுந்துள்ளது. புது டில்லியானது, பிராந்தியத்தில் சீன-விரோத அமெரிக்க நகர்வுகளுகளுக்கு பின்னால் பங்களாதேஷ், இலங்கை மற்றும் மாலைதீவுகள் போன்ற சிறிய நாடுகளை முடிச்சுப்போட்டுவிடும் பிற்போக்கு பாத்திரத்தை ஆற்றுகின்றது. இந்த நடவடிக்கைகள் சீனா உடனான பதட்டங்களை கூர்மையான அதிகரிதுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகள், இந்த இரு அணு ஆயுதம் கொண்ட நாடுகளுக்கு இடையே எல்லைப் பதட்டங்களை கண்டதோடு ஒரு பூகோள மோதலுக்கான ஆபத்தை முன்நிறுத்தியது. மறுபக்கம், மோடி ஆட்சியானது நாட்டில் பெருகிவரும் சமூக கோபத்தை திசை திருப்புவதற்கு இந்தப் பதட்டங்களை சுரண்டிக்கொள்கின்றது.

22. பல மில்லியன் இந்தியத் தொழிலாள வர்க்கம் இந்து மேலாதிக்கவாத பா.ஜ.க. தலைமையிலான ஆட்சியையும் முதலாளித்துவ வர்க்கத்தையும் சவால் செய்யத் தொடங்கியுள்ளது. 2020 ஜனவரி 8 மற்றும் நவம்பர் 26 ஆகிய தினங்களில் மேற்கொள்ளப்பட்ட இரு நாடு தழுவிய பொது வேலை நிறுத்தங்கள், நிலக்கரி சுரங்கம், இயந்திர தொழில், பொதுப் போக்குவரத்து, சுகாதார நலன், வங்கிகள் மற்றும் காப்புறுதி ஆகியவற்றில் பல போர்க்குணம் மிக்க போராட்டங்களும் இதில் அடங்கும். தொழிலாளர்கள் மோடி அரசாங்கத்தின் தனியார் மயமாக்கல் திட்டங்கள், சிக்கன நடவடிக்கைகள் மற்றும் ஏனைய முதலீட்டாளர்-சார்பு கொள்கைகளை கசப்புடன் எதிர்க்கின்றனர். சென்னை, குர்கோன் மற்றும் பல இடங்களையும் தளமாக கொண்ட ஹுன்டாய், நிசான், ரெனோல்ட், மாருதி-சுசுக்கி மற்றும் வொல்வோ போன்ற சர்வதேச பெரு நிறுவனங்களுக்குச் சொந்தமான ஆலைகளில் தொழிலாளர்களின் அமைதியின்மை பெருகி இருந்தது. புது டில்லி அடக்குமுறை நடவடிக்கைகளை முன்னெடுத்த போதும், ப.ஜ.க. அரசாங்கத்தின் விவசாய வணிக-சார்பு பண்ணைச் சட்டங்களுக்கு எதிராக இலட்சக் கணக்கான விவசாயிகள் ஏறத்தாழ ஒராண்டு காலமாக முன்னெடுத்த போராட்டம், நாட்டில் கொதித்துக் கொண்டிருக்கின்ற சமூக கோபத்தை பற்றிய அளவு கோலாகும். தொழிலாளர்கள் மற்றும் உழைக்கம் மக்களின் இந்தப் போராட்டங்கள், வர்க்கப் போராட்டங்களின் உலகளாவிய மீள் எழுச்சியின் பாகமாக வரவிருக்கும் சமூக வெடிப்பின் அறிகுறியாகும்.

23. இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் உலக சோசலிச வலைத் தளமும் மார்க்சிச-ட்ரொட்ஸ்கிஷ வேலைத் திட்டத்தை விரிவுபடுத்தி இந்தியாவில் அபிவிருத்தியடைந்துவரும் போராட்ங்களில் தலையீடு செய்தன. ஒரு குறிப்பிடத்தக்க தலையீட்டில், இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியானது அமெரிக்கா, கனடா மற்றும் பிரன்சிலும் உள்ள அனைத்துலகக் குழுவின் சகோதரக் கட்சிகளுடன் இணைந்து 30 மே 2021 அன்று “கொவிட்-19 தொற்று நோயும் சோசலிச மூலோபாயத்தின் தேவையும்” என்ற கருப்பொருளின் கீழ், இணையவழி கூட்டமொன்றை நடத்தியது. அது மோடி அரசாங்கத்தினதும் ஆளும் உயடுக்கினதும் “சமூகத்தில் நோய் எதிர்ப்பு சக்தி பெருக்கும்” கொள்கைளுக்கு எதிராக, இந்தியாவில் தொற்றுநோய்க்கு விஞ்ஞான அடிப்டையிலான பதலிறுப்புக்கு அழைப்பு விடுத்தது. ஸ்ராலினிசக் கட்சிகள் மற்றும் தேசியவாத தொழிற்சங்கஙகளிடம் இருந்து அமைப்பு ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பிரிந்து, தமது உரிமைகளுகாகப் போராடுவதற்கு சுயாதீனமான தொழிலாளர் நடவடிக்கை குழுக்களை அமைப்பதற்கு இந்தியத் தொழிலாளர்களை கேட்டுக்கொண்டு, அந்தக் கூட்டம் வலியுறுத்தியதாவது: “இந்தியத் தொழிலாளர்கள், பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், மற்றும் இலங்கை உட்பட தெற்காசியாவிலும், வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் ஏகாதிபத்திய மையங்களிலும் உள்ள தங்களது வர்க்க சகோதர, சகோதரிகளுடன் தமது போராட்டங்களை ஐக்கியப்படுத்தப் போராட வேண்டும். இந்த இலக்கை அடைய, அவர்கள் உலகளாவிய அடிப்படையில் தமது போராட்டங்களை ஒருங்கிணைத்து ஐக்கியப்படுத்துவதற்கான ஒரு புதிய சர்வதேச சோசலிச பாதையை தொழிலாளர்களுக்கு வழங்குவதன் பேரில், அனைத்துலகக் குழுவால் தொடங்கி வைக்கப்பட்ட தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களின் சர்வதேசக் கூட்டணியைக் கட்டியெழுப்ப ஆதரவளிக்க வேண்டும்.”

24. வளர்ந்து வரும் வர்க்கப் போராட்டங்கள் மீது பாய்வதற்கு மோடி அரசாங்கம் சர்வாதிகார ஆட்சியை நோக்கி வேகமாகச் நகர்ந்து கொண்டிருக்கின்றது. இது இணையம் மற்றும் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் அதே வேளை, அரசியல் மற்றும் சமூக எதிர்ப்பாளர்களையும் மனித உரிமை ஆர்வலர்களையும் அடக்குகின்றது. பா.ஜ.க. தலைமையிலான அரசாங்கம், முஸ்லிம்களுக்கு எதிரான குடியுரிமை திருத்தச் சட்டம் போன்ற கொடூரமான சட்டங்களை நிறைவேற்றுவதோடு, தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக கட்டவிழ்த்து விடுவதற்காக இந்துத்துவ பாசிச குண்டர்களை பலப்படுத்துவதன் பேரில் காஷ்மீர் மீது எதேச்சாதிகார அரசியலமைப்பு நடவடிக்கைகளை அமுல்படுத்துவதுடன் இராணுவ நடவடிக்கைகளையும் செயல்படுத்தி, முஸ்லிம்களுக்கு எதிரான இனவெறியை தூண்டி வருகிறது.

25. தொற்றுநோய் சம்பந்தமான ஈவிரக்கமற்ற கொள்கைகள், எதேச்சதிகார நகர்வுகள், பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு எதிரான பதட்டங்களைத் துண்டிவிடுதல் மற்றும் அமெரிக்கா உடனான இராணுவ-மூலோபாய உறவுகளை கட்டியெழுப்புதல் போன்ற மோடி அரசாங்கத்தின் ஈவிரக்கமற்ற கொள்கைளுடன் இந்திய எதிர்க் கட்சிகள் எந்வொரு அடிப்படை வேறுபாடுகளையும் கொண்டிருக்கவில்லை. இந்திய தேசிய காங்கிரஸ், இந்திய ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி (மார்சிஸ்ட்) (சி.பி.எம்.), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ.), மற்றும் மாநில அரசாங்கங்களை நடத்தும் பிராந்திய முதலாளித்துவக் கட்சிகளும் தொற்றுநோய் தடையின்றி ஏற்படுத்துகின்ற பேரழிவுக்கு பொறுப்பாளிகள் ஆகும்.

26. வளர்ந்து வரும் சமூக எதிர்ப்புகளை திசை திருப்பவும் அடக்குவதற்கும் சி.பி.எம். தலைமையிலான இடது முன்னணி, காங்கிரஸ் உடனான தமது கூட்டணியை பலப்படுத்துகின்றது. காங்கிரஸ் உடனான கூட்டணியில் தொடர்ச்சியாக மாநில தேர்தல்களில் போட்டியிட்ட பின்பு, இடது முன்னணியானது 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய தேர்தல்களுக்காக காங்கிரஸ் உடனான கூட்டணியை விரிவுபடுத்த தயாராகிக்கொண்டிருக்கிறது. ஸ்ராலினிச தலைமையிலான தொழிற் சங்கங்கள், ஏனைய தொழிற்சங்கங்களுடன் அணிசேர்ந்து, தொழிலாள வர்க்ப் போராட்டங்களை நசுக்க செயலூக்கத்துடன் தலையிடுகின்றன. வேலை நிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்புகளுக்கு அழைப்பு விடுக்க நிர்ப்பந்திக்கப்படும் போதெல்லாம், அவை முதலாளித்துவ முறைமைக்கு சவால்விடுக்காமல் கட்டுப்படுத்தவும் தடுக்கவும் இந்த தொழிற்சங்கங்கள் தமது முழு பலத்தையும் பிரயோகிக்கின்றன. மோடி ஆட்சிக்கும் முதலாளித்துவத்துக்கும் எதிராக பல மில்லியன் கணக்கான விவசாயிகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களை ஒன்றுசேர்த்து, தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதற்கு ஸ்ராலினிசத்தின் எதிர்ப்பானது, இப்போது நடைபெறும் விவசாயிகளின் எதிர்ப்பில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. ஸ்ராலினிசக் கட்சிகள், காங்கிரஸுடன் கூட்டுச் சேர்ந்துகொண்டு, தொழிலாள வர்க்கத்தை ஒரு செயலற்ற பார்வையாளராக வைத்திருக்க முயற்சிப்பதோடு விவசாயிகளின் போராட்டமானது “அரசியல்-அற்றதாக” இருக்க வேண்டும் என வலியுறுத்துகின்றன.

27. இந்தியா மற்றும் ஏனைய தெற்காசிய நாடுகளிலும் உள்ள மாவோவாத போக்குகளும், ஒரு சுயாதீன அரசியல் சக்தியாக தொழிலாளர் வர்க்கத்தின் அணிதிரள்வை எதிர்க்கின்றன. ஸ்ராலினிசத்தின் பிறழ்வான மாவோவாதத்தை இந்தியாவில் இந்திய மார்க்சிச-லெனினிசக் கட்சி மற்றும் இந்திய மாவோயிச கம்யூனிசக் கட்சிகள் பிரதிநிதித்துவம் செய்கிகின்றன. இவை இரண்டும் ஸ்ராலினிசத்தின் இரண்டு-கட்ட புரட்சி கோட்பாட்டை பிரச்சாரம் செய்கின்றன. முதல் கட்டமானது ஏகாதிபத்திய சார்பு கொம்பிரதோர் முதலாளித்துவத்துக்கும் நிலப் பிரபுகளுக்கும் எதிரான “முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி” ஆகும், இதில் தொழிலாளர் வர்க்கம் தேசிய முதலாளித்துவத்துடன் கூட்டணி அமைத்துக்கொள்ள வேண்டும்; இரண்டாவது கட்டத்தில், சோசலிசப் புரட்சியானது வரையறையற்ற எதிர்காலத்திற்கு பிற்போடப்படுகிறது, இதன் விளைவாக சோசலிசத்துக்கான போராட்டம் நிகழ்ச்சி நிரலுக்கு வெளியில் வைக்கப்பட்டுள்ளது. சி.பி.ஐ. மார்சிஸ்ட் லெனினிஸ்ட், அரசியல் ஸ்தாபனத்துடன் இணைந்து, சி.பி.எம். தலைமையிலான இடது முன்னணியைப் போலவே காங்கிரஸ் உடனோ அல்லது மாநில முதலாளித்துவ கட்சிகளுடனா கூட்டணியில் அதிகமாகச் செயற்படுகின்றது. மாவோவாத சி.பி.ஐ., அதே இரண்டு கட்ட கொள்கையின் பாதையில் நின்று குறிப்பாக சாகச ஆயுதத் தாக்குதல்களை ஒழுங்கமைக்கின்றது. நேபாளத்தில் மாவோவாத கம்யூனிசக் கட்சியானது ஆளும் உயரடுக்குடன் சேர்ந்துகொள்வதற்காக அதனது போராட்ட முறையை மாற்றிக்கொண்டது. இலங்கையில், மாவோவாதத்துக்கு விசுவாசம் காட்டும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.), முதலாளித்து ஆட்சியின் தலையாட்டுகின்ற கருவியாக மாறியுள்ளது.

28. தெற்காசியாவின் ஏனைய நாடுகளில் உள்ள அரசாங்கங்களும் ஆளும் வர்க்கமும் கூட தொற்று நோய் சம்பந்தமாக மக்களை கைவிட்டுவிட்டன. பாகிஸ்தானில் இராணுவ-ஆதரவு கொண்ட பிரதமர் இம்ரான்கானின் ஆட்சியானது நாட்டை முடக்குவதில் இறுதியானாதகவும் பொருளாதாரத்தை மீண்டும் திறப்பதில் முதலாவதாகவும் இருந்தது. சுகாதார பாதுகாப்பிற்கான அடிப்படை வசதிகளையும் தனிநபர் பாதுகாப்பு கருவிகளையும் (பிபிஇ) கோரிய தொழிலாளர்கள் மீது அரச வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. பாகிஸ்தானில், ஏற்கனவே வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள 50 மில்லியன் மக்கள் தொகைக்கு தொற்றுநோய் காலத்தில் இன்னும் பத்து மில்லியனுக்கும் அதிகமானர்வர்கள் சேர்கப்பட்டுள்ளனர். அவரது அராசங்கத்துக்கு எதிராக சமூக எதிர்ப்பு வளர்ச்சி கண்ட போது, கான், பொருளாதாரத்திலும் நிர்வாகத்திலும் இராணுவத்தின் வகிபாகத்தை அதிகரிக்கச் செய்தார். பாகிஸ்தான் இராணுவம் கடந்த காலங்களில் ஆட்சிக் கவிழ்ப்பு மற்றும் சர்வாதிகாரத்திலும் பேர்போனதாகும். பங்களாதேஷில், தொற்றுநோய் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. அங்கு மரண எண்ணிக்கை 27 ஆயிரத்துக்கும் அதிகமாக உயர்வடைந்துள்ளது. சமீபத்திய உலக வங்கியின் அறிக்கையின் படி, தலைநகர் டாக்கா மற்றும் சிட்டங்கொங் துறைமுக நகரத்தில் 68 சதவீதமான தொழிலாளர்கள் தொழில்களை இழந்துள்ளனர். கடந்த டிசம்பருக்குள் ஆடைத் தொழிலாளர்களின் வேலை இழப்புக்கள் 1 மில்லியனுக்கும் அதிமாக இருக்கலாம் என இன்னொரு அறிக்கை பரிந்துரை செய்கின்றது. பிரதமர் ஷேக் ஹஸீனா, சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு விரோதமான எதிர்ப்புகளை கட்டுப்படுத்தவதற்கு பொலிஸ் வன்முறையைக் கட்டவிழ்த்துவிடும் அதேவேளை சர்வதிகார ஆட்சியை வலுப்படுத்துகின்றார்.

29. தொற்று நோயால் தீவிரமாக்கப்பட்டுள்ள நெருக்கடியானது சுதந்திரம் என்றழைக்கப்பட்ட்டதன் கீழ் தெற்காசியாவில் 1947-1948 இல் உருவாக்கப்பட்ட அரசுகளின் வரலாற்று பொருத்தமின்மையை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது. இந்த அரச முறைமையானது தேசிய முதலாளித்துவத்தின் உதவியுடன் ஏகாதிபத்திய அரசுகள் மற்றும் ஸ்ராலினிச சோவியத் அதிகாரதுவத்துக்கு இடையிலான போருக்குப்-பிந்திய தீர்வின் பாகமாக உருவாக்கப்பட்டது. இந்தியத் துணைக் கண்டமானது இந்து-மேலாதிக்க இந்தியா மற்றும் முஸ்லீம் பாகிஸ்தானாக வகுப்பு வாத வழியில் பிரிக்கப்பட்டது. இலங்கை ஒரு தனி அரசாக ஸ்தாபிக்கப்பட்டது. பிற்போக்கு அரசுகளையும் முதலாளித்துவ ஆட்சியையும் துக்கி வீசி, உலக சோசலிச ஒன்றியத்தின் பாகமாக, தெற்காசிய சோசலிக குடியசுகளின் ஒன்றியத்தை ஸ்தாபிப்பதே தெற்காசியாவில் உள்ள பல மில்லியன் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கான ஒரே வழியாகும்.

மேலும் படிக்க

Loading