ட்ரம்ப் பதவிக்காலம் முடிய இன்னும் ஆறு வாரங்கள் எஞ்சியிருக்கையில் ஈரான் மற்றும் வெனிசுவேலாவுக்கு எதிராக அமெரிக்க போர் அச்சுறுத்தல்கள் அதிகரிக்கின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

வாஷிங்டனுன் சேர்ந்து இஸ்ரேலிய உளவுத்துறை முகமை மொசாட் (Mossad) நடத்திய ஒரு குற்றமான, ஈரானிய பௌதீக விஞ்ஞானி மொஹ்சென் பக்ரீஜதெஹ் படுகொலை செய்யப்பட்டு வெறும் ஒன்றரை வாரங்களுக்குப் பின்னர், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பதவிக்காலம் முடிய எஞ்சியிருக்கின்ற இந்த ஆறு வாரங்களில் மிகப்பெரும் அமெரிக்க இராணுவத் தாக்குதல் நடவடிக்கையின் அச்சுறுத்தல்கள் தொய்வின்றி தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

ஈரானில் மிகப் பிரபல விஞ்ஞானியாகவும் அந்நாட்டின் அணுசக்தி திட்டத்திற்கான ஒரு முக்கிய பிரமுகராகவும் கருதப்படும் பக்ரீஜதெஹ் படுகொலை செய்யப்பட்டமை, ஒரு போருக்குச் சாக்குப்போக்காக பின்னர் சாதகமாக்கிக் கொள்ளும் விதத்தில் அவசரமான ஈரானிய பதிலடி நோக்கமாக கொண்ட ஒரு கணக்கிட்ட ஆத்திரமூட்டலாக இருந்தது.

B-2 Spirit stealth bomber (Wikimedia Commons)

ஒருபுறம் "அதிகபட்ச அழுத்த" தடையாணைகளால் சூழப்பட்டும் மறுபுறம் தொழிலாள வர்க்கத்தில் அதிகரித்து வரும் கொந்தளிப்பை முகங்கொடுத்தும் உள்ள ஈரானிய முதலாளித்துவ-மதகுருமார்களின் ஆளும் ஸ்தாபகம் அதுபோன்ற நடவடிக்கையிலிருந்து பின்வாங்கி உள்ளது. ஜனாதிபதி ஹாசன் ரூஹானி தலைமையில் பதவியிலிருக்கும் கன்னை, தடையாணைகளைத் தளர்த்துவதிலும் மற்றும் இரண்டாண்டுகளுக்கு முன்னர் ட்ரம்பால் தன்னிச்சையாக விட்டொழிக்கப்பட்ட 2015 அணுசக்தி உடன்படிக்கையில் மீண்டும் இணைவதிலும், வரவிருக்கும் பைடென் நிர்வாகத்தின் மீது அதன் பேரங்களை முன்வைக்க இருப்பதாக தெரிகிறது. ஆனால் ஈரானிய அரசின் ஏனைய அணிகள், IAEA அணுசக்தி கண்காணிப்பாளர்களை வெளியேற்றுதல், மற்றும் இஸ்ரேல் மீதான இராணுவத் தாக்குதல்களும் உள்ளடங்கலாக விரைவாக பதிலடி கொடுக்க வலியுறுத்தி உள்ளன.

ஈரானுக்கு எதிராக மட்டுமல்ல, மாறாக சீனா மற்றும் வெனிசுவேலா மீதும் பல்வேறு புதிய தடையாணைகளைத் திணித்தும், அதேவேளையில் மிரட்டும் விதத்தில் பாரசீக வளைகுடாவில் இருந்து தென் சீனக் கடல் மற்றும் கரீபிய கடல் வரையில் இராணுவ செயல்பாடுகளை நடத்தியும், ட்ரம்ப் நிர்வாகம் அச்சுறுத்தும் வெளியுறவுக் கொள்கையைப் பின்தொடர்கின்ற நிலையில், ஒரு புதிய ஆத்திரமூட்டலுக்கான சாத்தியக்கூறு மிகப் பெரியளவில் அமைந்துள்ளது.

போர் நிலைக்கு நிகரான "அதிகபட்ச அழுத்த" தடையாணை நடவடிக்கைகளின் இலக்கில் வைக்கப்பட்டுள்ள ஈரான் மற்றும் வெனிசுவேலா இரண்டுக்கும் இடையிலான உறவுகள், குறிப்பாக அமெரிக்க அச்சுறுத்தல்களின் இலக்காக ஆகியுள்ளன.

இதை, ஒரு மூத்த வாஷிங்டன் போர் குற்றவாளியான, “ஈரான் மற்றும் வெனிசுவேலாவுக்கான [அமெரிக்க] சிறப்பு பிரதிநிதி" எலியாட் அப்ரஹாம் கடந்த வாரம் தெளிவுபடுத்தினார், 1980 களில் மத்திய அமெரிக்காவில் அமெரிக்க ஆதரவிலான இராணுவச் சர்வாதிகாரங்கள் தொடுத்த மனிதபடுகொலைக்கு அண்மித்த போர்களைப் பாதுகாப்பதில் ரீகன் நிர்வாகத்தின் முக்கிய நபராக பதவியில் இருந்த இவர் தனது தொழில்வாழ்வை மீண்டும் அதே அந்தஸ்தில் தடம் பதித்துள்ளார். அதன் பின்னர் அவர், நிக்கரகுவாவுக்கு எதிராக ஒரு பயங்கரவாத போர் தொடுக்க வலதுசாரி கெரில்லா ஆயுதப்படையான சிஐஏ ஆதரவு பெற்ற கொன்ட்ராஸிற்கு நிதி வழங்குவதற்கான இரகசிய மற்றும் சட்டவிரோத நடவடிக்கையான ஈரான்-கொன்ட்ரா விவகாரங்களுடன் சம்பந்தப்பட்ட குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டார்.

ஈரான் மற்றும் வெனிசுவேலா இரண்டினது சிறப்பு தூதர் பதவிகளையும் இணைத்து செப்டம்பரில் அப்ரஹாமின் கரங்களில் வழங்கியமை, வாஷிங்டன் உள்நோக்கங்கள் குறித்து ஒரு தெளிவான எச்சரிக்கையை வழங்கியது.

ஜோர்ஜ் மாசன் பல்கலைக்கழகத்தில் தேசிய பாதுகாப்பு அமைப்பு கடந்த வியாழக்கிழமை நடத்திய ஒரு இணையவழி கருத்தரங்கில், அப்ரஹாம் பேசுகையில், வெனிசுவேலாவுக்கு எந்தவிதத்திலும் ஈரானிய ஏவுகணைகளை அனுப்புவதற்கு எதிரான ஓர் அமெரிக்க இராணுவ நடவடிக்கை குறித்து நேரடி அச்சுறுத்தலை வழங்கினார்.

“நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம், நாங்கள் சகித்துக் கொள்ள மாட்டோம், வெனிசுவேலாவுக்கு ஈரானிய ஏவுகணைகளை அனுப்புவது அமெரிக்காவை எட்டக்கூடும்,” என்றார். “இதை நாங்கள் ஏற்க மாட்டோம், குறைந்தபட்சம் இந்த நிர்வாகத்தில் இதை அவர்கள் செய்ய முயன்றால், நாங்கள் அதை தடுக்க முயல்வோம், அவை வெனிசுவேலாவை வந்தடைந்தால், அவை வெனிசுவேலாவுக்குள் வைத்து கையாளப்படும். அமெரிக்காவை வந்தடையக்கூடிய ஈரானிய ஏவுகணைகளை வெனிசுவேலா வைத்திருப்பதை ஏற்க முடியாது,” என்றார்.

வெனிசுவேலாவுக்கு ஈரான் ஏவுகணைகளை அனுப்புகிறது என்று காட்டுவதற்கு அங்கே முற்றிலுமாக எந்த ஆதாரமும் இல்லை என்பது, போருக்கான ஒரு சாக்குப்போக்காக "வெனிசுவேலா ஏவுகணை நெருக்கடி" என்ற கருத்தை நோக்கி திரும்புவதில் இருந்து வாஷிங்டன் தடுத்துவிடவில்லை.

வெனிசுவேலாவில் ஈரானிய அச்சுறுத்தல் என்று கூறப்படும் அதேமாதிரியான கருத்துக்களை அமெரிக்க தெற்கு கட்டளையக (SOUTHCOM) தலைவர் அட்மிரல் கிரக் ஃபெல்லரும் கடந்த வாரம் வெளியிட்டார்.

அட்மிரல் ஃபெல்லர் பென்டகன் பத்திரிகைத்துறை படையினருக்கு வழங்கிய ஒரு விளக்கவுரையில், “குத்ஸ் படைகள் மற்றும் சில ஆயுத உறவுகளை உள்ளடக்குவதற்காக [வெனிசுவேலாவில்] ஈரானிய செல்வாக்கு அதிகரித்து வருவதை நாம் காண்கிறோம், இது எச்சரிக்கைக்குரியதும் மற்றும் கவலைக்குரியதும் ஆகும்,” என்றார்.

“அது வெறுமனே எண்ணெய் ஏற்றுமதி மட்டுமல்ல. அது ஆயுத ஏற்றுமதியும் கூட,” என்று கூறிய ஃபெல்லர், “அது இந்தாண்டு ஏறுமுகமாக இருப்பதை கண்டோம். அது உலகெங்கிலும் ஏனைய எந்தவொரு ஈரானிய சட்டவிரோத நடவடிக்கையுடனும் தொடர்புபட்டுள்ளதா என்பதைக் காண நாங்கள் மாற்றத்தின் அளவை மிகவும் கவனமாக கவனித்துக் கொண்டிருக்கிறோம்,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

ஓர் அமெரிக்க இராணுவ ஆத்திரமூட்டலின் அச்சுறுத்தலைப் பொறுத்த வரையில், அது வெறுமனே கற்பனையான ஏவுகணைகள் என்பது மட்டுமல்ல, மாறாக நிஜமான எண்ணெய் ஏற்றுமதிகளும் சம்பந்தப்பட்டுள்ளன. புளூம்பேர்க் செய்தி மேற்கோளிட்ட ஆதாரநபர்களின் கருத்துப்படி, கராக்காஸின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்புக்காக அதற்கு தேவையான எரிவாயு மற்றும் ஏனைய எரிபொருள் மூலப்பொருட்களை சுமார் 10 ஈரானிய டாங்கர் கப்பல்களின் ஒரு தொகுதி வெனிசுவேலாவுக்குக் கொண்டு சென்று கொண்டிருக்கிறது. அந்த டாங்கர் கப்பல்கள் திரும்ப வருகையில், உலக சந்தையில், அனேகமாக சீனாவுக்கு விற்பதற்காக வெனிசுவேலா பெட்ரோலிய பொருட்களை ஏற்றி வர உள்ளன.

இந்த சரக்கு தொகுதி மே மாதம் வெனிசுவேலாவுக்கு ஈரானிய எரிபொருளைக் கொண்டு வந்த ஐந்து டாங்கர் கப்பல்களை விட இரண்டு மடங்கு பெரியதாகும். அமெரிக்க அரசு இக்கப்பல்களின் மாலுமிகளுக்கு எதிராக தடையாணைகளை விதித்து பழிவாங்கும் நடவடிக்கை எடுத்தது.

வெனிசுவேலா பயணத்துடன் பிணைந்திருந்ததாக கூறி வாஷிங்டன் இன்னும் நான்கு எண்ணெய் கப்பல்களையும் வழிமறித்து, ஆழ்கடல்களில் அவற்றின் எண்ணெய் சரக்குகளை இறக்கி, அதன் பின்னர் அவற்றை 40 மில்லியன் டாலருக்கு விற்பனை செய்தது. அந்த கப்பல்களோ அல்லது அதிலிருந்த எண்ணெய்யோ அதற்கு சொந்தமானதில்லை என்று ஈரான் மறுத்தது. ஓமன், பிரிட்டன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் கப்பல் உரிமைகள் இந்த கடற்கொள்ளை நடவடிக்கைக்கு எதிராக சட்டவழக்கு தொடுத்துள்ளனர்.

போதை மருந்து கடத்தலைத் தடுக்கிறோம் என்ற சாக்குப்போக்கில், 1989 பனாமா படையெடுப்பிற்குப் பின்னர் அப்பிரதேசத்தில் மிகப்பெரியளவில் கடற்படைகளை நிலைநிறுத்தி உள்ள அமெரிக்க இராணுவம், சமீபத்திய ஈரானிய கப்பல்களுக்கு எதிராகவும் அதேபோன்ற நடவடிக்கையை நடத்தி இருந்தால், அது ஒரு தீவிரமான இராணுவ பதிலடி சுழற்சியைத் தூண்டிவிட்டிருக்கும்.

ட்ரம்ப் நிர்வாகம் மீண்டும் மீண்டும் குறிப்பிட்டிருப்பதைப் போல, வெனிசுவேலாவுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை சாத்தியக்கூறும் கூட "மேசையில்" முன்வைக்கப்பட்டுள்ளது.

செப்டம்பரில் வெனிசுவேலா எல்லையைச் சுற்றியுள்ள நாடுகள் அனைத்திற்கும் ஆத்திரமூட்டும் வகையில் மூன்று நாட்கள் சுற்றுபயணம் மேற்கொண்ட அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோ, புதிய தேசிய நாடாளுமன்றத்திற்கான ஞாயிற்றுக்கிழமை தேர்தல் சூழலில் ஜனாதிபதி நிக்கோலா மதுரோவின் அரசாங்கம் மீதான அவர் கண்டனங்களை அதிகரித்தார். அந்த தேர்தலில் படுமோசமாக 32 சதவீத வாக்களிப்பு விகிதத்திற்கு மத்தியில் மதுரோவின் வெனிசுவேலா ஐக்கிய சோசலிச கட்சி (PSUV) தலைமையிலான தேர்தல் கூட்டணி 67 சதவீத வெற்றியைக் கண்டது.

ஜனவரி 2019 இல் தன்னைத்தானே "இடைக்கால ஜனாதிபதியாக" அறிவித்து உடனடியாக வெனிசுவேலாவின் “சட்டப்பூர்வ” அரசாங்கமாக அங்கீகரிக்கப்பட்டிருந்த, அமெரிக்க கைப்பாவையும் தேசிய நாடாளுமன்றத்தின் முன்னாள் தலைவருமான ஜூவான் குவைடோ, அந்த தேர்தல்களில் அரசாங்கம் தில்லுமுல்லு செய்திருப்பதாக வாதிட்டு, அத்தேர்தல்களைப் புறக்கணித்திருந்தார். பழைய பாரம்பரிய வெனிசுவேலா ஆளும் கட்சிகள், COPEI மற்றும் Acción Democrática, உட்பட வலதுசாரி எதிர்ப்பின் ஏனைய பிரிவுகளும் வேட்பாளர்களை நிறுத்தின, அதில் தோராயமாக 18 சதவீத வாக்குகளை ஜெயித்தன.

வலதுசாரி எதிர்கட்சியின் பிளவு குவைடோ தலைமையிலான அமெரிக்க-ஆதரவு ஆட்சி மாற்ற நடவடிக்கையின் தோல்வியைப் பிரதிபலிக்கிறது, அது ஏப்ரல் 2019 இல் ஒரு கருக்கலைக்கப்பட்ட இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு சதியைக் கண்டுள்ளதுடன், இந்தாண்டு மே மாதம் ஒரு கூலிப்படை தாக்குதலின் தோல்வியையும் கண்டது.

மதுரோ அரசாங்கம் மக்கள் எதிர்ப்பை ஒடுக்கிய அதேவேளையில் முதலாளித்துவ நலன்களைப் பாதுகாத்து, அந்நாட்டின் ஆழ்ந்த பொருளாதார நெருக்கடிக்கு அது வழங்கிய விடையிறுப்பின் மீது தொழிலாள வர்க்கத்திற்குள் அதிகரித்து வரும் கோபத்தையே ஞாயிற்றுக்கிழமை தேர்தலில் பாரியளவிலான வாக்காளர்கள் வாக்களிக்க வராததில் இருந்து எடுத்துக்காட்டப்பட்டது. கோவிட்-19 தொற்றுநோயின் பாதிப்பு தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க தடையாணை முறைகளால் வெகுவாக தீவிரப்படுத்தப்பட்டுள்ள வெனிசுவேலா பொருளாதாரத்தின் சீரழிவு பாரிய வேலைவாய்ப்பின்மைக்கும் உயர் பணவீக்கத்திற்கும் இட்டுச் சென்றுள்ளது.

தடையாணைகளைத் தீவிரப்படுத்தவும் ஆட்சி மாற்றம் கொண்டு வர வெளிநாட்டு தலையீட்டுக்கும் குவைடா அழைப்புவிடுத்தன் மீது அதிகரித்தளவில் கோபமாக உள்ள வெனிசுவேலா மக்களிடையே அவருக்கு வெகு குறைவான ஆதரவே உள்ளது என்ற உண்மையை, அவரால் தேர்தலைப் புறக்கணித்ததன் மூலமாக மறைத்துவிட முடியவில்லை.

தேர்தலில் போட்டியிடுவதற்குப் பதிலாக, அமெரிக்க ஆதரவிலான குவைடோ, “மக்கள் கருத்து" என்ற அவரின் சொந்த போலி-தேர்தல் போட்டியைத் தொடுத்து வருகிறார், இது, இணைய வழியில் உள்ளடங்கலாக, மதுரோவைப் பதவியிலிருந்து நீக்குவதற்கு ஆதரவாகவும் "நமது ஜனநாயகத்தை மீட்க" “சர்வதேச உதவி" பெறுவதற்கு ஆதரவாகவும் வாக்களிக்குமாறு, வெனிசுவேலா மக்களைக் கேட்டுக் கொண்டிருந்தது.

வெனிசுவேலாவில் ஞாயிற்றுக்கிழமை வாக்கெடுப்பை "மோசடி மற்றும் வெட்கக்கேடு, அதுவொரு தேர்தலே அல்ல" என்றும், “வெனிசுவேலா ஜனநாயக தோல்வியை மறைப்பதற்கான முயற்சி என்பதற்குக் கூடுதலாக வேறொன்றுமில்லை" என்றும் கண்டித்து பொம்பியோ திங்கட்கிழமை ட்வீட்டரில் ஓர் அறிக்கை வெளியிட்டார்.

பகிரங்கமாகவே அமெரிக்க தேர்தல் முடிவுகளை மாற்றுவதற்கும் ஒரு ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கும் முயன்று வரும் ஒரு நிர்வாகத்தை தான் பொம்பியோ பிரதிநிதித்துவம் செய்கிறார் என்கின்ற நிலையில், அந்த அறிக்கை உடனடியாக கண்டனங்களையும் ஏளனங்களையும் ஈர்த்தது. அரசுத்துறையில் சுமூகமான பதவி மாற்றம் இருக்குமா என்று ஒரு செய்தியாளரின் கேள்விக்கு, பொம்பியோ அவரே சமீபத்தில், அங்கே "சுமூகமான இரண்டாம் ட்ரம்ப் நிர்வாக மாற்றம்" இருக்கும் என்று கூறி பதிலளித்தார்.

ட்ரம்ப் நிர்வாகத்தின் அச்சுறுத்தல்கள், ஆத்திரமூட்டல்கள் மற்றும் தடையாணைகளை, பெருநிறுவன ஊடகங்கள், ஈரான் அணுசக்தி உடன்படிக்கைக்குத் திரும்புதல் அல்லது சாத்தியமில்லை என்றால் சிக்கலான பதட்டங்களைக் குறைக்க வரவிருக்கும் பைடென் நிர்வாகத்திற்கு தொகுத்தளிக்கும் ஒரு முயற்சியாக விளங்கப்படுத்தி வருகின்றன.

ஆனால் இதை விட அதிகமான எரிச்சலூட்டும் பொருள்விளக்கமும் உள்ளது. ஒரு போரைத் தூண்டுவதானது, அமெரிக்க தேர்தல்களைச் செல்லாததாக்கும் ஒரு வழிவகையாக வீதிகளில் துருப்புகளை அழைப்பதற்கும் மற்றும் கிளர்ச்சி ஒடுக்கும் சட்டத்தைப் பயன்படுத்துவதற்குமான ட்ரம்பின் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களைச் செயலாக்குவதற்கான ஒரு சாக்குப்போக்கை வெள்ளை மாளிகைக்கு வழங்கும். ட்ரம்பின் பதவிக்காலம் முடிய இன்னும் ஆறு வாரங்கள் உள்ள நிலையில், இது ஒரு நிஜமான மற்றும் நிகழ்கால அபாயமாக நிற்கிறது.

ட்ரம்பின் ஆட்சிச்சதி திட்டத்தின் முடிவு என்னவாக இருந்தாலும், ஜனவரி 20 க்குப் பின்னர் வெள்ளை மாளிகையை யார் ஆக்கிரமித்தாலும், அமெரிக்க முதலாளித்துவம் மற்றும் உலக முதலாளித்துவத்தின் தீர்க்கவியலாத நெருக்கடியில் அதன் ஆதார அடித்தளத்தைக் கொண்டுள்ள போர் மற்றும் சர்வாதிகாரத்தை நோக்கிய முனைவு மட்டும் தொடர்ந்து தீவிரமடையும்.

Loading