ட்ரம்பின் இணைப்பு அச்சுறுத்தல்களுக்கு ஐரோப்பிய சக்திகள் மீள்ஆயுதமயமாக்கலுக்கான அழைப்புகளுடன் பதிலளிக்கின்றன
எதிர்கால அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப், கிரீன்லாந்து மற்றும் பனாமா கால்வாயை அமெரிக்காவுடன் இணைக்கப்போவதாக மீண்டும் மீண்டும் அறிவித்ததற்கு ஐரோப்பிய சக்திகள் மிகவும் ஆக்ரோஷமாக எதிர்வினையாற்றியுள்ளன. இது, அவர்கள் ட்ரம்பின் அச்சுறுத்தல்களை தீவிரமாக எடுத்துக்கொள்கிறார்கள் என்பதை காட்டுகிறது.